சனி, பிப்ரவரி 09, 2013

அனுபவக் கல்வி!கல்லூரியில், கல்விக் கூடங்களில்,
கற்றது கல்வியல்ல!
கனவுகளோடு கொஞ்சம்,
கண்ணீரும் வியர்வையும்,
கச்சிதமாய்க் கலந்து,
காலையும் மாலையும்,
குடும்பத்தைப் பிரிந்து,
எங்கோ உயரத்தில் இருக்கும்,
"எட்டுமோ, எட்டாதோ?"
எப்போதும் கண்ணாமூச்சி காட்டும்,
எளிதாய் எப்போதும் கிடைக்காத,
அந்த மூன்று எழுத்தை அடைய,
இப்போது நாம் செய்யும்,
இந்தப் பயணத்தின் இறுதியில்,
இறுதியாய் கிடைக்கும்,
அந்தப் புன்னகை, 
அதை அடைய நாம் வகுத்த,
அந்த அழகான நுணுக்கங்கள்,
அதுவே, கல்வி,
நாமாய் க(பெ)ற்றெடுத்த,
அனுபவக் கல்வி!

2 கருத்துகள்:

  1. வாழ்க்கைக்கு உதவும் கல்வி...

    பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பாக கல்லூரி வாழ்க்கை தரும் அனுபவக்கல்வி நம் வாழ்க்கையின் இறுதி வரை கூடவே பயணம் செய்யும்

    பதிலளிநீக்கு