சில நேரம் சொல்ல நினைத்து,
![]() |
sad |
பல நேரம் மூடி மறைத்த,
உண்மைகள் என்னோடே
புதைந்து போகட்டும்!
வெளியே சொல்லி,
வேதனை அடைவதிலும்,
உள்ளே வைத்து,
வாடிவிடுகிறேன்,
என்னுடைய வேதனை,
இப்படியே போகட்டும்!
பெருமையாகச் சொல்ல,
பெரும் சாதனைகள் அல்ல,
பொறுமி அழக்கூடிய,
பெரும் வேதனைகள்,
என் பாவங்கள் எல்லாம்,
இப்படியே போகட்டும்!
இதோ அவள் சொல்கிறாள்,
இன்று ஒருத்தி சொல்கிறாள்,
அவள் கதைகள் என்று,
எதையோ எதை எதையோ!
அந்தக் கதைகள் அத்தனையும்,
அவள் பார்வையில் இன்பம்!
ஆனால், எனக்கோ?
ஏடாகூடம்!
வேண்டாம் வேண்டாம்!
யாரிடமும் சொல்ல வேண்டாம்!
என் ரகசியங்கள்,
எனக்கு மட்டும் தெரிந்த,
என் ரகசியங்கள்,
சில நேரம் சொல்ல நினைத்து,
பல நேரம் மூடி மறைத்த,
உண்மைகள் என்னோடே
புதைந்து போகட்டும்!
எனக்குள்ளே தினமும்,
நானே சொல்லிக் கொள்ளும்,
இந்த ரணம் நிறைந்த ரகசியங்கள்!
என்னோடே போகட்டும்!
நம்பிச் சொல்ல,
யாருமே இல்லை,
எனக்குள்ளே தினமும்,
நானே சொல்லிக் கொள்ளும்,
என் மெல்லிய சோகங்கள்,
சிறு பெரு ஏமாற்றங்கள்,
என்னோடே புதைந்து போகட்டும்!
யாரையும் நம்ப,
இனியும் விருப்பம் இல்லை,
என் மனமே உன்னோடே,
அவை புதைந்து போகட்டும்!
என்னோடே அவை,
அழிந்து போகட்டும்!
என்னை விட எனக்கு,
நல்ல தோழி இல்லை,
ஆதலால் அவை,
என்னோடே போகட்டும்!
என் சோகம் யாரும்,
தாங்கிக் கொள்ள வேண்டாம்!
ஆதலால் அவை,
என்னோடே போகட்டும்!
அய்யோ! விட்டுவிடுங்கள்,
அவை என்னோடே போகட்டும்!
அப்படித்தான் இருக்கோணும்...!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நன்றி...! :) பிழைகளை சரி செய்துவிட்டேன்!
நீக்குஇந்த மாதிரி சூழ்நிலைகளில் தான் சுவாமி ராம்குமாரானந்தாவின் பொன்மொழியை நாம் மனதில் நிறுத்த வேண்டும்.. அது, “வாழ்க்கை தான் நம்மள வெறுக்கணும்.. நாம வாழ்க்கைய வெறுக்க கூடாது”..
பதிலளிநீக்குஏன் சோகம்? எதற்காக வருத்தம்? இந்த உலகில் நம்மை சந்தோசப்படுத்தவோ, வருத்தப்படுத்தவோ நம்மை தவிர வேறு யாராலும் முடியாது என்கிற நிலைக்கு பழகிக்கொண்டால் எந்த சூழலிலும் நமக்கு பேரானந்தமோ, பெருந்துன்பமோ வரவே வராது..
நல்ல கவிதை.. கவிதையாக மட்டும் இருக்க வாழ்த்துக்கள்..
:) சரிங்க சுவாமி ராம்குமாரானந்தா! இது சும்மா எழுதுனது தான். எனக்குத் தெரிஞ்சவங்களோட அனுபவம்னு சொல்லலாம்!
நீக்குஎனக்கு எல்லாம் கஷ்டமே வராது :)