முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சக்தி தரும் உடைகள்!


என்னது? சக்தி தரும் உடைகளா? ஆமா, சக்தி தரும் உடைகள்! உடனே இந்த உடைகளை அணிந்து கொண்டாள், "சூப்பர் மேன்", "ஸ்பைடர் மேன் ",  போல சக்தி கிடைக்குமான்னு கேக்காதிங்க!

இது "வேற" மாதிரியான சக்தி :) :) அதென்ன வேற மாதிரி? சொல்றேன் கேளுங்க :)

இப்போ நாம எல்லாரும் எந்த மாதிரி உடை அணிய விரும்பறோம்? அட, கண்டிப்பா அழகா தான்! இதிலென்ன சந்தேகம்?

சரி, இப்பொழுது நாம் உடை சார்ந்து சில விசயங்களை இங்கே பேசப் போகிறோம், பேசலாம்.

 தொழில் சார்ந்த ஒரு சந்திப்பிர்க்குச் செல்லும் பொழுது எப்படிச் செல்வீர்கள் ? நல்ல "கோட் - சூட்" போட்டு?

( இது நம் கலாச்சாரம் இல்லை தான், ஆனாலும் இன்று பெரும்பாலானோர் இதை தான் பின்பற்றுகிறார்கள்)

அப்படித் தான் செல்வோம். ஆனால் அதே உடையை நாம் வெளியே குடும்பத்தோடு கோவிலுக்குச் செல்லும் போது அணிந்து செல்வதில்லை. சரிதானே? சரி அதென்ன சக்தி தரும் உடை? என்று தானே கேட்கிறீர்கள். இதோ சொல்கிறேன்.

இது ஒன்றும் விசேசமான உடை அல்ல! நாம் தினமும் அணியும் உடை தான். அதை எப்படி அணிகிறோம் என்பதைப் பொறுத்து தான் அது நமக்கு சக்தி அளிக்கும்!

சில உடை அணியும் விதம் பற்றிப் பார்ப்போம்!

லோ ஹிப் ஜீன்ஸ்: 

லோ ஹிப் - அதாவது சரியாக கால் சட்டையை இடுப்பில் அணியாமல், சற்று இறக்கி அணிவது!

இது தான் இன்று பெரும்பாலாக கல்லூரி மாணவர்களின் கலாச்சாரம். மாணவர்கள், மாணவிகள் என்று அனைவரும் "லோ ஹிப் " ஜீன்ஸ் அணிகிறார்கள்!

இது எவ்வளவு மோசமான பழக்கம் என்பதை அறியாமலே இதை "பேஷன்" என்ற பெயரில் செய்து வருகிறார்கள்! :(

அமெரிக்காவில் உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகள் தான் அப்படி "லோ ஹிப்" ஜீன் அணிவார்களாம்! காரணம்? நீண்ட நாட்களாக சிறையிலேயே இருப்பதால், பெண்களை ஈர்ப்பதற்காக அப்படி அணிவார்களாம்! புரிகிறதல்லவா? இதற்கு மேல் தெளிவாக விவரிக்கத் தெரியவில்லை எனக்கு!

இது தெரியாமல், நம்ம ஊர் பெண்களும், பசங்களும் இப்படி அணிந்து திரிவது, ச்ச சொல்லவே முடியல!

இந்த விசயம் என் கல்லூரியில், ஒரு பேராசிரியர் சொன்னார்! இனியாவது இப்படி அணியாதீர்கள் என்று அறிவுரை சொன்னார், அப்படி அணிபவர்களைப் பார்த்து. அவர்களும், உண்மை தெரிந்ததால், வெட்கப் பட்டு, இனி அணிய மாட்டோம் என்றார்கள்.

நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பிள்ளைகள் இப்படி அணிந்தால், எடுத்துச் சொல்லுங்கள். உண்மை தெரிந்தால் அணியமாட்டார்கள்! (நம்புகிறேன்)

இது போன்று உடை அணிவது, சக்தி தராது உங்களுக்கு எந்த விதத்திலும்!

சுடிதார், சேலை!

இது இன்றைய காலத்தில் பெண்களுக்கு ஏற்ற சௌகரியமான உடையாக சொல்லப் படுகின்றன. சேலையில் அத்தனை சௌகரியம் இல்லை என்றாலும், சுடிதார் சௌகரியமான உடையாகக் கருதப்படுகிறது!

ஆனால், இவற்றையும் அணியும் விதத்தில் அணிந்தால் தான் சக்தி  தரும்.

சுடிதார் அணியும் போது "துப்பட்டா" அணிவது சரியாக அணிய வேண்டும்! சேலையும் அப்படித் தான், கட்டும் விதமென்று ஒன்று உள்ளது.

சரியாக உடுத்தவில்லை என்றால், இவற்றை சரி செய்வதிலேயே உங்களது நேரம் செலவாகிவிடும்! உங்களது வேலையில் கவனம் செலுத்த இயலாது!

