இன்று உலகில் எல்லோருக்கும் ஒரு புது மோகம் உருவாகி வருகிறது, என்ன அது?
தங்களது சம்பளத்தை "டாலரில்" சொல்ல வேண்டும் என்பதே அது.

சரி டாலர் நகரம் என்றால் எது? அமேரிக்காவா? இப்படி தான் பெரும்பாலானோர்
கேட்பார்கள். அருகில் இருப்பதன் அருமை எப்போதுமே தெரியாது என்பார்களே? அது உண்மையா? உண்மை
தான்.
இங்கு தமிழகத்தில் ஏற்றுமதியில் பெரிதும் சிறந்து விளங்கும் திருப்பூரைத் தான்
நான் டாலர் நகரம் என்று சொல்கிறேன்.
சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் இங்கு திருப்பூரைப் பற்றி பேசப்
போவதில்லை!
எனக்கு வாழ்வில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட, தமிழ் ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன
என்றால், திருப்பூரில் நான் படித்த பள்ளியில் இருந்த எனது தமிழ்
ஆசிரியர் என்பேன்.
அப்போ, இந்தப் பதிவு அந்த ஆசிரியர் பற்றியதா? இல்லை!
டாலர் நகரம்! இது, ஒரு புத்தகம்!
என்னை பெரிதும் ஊக்குவித்து வரும் ஒரு உயர்ந்த மனிதரின் புத்தகம்!
திருப்பூரில் இன்று நூறு கோடி வருவாய் ஈட்டும் ஒரு பெரும் நிறுவனத்தில்
மேலாளராக இவர் இருக்கிறார். இந்த நிலையை அடைய அவர் சிந்திய வியர்வைத்
துளிகள், அந்தத் துளிகளை அவர் சேமித்து வைத்து இருந்திருக்கிறார்!
ஆம், உண்மை, அந்த வியர்வை தன்னை, எழுத்தாக சேமித்து வைத்திருந்திருக்கிறார்.
அது தான் இந்தப் புத்தகம்.
திருப்பூரின் தொழில், வாழ்க்கை இப்படி திருப்பூரைப் பற்றி தெளிவாக அறிய
நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தே தீர வேண்டும்.
இந்தப் புத்தக வெளியீட்டு விழா, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடக்க
இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ளுங்கள், கலந்து கொள்வதற்கு இயலவில்லையா?
புத்தகம் வாங்கிப் படியுங்கள். இரண்டையும் செய்தால் சிறப்பு!
நிகழ்ச்சி விபரங்கள்:
நாள்: 27/1/13 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 9.30
மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்: டி.ஆர்.ஜி. அரங்கம்,
585, பல்லடம்
சாலை,
திருப்பூர்.
போக்குவரத்து குறித்த விபரங்களுக்கு நிகழ்காலம் – சிவா அவர்களைத் தொடர்பு
கொள்ளுங்கள்! அலைபேசி எண்: 97
900 36 233
என்ன
கிளம்புகிறீர்களா? விழாவிற்கு? தங்களது பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி. சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்கு