சனி, ஜூலை 07, 2012

மாற்றங்கள்!

நேற்றுப் பார்த்த ஆலமரம்,
காணாமல் போய்,
கட்டிடங்கள் நிற்கின்றன
இன்றெல்லாம்!

வீட்டுத் தோட்டம்,
சாந்து பூசி,
சொகுசுந்து நிற்கிறது சுகமாக,
இன்றெல்லாம்!

அப்பாவின் வியர்வை வாசம் மாறி,
வாசனைத் திரவியம்
என் நாசி ஏறிடுது 
இன்றெல்லாம்!

அம்மாவின் சேலை வாசம் கூட,
ரசாயனம் பூசி,
ஏங்க வைக்கிறது,
இன்றெல்லாம்!

காலம் மாறி,
காதல் திருமணங்கள்,
பெருகிவிட்டன
இன்றெல்லாம்!

எல்லாம் மாறினாலும்,
தொட்டதெற்கெல்லாம் சிணுங்கும்,
நான் மட்டும் மாறவில்லை,
மாறிடுவேனா?
பார்க்கலாம்!

4 கருத்துகள்:

 1. kaathal thirumanam murugar kaalathulaiyae irunthirukku.. kantharva thirumanam :D

  பதிலளிநீக்கு
 2. மாறிவரும் காலச்சூழலைப் பதிவு செய்யும் அருமையான கவிதை கண்மணி !
  நீங்களாவது மாறாமல் இருங்களேன் .......................

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் மாறாமல் இருக்கிறேன் :)

   நீக்கு