அந்தக் குரலில் சோகம்!
நடந்து நடந்து
தேய்ந்த கால்களுக்கும்,
தேடித் தேடி
சிவந்த கண்களுக்கும்,
ஒன்றும் புலப்படவில்லை
அந்தத் தகிக்கும் பாலையில்!
காதுகளில் அந்தக் குரல் மட்டும்,
மீண்டும் மீண்டும்,
கேட்டுக்கொண்டிருக்க,
அரண்டு தான் போய் இருந்தேன்!
உள் நாக்கு மீண்டும்,
"தண்ணீர் தண்ணீர்"
போராட்டம் தொடங்க,
செத்துக் கொண்டு நான் இருந்தேன்!
நடக்கத் திறனில்லை,
பார்க்க ஒளியில்லை,
சரிந்து கிடந்தேன்!
அந்த சோகத்தின் சத்தம்,
அதுவே,
நான் உயிரோடிருப்பதன் அர்த்தம்!
அந்த ஓலம்,
காதோரம் என் சாவை ஓதிக்கொண்டிருக்க,
விழுந்தாள் அவள் என் மீது,
நனைத்தாள் என் நாவு!
மழையாய்..!
மரண ஓலம் அடங்கி,
விழித்த என் கண்ணோரம்,
புன்னகையோடு நின்றவள்,
உயிர் காத்து நின்றவள்,
"அம்மா!"
பாலையோ சோலையா,
எனைக் காக்கும்,
மழையவள் அம்மா!
Nice...நல்லா இருக்கு
பதிலளிநீக்கு