ஞாயிறு, ஜூலை 29, 2012

மகனே!


Photo: மகனே!

உன் மொழி அறியாத போதும்,
உணர்வுகளின் வழியாக,
வார்த்தைகள் பரிமாறினேன்!

எத்தனை ரணம் இருந்த போதும்,
உன் பூஞ்சிரிப்பில்,
சுக ராகம் சுவாசித்துக் கொண்டேன்!

என் கனவுகள் பலிக்காத போதும்,
உன் கனவுக்காய்,
ஒரு வீர சபதம் எடுத்தேன்!

உன் தும்மல், விம்மல் அது போதும்,
என் இதயம்,
விரிசல் விட்டு உடையக் கண்டேன்!

"அப்பா.." அந்த வார்த்தை போதும்,
அதற்காகத் தான்,
தவம் செய்து கிடக்கிறேன்!

சொல்லிடு சீக்கிரம்,
"அப்பா.."
அப்பா காத்துக் கிடக்கிறேன்!
உன் மொழி அறியாத போதும்,
உணர்வுகளின் வழியாக,
வார்த்தைகள் பரிமாறினேன்!

எத்தனை ரணம் இருந்த போதும்,
உன் பூஞ்சிரிப்பில்,
சுக ராகம் சுவாசித்துக் கொண்டேன்!

என் கனவுகள் பலிக்காத போதும்,
உன் கனவுக்காய்,
ஒரு வீர சபதம் எடுத்தேன்!

உன் தும்மல், விம்மல் அது போதும்,
என் இதயம்,
விரிசல் விட்டு உடையக் கண்டேன்!

"அப்பா.." அந்த வார்த்தை போதும்,
அதற்காகத் தான்,
தவம் செய்து கிடக்கிறேன்!

சொல்லிடு சீக்கிரம்,
"அப்பா...

அப்பா காத்துக் கிடக்கிறேன்!

(எனது நண்பரின் குழந்தைக்காக எழுதிய கவிதை)

4 கருத்துகள்:

  1. ஒரு பெண்ணாக இருந்து தந்தையின் பார்வையில் இக்கவிதையை எழுதி உள்ளீர்கள் போலத் தெரிகிறது ! உண்மையிலேயே பெரியாள் தான் நீங்கள் !

    பதிலளிநீக்கு
  2. அழகான உணர்வு பூர்வமான கவிதை, கண்மணி!
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு