ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

ஓவம்மா#9 (தொடர்கதை)

முந்தைய பாகங்கள்:

ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5 | 6 | 7 | 8

சொல்லுமா.. ரெண்டு பேருல யாரப் புடிச்சிருக்கு?

எனக்கு எல்லாரும் கேக்கக் கேக்க, என்ன சொல்லனே தெரியல.. என்னால எதுவும் முடிவு பண்ண முடியல. ரெண்டு பேர் மேலயும் எந்த அபிப்ராயமும் இல்ல எனக்கு...

இல்ல.. எனக்கு பிடிக்கல.. அழுக ஆரம்பிச்சு இருந்தேன் நான்.

எல்லாரும் என்ன சொல்றதுன்னு தெரியாம, "சரிப்பா.., அந்தப் புள்ளையையும் இப்படிப் படுத்துனா பாவம், என்ன சொல்லும்.. கொஞ்ச நாள் போகட்டும், முடிவு செஞ்சுக்கலாம்..", கொஞ்ச நாளைக்கு அந்தப் பேச்ச ஒத்தி வச்சாங்க..

எனக்கு அன்னைல இருந்து, ரெண்டு பேர் தொல்ல. ரெண்டு பேருக்கும் நடுவுல நான் மாட்டிக்கிட்டு முழிச்சேன்.

ஒரு நாள் ரெண்டு பேரும் சண்ட போடா ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு அப்போ ரெண்டு பேர் மேலயும் வெறுப்பா இருந்தது. கோவமா வந்தது.. "இங்க பாருங்க, எனக்கு உங்க ரெண்டு பேர் மேலயும் வெறுப்பா இருக்குன்னு" கத்தணும் போல இருந்தது. கோவமா வந்தது.

ஒரு நிமிசம் கூட தனியா விடாம, என்ன தொல்ல செஞ்சுகிட்டே இருந்தா அப்படி தான இருக்கும்? கோவமா வந்தது. ஆனா என்கூட இருந்த பிள்ளைங்க, என்ன ஆளுக்கு ஒன்ன சொல்லி, ஏத்தி விட்டாங்க. "ஏய் ஓவம்மா.., அவனுங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு பந்தயம் வை, யாரு பந்தயத்துல முன்ன வரான்களோ அவங்கள கட்டிக்கோ..! என்ன புள்ள? "

எனக்கும் அப்டி செய்யலாமானு கூட தோனுச்சு.. ஆனாலும், ஒரு பக்கம், மனசு கேக்கல..

எங்க ஊர்ல பொங்கல் வந்தது. அப்பாடியோ.. என்னால தாங்க முடியல.. அந்த அளவுக்கு ரெண்டு பேரும் என்ன கவனிச்சாங்க. "பூ வாங்கித் தரதும், புதுத் துணி, பலகாரம், வளையலு.." இப்படி என்ன வாங்கித் தந்து படுத்திட்டாங்க.

அவ்வளவு சந்தோசமா இருந்தோம்.. எங்க அத்த, மாமா, நானு.. இவனுங்களும் ஒன்னொன்ன வாங்கிக் கொண்டு வந்து குடுத்துட்டு இருந்தானுங்க.

எங்க வீட்ல இப்டி ரெண்டு பெரும் செய்றது புடிக்கல, சொல்லிப் பாத்தாங்க.. கேக்கல.. அப்புறம் விட்டுட்டாங்க.

ஆனா.. அன்னிக்கு அப்டி ஒரு காரியம் நடக்கும்னு நான் நெனைக்கவே இல்ல..
முழு நெலவா ஆரம்பிச்சது அந்த நாளோட சந்தோசம், ஆனா அப்படி இருட்டுல முடியும்னு நான் நெனைக்கல...

என் வாழ்க்கைல அப்படி ஒரு நாள், அவ்வளவு சோகமான நாள் கெடையாது அதுக்கு முன்னாடியும் சரி, அதுக்கு அடுத்தும் சரி.

கடவுளே, ஏன் இப்படி செஞ்சனு நான் பொலம்பாத நாள் கெடையாது இன்னைக்கு வரைக்கும்.

------------------------------------------------------

ஓவம்மா கதை தொடரும் அடுத்த பகுதியில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக