சனி, ஆகஸ்ட் 11, 2012

தொழில் தர்மம்!


உங்களுக்குத் தெரியுமா "தொழில் தர்மம்" ???? தெரிந்திருக்க வேண்டும் கண்டிப்பாக.  நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருப்பினும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் தொழில் தர்மம்.

சரி, இந்தத் தொழில் தர்மம் என்றால் என்ன? ஏதோ, எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் கேளுங்கள் :)
 • நாம்  வேலை செய்யும் இடத்தில் மற்றவருடன் அன்பாக நடந்து கொள்ளுதல் 
 • நமது  வேலையில் நேரம் தவறாமை
 • நாம்  செய்யும் வேலையில் ஈடுபாடோடு இருத்தல்
 • ஒரு நிறுவனம் வைத்து நடத்துகிறோம் என்றால், "போலியாக" விளம்பரம் செய்யாது இருத்தல்.
 • உண்மை, நேர்மை, ஒழுக்கம் இது போன்று அனைத்தையும் கடைபிடித்தல்.
இப்படி பெரிய பட்டியல் சொல்லிக் கொண்டே போகலாம்... இதெல்லாம் அடிப்படையாக ஒரு நல்லவரிடம் இருக்க வேண்டிய குணங்கள் தானே? உங்களிடம் இவை அனைத்தும் இருக்கும் என்று நம்புகிறேன்.

சரி, நான் இன்னும் விசயத்துக்கே வரவில்லை. நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவி, எனக்கு,"ப்ரோபஸ்னல் எதிக்ஸ் அண்ட் ஹ்யூமன் வேல்யூஸ்" ("Professional Ethics & Human Values") என்று ஒரு பாடம் உள்ளது. அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? 

சொல்லுகிறேன் அந்த சோகக் கதையை. இந்தப் பாடத்தில், "எப்படித் தொழில் செய்யும் இடத்தில் (அல்லது அலுவலகத்தில்) மற்றவரிடம் அன்பாக, நேர்மையாக, ஈடுபாடோடு .. (இப்படி நிறைய சொல்லலாம்) நடந்து கொள்ள வேண்டும்", என்று "சொல்லித்" தருகிறார்கள்!

அட, இதிலென்ன சோகம்? நல்லது தானே சொல்லித் தருகிறார்கள் என்று சொல்கிறீர்களா? 
நல்லது தான்... ஆனால், இதனால், இப்படிக் கற்பிப்பதால் எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு. இதையும் நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும் என்று "மனப்பாடம்" செய்யச் சொல்கிறார்கள்! :( :( :(  

நல்லன சிலவும் சொல்லத் தான் செய்கிறார்கள், ஆனால், இது கற்பிக்கக் கூடிய ஒரு விசயமா?

கல்லூரி சென்ற பின்பு தெரிந்து கொள்ள வேண்டியவையா இவையெல்லாம்??? சிறு வயது முதலே நம்மோடு சேர்ந்து இவை வளர வேண்டும் அல்லவா? கல்லூரி வந்த பின்பு இதை சொல்லிக் கொடுத்து யாரும் மாற்றம் அடைவது போல எனக்குத் தெரியவில்லை.

மாறாக, "அன்பு என்றால் என்ன?" "தர்மம் என்றால் என்ன?" போன்ற  கேள்விகளுக்கு பதிலை அனைவரும் "மனப்பாடம்" செய்வதைப் பார்க்கையில், உண்மையில் வலிக்குது மனசு :( :'( 

இந்தப் பாடம் முன்பெல்லாம் கல்லூரியில் கற்பிக்கப்படவில்லையாம். இப்பொழுதெல்லாம் "அன்பு, பண்பு, நேர்மை, ஈடுபாடு, மக்களை பாதிக்காமல் வேலை செய்வது (எந்தத் தொழிலாக இருப்பினும், மக்கள் சார்ந்தே இருக்கும், நமது தொழிலால் மக்களுக்கு நல்லது நடக்காவிடினும் தீமை செய்யக் கூடாது அல்லவா?) போன்றவை குறைந்து வருகின்றனவாம். தொழில் செய்வோர் சுயநலத்தோடு செயல்பட ஆரம்பித்துவிட்டார்களாம். அதனால் தான் இந்தப் பாடத்தை இணைத்துள்ளார்களாம்!!!

ஆயினும், இது பயனளிக்கவில்லை என்று தான் நான் சொல்வேன் :( 
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே இதை சொல்லிக் கொடுங்கள். அது தான் சரியான முறையாக இருக்க முடியும்.

ஒரு ஏழு எட்டாவது படிக்கும் பொழுதே, தொழில் தர்மம் சொல்லிக் கொடுங்கள். கல்லூரியில் தொழில்நுட்பம் மட்டும் பயிலட்டும் அவர்களாவது!
கல்லூரிக்குச் சென்ற பிறகு "தர்மம் என்றால் என்ன?" என்று மனப்பாடம் செய்யும் நிலை மாறட்டும்! :( :(

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
தர்மம் மறுபடி வெல்லும்????!"

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இதற்கு?

---------

கண்மணி அன்போடு!

1 கருத்து:

 1. :) உண்மை தான் !நம் கல்வி முறையில் நாம் பல வருடங்களை தேவையற்ற விசயங்களை கற்று (மனப்பாடம்) செய்து வீண் செய்துள்ளோம் (பின் மறந்து விட்டோம்)ஏட்டுச்சுரைக்காயாக மதிப்பெண் பெற மட்டும் தான் படிப்பு என்ற நிலை மாற வேண்டும்.
  "கற்க கசடற" என்று வள்ளுவன் சொல்லியிருக்கிறான்.."கற்பிக்க கசடற" என்று கற்பிப்பவர்களுக்கு சொல்வோம்!
  //தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
  தர்மம் மறுபடி வெல்லும்????!//

  நிச்சயம் வெல்லும் என்று நம்புவோம்...

  பதிலளிநீக்கு