ஒரு சூழ்நிலை சொன்னால் சரியாக விளங்கும் உங்களுக்கு:

இப்போ ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள், பரிச்சை எழுதிக் கொண்டிருக்கிறாள் பரிச்சை ஹாலில் . சுடிதார் அணிதிருக்கிறாள். ஆனால், காலையில் அவசரமாகக் கிளம்பியதால், துப்பாடாவை சரியாக அணியவில்லை!

பரிச்சை அறையில் மேற்பார்வை பார்க்க வந்த ஆசிரியர் , ஆண் என்று வைத்துக் கொள்வோம்! அந்த ஆசிரியர் இவள் அருகில் வரும் நேரம் எல்லாம், இயல்பாகவே இவளுக்கு "தான் உடை சரியாக உள்ளதா" என்று பார்த்து அதை சரி செய்யத் தோன்றும். தோன்றும் தானே இயல்பாகவே? அந்த ஆசிரியர் வயதான நல்ல ஆசிரியராகவே இருக்கட்டும், அப்படித் தான் தோன்றும் அந்தப் பெண்ணிற்கு. உடையை சரி செய்வதிலேயே பாதி நேரம் செலவாகி விடும்! பரிச்சை எழுதின மாதிரி தான், அதன் பிறகு! ஆனால், அந்தப் பெண் உடையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் பிரச்சனையை இல்லை தான். ( விலகி இருந்தால் இருக்கட்டும் என்று சிலர் இருப்பதுண்டு)

இன்னொரு சூழல்!

ஒரு ஆசிரியை, சேலை அணிந்துள்ளார். வகுப்பில் முன்னே நின்று பாடம் சொல்லையில், அடிக்கடி சேலையைச் சரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்! மாணவர்களது கண்கள் அவர் சேலையைத் தான் கவனிக்குமே தவிர பாடத்தை அல்ல! அவர் சரி செய்யாவிட்டால் கூட பாடத்தை மட்டும் கவனித்திருப்பார்கள்! இதனால் தான் பல கல்லூரிகளில் ஆசிரியைகளை "ஓவர் கோட்" அணியச் சொல்கிறார்கள் இன்றெல்லாம்!

இதனால் என்ன சொல்ல வருகிறேன் என்றால்! நீங்கள் உங்களது உடையை அழகாக அணிவது முக்கியம் அல்ல! சௌகரியமாக அணிவது தான் முக்கியம்.

இறுக்கமான உடைகள்!

இறுக்கமாக சிலர் உடை அணிவார்கள். இந்த வகையான உடைகளும் உங்களுக்கு சக்தி தரப்போவதில்லை!

உட்காரும் பொழுது, நடக்கும் பொழுது, குனியும் பொழுது .. "எங்கடா.. கிளிஞ்சிடுமோ..!!!" என்று பயத்தோடு தான் இருக்க வேண்டும்! :D :D

உண்மை தானே?

சரி, சக்தி தரும் உடை, பற்றிப் பார்ப்போம்!

சக்தி தரும் உடை - பவர் ட்ரெஸ்ஸிங்  என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அப்படி என்றால் என்ன?

  • உங்களது வேலையின் நடுவே நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்களது கவனத்தையும், பிறரது கவனத்தையும் ஈர்க்கக் கூடாது, சிதைக்கக் கூடாது!
  • நீங்கள் அணிந்திருக்கும் உடை கண்களை உறுத்தாத நிறத்தில், தூய்மையாக இருத்தல் வேண்டும்.
  • உங்களது தன்னம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
  • மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல், தொள தொளவென்றும் இல்லாமல், சரியான அளவாக இருக்க வேண்டும்.
  • அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றில்லை. சரியான விலையில் உங்களுக்கு ஏற்றார் போல இருக்க வேண்டும்!
"தன்னம்பிக்கை, சௌகரியம்" இவை தான் இந்த உடைகள் உங்களுக்குத் தரும் சக்தி!

உடையையும் சார்ந்து தான் உள்ளது உங்களது முன்னேற்றம்! என்ன சரி தானே!


----

கண்மணி அன்போடு!

கருத்துகள்

  1. நல்ல பதிவு கண்மணி...உடைகளை சரியானபடி அணிந்தால் அதை அணிபவருக்கும் அவர் அருகில் இருப்பவர்களுக்கும் நல்லது.பவர் ட்ரெஸ்ஸிங்க்!வகுப்பில் ஆசிரியர் சேலையை சரி செய்து கொள்வது பற்றி பதிவில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
    இது பற்றி "தமிழிசை சௌந்தரபாண்டியன்" எனும் பெண் பேச்சாளர்: "ஆசிரியை அணிந்து வருகிற உடை அலங்காரமாக,கவர்ச்சியாக இருந்தால் யாரும் பாடத்தை கவனிக்க மாட்டார்கள் மேடத்தை தான் கவனிப்பார்கள்" என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

    பதிலளிநீக்கு
  2. தம்பி லீவ் லெட்டர் தரலையா..?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்