"நல்ல மனைவியாக இருப்பது எப்படி?" இந்தத் தலைப்பில் தான் இந்தத் தொடர் பதிவை எழுதத் தொடங்கினேன். ஆனால், அது பொருத்தமாக எனக்குத் தோன்றவில்லை இப்போது, அதனால், தலைப்பை மாற்றிக் கொள்கிறேன், " அப்பா -அம்மா - மகளின் பார்வையில்!" என்று. உங்களுக்கு எதுவும் வருத்தம் இல்லை தானே, இந்தத் தலைப்பு மாற்றத்தில்? முந்தைய பதிவுகள்: அப்பா - அம்மா - மகளின் பார்வையில்! #1 #2 இது வரை ஐம்பது முத்துக்களில் ஐந்தே ஐந்து முத்துகளைத் தான் உங்களுக்குக் காட்டினேன். இதோ இன்று அடுத்த ஐந்து முத்துக்களைப் பார்க்கலாம்! முத்து ஆறு: ஒரு காரியத்தைக் கணவன் சாதித்து முடித்தவுடன் மனைவி அதைப் பாராட்டும் கையோடு அடுத்த காரியத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும். அதனை அடையத் தட்டிக் கொடுக்க வேண்டும். அது நிறைவேறியதும் அடுத்தது. அதன் பிறகு இன்னொன்று. இப்படியே அவனை ஆற்றுப் படுத்த வேண்டும். உண்மை அப்பாவின் வெற்றியில் சாதனையில் அம்மாவின் பெரும்பங்கு இது தான். முன்பு நான் குறிப்பிட்டது போலவே இங்கும் நாம் அம்மாவும் வேலைக்குப் போகும் சூழல், அல்லது கைத்தொழில் செய்யும் சூழல் போன்றவற்ற...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!