ஞாயிறு, ஜூலை 22, 2012

பிரிவு!

உன்னைப் பிரிந்தேன்,
உனக்காகவோ,
எனக்காகவோ அல்ல!
நமக்காக!
பிரிவின் ரேகை,
பெண்ணின் இதயத்தில்!
-----------------------

பிரிந்த நேரம் தான்,
பிரியம் கூடுது!
பிரிவின் ரணங்கள்,
புரிந்தவருக்கு மட்டும்!
-----------------------

குரல் கேட்க ஏங்குகிறேன்,
உயிர் வலிக்கும் நேரமெல்லாம்!
உறங்காமல்!
-----------------------

என் நீண்ட தூர,
ஏக்கப் பயணத்தில்,
உன்னை மட்டுமே,
ஏற்றிச் செல்கிறேன்!
ஊசலாடும் கூந்தல் கற்றையில்,
காற்றோடு உன்னையும்,
உணர்ந்து கொள்கிறேன்!
----------------------------

6 கருத்துகள்:

  1. பிரிவின் வலியை உணர்த்தும் ஆழமான கவிதை கண்மணி ! நிஜமாகவே அனுபவித்து
    எழுதியதைப் போல இருக்கிறது. ஒரு எழுத்தாளன் என்பவன், ஒரு உணர்வை
    அனுபவத்தில் காணவில்லை எனினும் அதை எழுத்தில் வடிக்கும் போது தன் சொந்த
    அனுபவம் போலவே எழுதுகிறான் என்பதற்கு தங்களின் இந்தக் கவிதை ஒரு உதாரணம் !

    பதிலளிநீக்கு