சனி, டிசம்பர் 14, 2013

முகப்புத்தகப் பதிவுகளை வலைப்பூவில் பொதிப்பது (Embed) எப்படி?

"அவரு ரொம்ப நல்லா எழுதுவாரு, ஆனா, இப்போ எல்லாம் அவரு ப்ளாக்-ல எழுதுறதே இல்ல.. எல்லாம் முகப்புத்தகத்துல தான். இதனால நெறைய பேருக்கு அவர் எழுதுறது சில நேரம் போய்ச் சேரமாட்டிக்குது..", இப்படி நன்றாக எழுதும் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தோம், நானும் நண்பர் ஒருவரும்.

உண்மை, கட்டுரைகள் கதைகள், இப்படி எழுதுவது குறைந்து, சிறு சிறு வாசகங்களாக, நக்கல் பேசும் வரிகளாக மாறிவிட்டன இப்போது எழுத்துக்கள் எல்லாம்.

"சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது", என்பது சிறப்புதான் என்றாலும், விரிவாக ஒன்றை எழுதுவதும் திறமை தானே?

சரி, நாம் கதைக்கு வருவோம், ஒருவர் நன்றாக முகநூலில் எழுதுகிறார், அது உங்களுக்குப் பிடித்து இருக்கிறது, உங்கள் வலைப்பூவில் அதைப் போட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

இப்படி நான் நினைத்தால், "copy - paste" செய்து, ஒரு இணைப்புக் கொடுத்து இருப்பேன். ஆனால், இதற்கு மாற்றாக ஒரு வழி உள்ளது. நேரடியாக அந்த நபர் முகநூலில் எழுதியதை நீங்கள் அப்படியே உங்கள் வலைப்பூவில் போடலாம்.

எப்படி? அந்த நபர் எழுதி இருக்கும் பதிவை உங்கள் வலைப்பூவில் சேர்க்க, கீழ் வருமாறு செய்யலாம்.


 1. அவர்களின் பதிவின் ஓரம் வலது மூலையில் இருக்கும் அம்புக்குறியை அழுத்தவும்.
 2. அதில் "Embed Post" என்கிற வசதியை அழுத்தவும்.
 3. அழுத்தியதும் ஒரு "code" உங்கள் திரையில் தெரியும். அதை "copy" செய்து கொள்ளுங்கள். (கூடுதல் விபரங்கள் அறிய "learn more"என்று அந்த "code"ன் கீழ் வரும் இணைப்பை சொடுக்கி வாசித்துப் பாருங்கள்)
 4. பிறகு, உங்கள் வலைப்பூவில் எங்கு அந்தப் பதிவை "embed" செய்ய விரும்புகிறீர்களோ, அங்கு "paste" செய்யவும்.
 5. "paste" செய்து பதிவை முழுமையாக முடித்த பிறகு, ஒரு முறை "Preview" செய்து பாருங்கள். உங்களது "code"  அப்படியே வருகிறதா, அல்லது பதிவாகத் தெரிகிறதா என்று.
 6. "code"  அப்படியே வந்தால், உங்கள் பதிவின் "settings" ல் சிறிது மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். 
 7. வலது புறம் இருக்கும் "settings" ல் "Interpret typed HTML" என்று மாற்றிக் கொள்ளுங்கள். 
 8. மறுபடி "Preview"  செய்து பார்த்து விட்டு, பதிவை வெளியிடலாம்!
இதில் என்ன சிறப்பு என்றால், இந்த போதிக்கப்பட்ட பதிவை உங்கள் வாசகர்கள் நேராக உங்கள் தளத்திலேயே முழுமையாகப் படிக்கலாம், அது மிகவும் நீளமான பதிவாக இருந்தாலும். ஆனால், இப்படிப் பொதிக்கும் பதிவு, "public" என்று, எல்லோரும் வாசிக்கும்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இதை நான் Techmaza தளத்தில் இருந்து கற்றுக் கொண்டேன் சமீபமாக, அதைப் பயன்படுத்தி ஒரு பதிவும் பதிந்து பார்த்தேன் எனது வலைப்பூவில். நன்றாக வேலை செய்தது. உங்களுக்கும் முகப்புத்தகப் பதிவுகளை வலைப்பூவில் போட வேண்டும் என்றால், இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

6 கருத்துகள்:

 1. நல்ல தகவல்.. ஆனால் ப்ளாக்கை ஃபேஸ்புக்கில் embed செய்யும் வசதி தான் தேவை.. ஃபேஸ்புக்கை ப்ளாக்கில் embed செய்வது அந்த அளவு வரவேற்பை பெருமா என தெரியவில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி எதுவும் இருக்கறதா தெரியலையே! இது பயன்படும், முகநூல்ல நல்லா எழுதி இருக்க பதிவ வச்சு, அது சார்ந்து நீங்க எழுதனும்னு ஏதாவது நெனச்சா.. இல்ல, வேற ஒரு நல்லா எழுதற நண்பர நீங்க உங்க வலைபூல அறிமுகம் செய்ய நெனச்சா, நல்லாப் பயன்படும் :)

   நீக்கு
 2. அட ! கண்மணி அன்போடு-வில் Technical Post :) வாழ்த்துக்கள் கண்மணி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) "அட அட அட..." எனக்கு RJ பாலாஜியோட ப்ரோக்ராம்ல வர்ற, "அட" நினைவுக்கு வந்துடுச்சு! :) நன்றிகள்!

   நீக்கு
 3. பலருக்கும் பயன் தரும் பதிவு... விளக்கத்திற்கு நன்றி...

  பதிலளிநீக்கு