முந்தைய பாகங்கள்:
ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9
பொங்கல் வச்சு முடிஞ்சது, அன்னிக்கு சாயந்தரமா நான் வெளில வாசல்ல உக்காந்து இருந்தேன். என்னவோ தெரியல அந்நேரம்னு பாத்து எனக்கு அண்ணாச்சிப் பழம் சாப்டனும் போல இருந்தது. எப்பவும் எங்க பக்கத்துத் தெரு கடையில அண்ணாச்சிப் பழம் இருக்கும். அந்தக் கடைக்குப் போனேன்.
எந்நேரம், அங்க அந்தக் கடிநாயும் இருந்தான். என்னப் பாத்ததும் சிரிச்சான். எனக்கு கோவமா வந்தது. ஒரு மொற மொறச்சுட்டு திரும்பி, கடைக்காரர் கிட்ட கேட்டேன், "அண்ணே, அண்ணாச்சிப் பழம் ரெண்டு கீத்து தாங்க!"
"அட.. இப்போதாம்மா வித்து முடிஞ்சுது, நாளைக்கு வா..", கடைக்காரர் சொன்னது தான் தாமதம், "என்ன ஓவு.. (ஓவம்மாவ செல்லமாக் கூப்பிட்றானாம்) அண்ணாச்சிப் பழம் தான, நான் வாங்கியாறேன், நீ வீட்டுக்குப் போ, நான் கொண்டு வாறேன்..", பாசமாத் தான் சொன்னான்.
"அதெல்லாம் ஒன்னும் வேணாம், நான் நாளைக்கு வந்து வாங்கிப்பேன்..", சொல்லிட்டு வேகமா நடையக் கட்டினேன்.
வீட்டுக்குப் போய் நெனச்சேன், "எப்படியும் இவன் அண்ணாச்சிப் பழம் கூட கூடையா வாங்கியாந்திருவான்னு.."
நேரம் போய்க்கிட்டே இருந்தது, ஆனா அவனக் காணோம்....
"சரி, நான் கோவமாப் பேசுனதால வாங்கப் போகல போலனு", நெனச்சேன்.
ஒரு ஒம்போது மணி இருக்கும், கூட கூடையா அண்ணாச்சிப் பழம் வந்தது...
பழத்தப் பாத்ததும் எனக்கு அவ்வளவு சந்தோசமா இருந்தது!
பழம் கொண்டு வந்தது அவனில்ல... அவன் வரல... செய்தி தான் வந்துச்சு., அவனோட நண்பன் தான் கொண்டு வந்தான் அந்தப் பழத்த எல்லாம், "ஓவம்மா.. ஒனக்கு அண்ணாச்சிப் பழம் வாங்கப் போனப்போ சேகர் (கடிநாய்) ஒரு தண்ணி வண்டில மோதி, அடிபட்டுடான், தர்மாஸ்பத்திரீல ( அரசு மருத்துவ மனை ) சேத்துருக்கு."
"என்ன சொல்ற.. எதும் பெரிய அடியா...?? உசுருக்கு ஒன்னும் இல்லைல..?", பதரறுனேன் நானு.
"ஒன்னும் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க, வா உன்னப் பாக்கனும்னு நெனப்பான் அவன்.."
உடனே கெளம்புனேன் அவனோட, கண்ணீரோட...
அந்த நாள இன்னைக்கு நெனச்சாலும் எனக்கு கண்ணுல ஈரம் கசியுது..
நல்லவேளையா.. கடிநாய்க்கு உசுருக்கு ஒன்னும் ஆகல, ஆனா.. அவன் கால் தான் போயிருச்சு.
அதுக்கு அப்பறமா.. எனக்கு அவன தான் கட்டிக்கனும்னு ஆழம தோனுச்சு.. என்னால தான இப்படி ஆய்டுச்சு அவனுக்குனு நான் அழுகாத ராத்திரியும் இல்ல, பொலம்பாத பகலும் இல்ல...
------------
ஓவம்மா தொடரும்!
ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9
பொங்கல் வச்சு முடிஞ்சது, அன்னிக்கு சாயந்தரமா நான் வெளில வாசல்ல உக்காந்து இருந்தேன். என்னவோ தெரியல அந்நேரம்னு பாத்து எனக்கு அண்ணாச்சிப் பழம் சாப்டனும் போல இருந்தது. எப்பவும் எங்க பக்கத்துத் தெரு கடையில அண்ணாச்சிப் பழம் இருக்கும். அந்தக் கடைக்குப் போனேன்.
எந்நேரம், அங்க அந்தக் கடிநாயும் இருந்தான். என்னப் பாத்ததும் சிரிச்சான். எனக்கு கோவமா வந்தது. ஒரு மொற மொறச்சுட்டு திரும்பி, கடைக்காரர் கிட்ட கேட்டேன், "அண்ணே, அண்ணாச்சிப் பழம் ரெண்டு கீத்து தாங்க!"
"அதெல்லாம் ஒன்னும் வேணாம், நான் நாளைக்கு வந்து வாங்கிப்பேன்..", சொல்லிட்டு வேகமா நடையக் கட்டினேன்.
வீட்டுக்குப் போய் நெனச்சேன், "எப்படியும் இவன் அண்ணாச்சிப் பழம் கூட கூடையா வாங்கியாந்திருவான்னு.."
நேரம் போய்க்கிட்டே இருந்தது, ஆனா அவனக் காணோம்....
"சரி, நான் கோவமாப் பேசுனதால வாங்கப் போகல போலனு", நெனச்சேன்.
ஒரு ஒம்போது மணி இருக்கும், கூட கூடையா அண்ணாச்சிப் பழம் வந்தது...
பழத்தப் பாத்ததும் எனக்கு அவ்வளவு சந்தோசமா இருந்தது!
பழம் கொண்டு வந்தது அவனில்ல... அவன் வரல... செய்தி தான் வந்துச்சு., அவனோட நண்பன் தான் கொண்டு வந்தான் அந்தப் பழத்த எல்லாம், "ஓவம்மா.. ஒனக்கு அண்ணாச்சிப் பழம் வாங்கப் போனப்போ சேகர் (கடிநாய்) ஒரு தண்ணி வண்டில மோதி, அடிபட்டுடான், தர்மாஸ்பத்திரீல ( அரசு மருத்துவ மனை ) சேத்துருக்கு."
"என்ன சொல்ற.. எதும் பெரிய அடியா...?? உசுருக்கு ஒன்னும் இல்லைல..?", பதரறுனேன் நானு.
"ஒன்னும் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க, வா உன்னப் பாக்கனும்னு நெனப்பான் அவன்.."
உடனே கெளம்புனேன் அவனோட, கண்ணீரோட...
அந்த நாள இன்னைக்கு நெனச்சாலும் எனக்கு கண்ணுல ஈரம் கசியுது..
நல்லவேளையா.. கடிநாய்க்கு உசுருக்கு ஒன்னும் ஆகல, ஆனா.. அவன் கால் தான் போயிருச்சு.
அதுக்கு அப்பறமா.. எனக்கு அவன தான் கட்டிக்கனும்னு ஆழம தோனுச்சு.. என்னால தான இப்படி ஆய்டுச்சு அவனுக்குனு நான் அழுகாத ராத்திரியும் இல்ல, பொலம்பாத பகலும் இல்ல...
------------
ஓவம்மா தொடரும்!
கருத்துகள்
கருத்துரையிடுக