முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரசிகப் பெருமக்களே!

எல்லோரும் புத்தாண்டுக்கு, பொங்கலுக்கு என்று வரிசை வரிசையாக பதிவு எழுதிக் கொண்டு இருக்க, ஒரு பக்கம் சிலர் புதிதாக வந்த வீரம், வில்லா.. (வில்லாவா? ஜில்லாவோ?), விழா இப்படி எதேதோ படங்களுக்கு எல்லாம் சன் டி.விக்குப் போட்டியாக திரை விமர்சனம் போட்டுக் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், நிறைய, பெரிய பெரிய இலக்கியவாதிகள் (??!!) எல்லாம், தங்கள் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க, அந்தப் புத்தகங்களுக்கு சிலர், இதென்னையா இவன் சின்னப் பய, இவன் எழுதுறதெல்லாம் புஸ்தகமா போட்டுக்கிட்டு! என்ன கருமமோ, (ஒருவேள பொறாமையா இருக்குமோ??) என்பது போல புத்தக விமர்சனம் எழுதிக் கொண்டிருக்க, (அப்போ, நான் எல்லாம், புத்தகம் போட்டு, பெரிய எழுத்தாளரா வரவே முடியாதா?? அய்யஹோ!), இத்தனைக்கும் மத்தியில், நான் மட்டும் ஒன்றுமே எழுதவில்லையே? நீண்ட நாட்களாக? ஆயிரக் கணக்கில் எனக்காக உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் எல்லாம், என்ன எழுதல? என்ன கண்மணி மேடம், எழுதல?, என்று கேட்கத் தொடங்கிவிடவே, (சரி, பொய் தான் என்ன செய்ய ஒரு விளம்பரம்) அவர்களை திருப்தி படுத்தும் பொருட்டு இந்தப் பதிவை அடியேன்(அடியாள்-னு வருமா பெண்பால்?) எழுதுகிறேன்.

என்ன எழுதலாம் என்று யோசித்தவாறே என் வீட்டின் டி.வியை பார்த்துக் கொண்டு இருந்தேன். எந்தப் பக்கம் திருப்பினாலும் எதாவது ஒரு திரைப்படம்! இல்லை, ஒரு ஹீரோ வந்து பேசிக் கொண்டு இருக்கிறார், நிறைய கல்லூரி மாணவிகள் வந்து அழுது கொண்டு இருக்கிறார்கள். “அடடா, எதுக்குப்பா அழுதுங்க இந்தப் பொண்ணுங்க எல்லாம்”, என்று நாம் உற்று நோக்கினால், அந்த கதாநாயகனை “ஹக்” (hug) செய்ய வேண்டும் என்று அழுதார்களாம்!

ரசிகப் பெருமக்களே!

“???!! என்ன கொடும சார் இது, என்று வேறு பக்கம் சேனலை மாற்றினால், “தல, தல, தல பொங்கல்”, இப்படி நிறைய பேர் கத்திக் கொண்டு இருந்தார்கள். பால் அபிஷேகம், மோர் அபிஷேகம் என்று ஒரே அமர்க்களம்.

சாமிக்கு பால் அபிஷேகம் செய்தாலே எனக்குக் கோபம் வரும், இதில் ஒரு ஆசாமியின் (மன்னிக்கனும், உங்கள் பாஷையில் “தல”) படத்துக்குச் செய்தால்? சொல்லவா வேண்டும்?

ஆக, எனக்கு அதுவும் சற்று வினோதமாகப்படவே, வேறு சேனல், அதுவும் பிடிக்கவில்லை, வேறு, வேறு... இப்படியே கடசிக்கு டி.வி. யை அமத்திப்போட்டுவிட்டு “angry birds” விளையாடச் சென்றுவிட்டேன்.

விளையாடி முடித்த போது ஒரு சிந்தனை. யோசித்துப் பார்த்தால், என் நண்பர்கள், தோழிகள், தம்பி, இப்படி எல்லோருமே யாரோ ஒருவருக்கு வெறித்தனமான ரசிகர்களாக இருக்கிறார்கள்.

அது நடிகரோ, நடிகையோ, இசை அமைப்பாளரோ, இல்லை எழுத்தாளரோ, இப்படி யாராவது ஒருவருக்கு எல்லோருமே வெறித்தனமான ரசிகராக இருக்கிறார்கள்.

அப்படி ரசிகனாக இருப்பவர்கள் சண்டை இட்டுக் கொள்கிறார்கள். உதாரணமாக, சமீபத்தில் நான் பார்த்த சண்டைகளில் இருந்து சின்ன எ.கா.

ஜில்லா வீரம் à இது ஊர் உலகமே அறிந்த சண்டை தான்.
இளைய ராஜா ஏ.ஆர். ரஹ்மான் à இதுவும் பிரபலமான சண்டை தான்
பிறகு சச்சின், ராகுல் என்று சிலர் விளையாட்டு வீரர்களை வைத்து சண்டை போட, சிலர் அதிலும் வேறு விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று சண்டை போட!

சிலர், என் சாமி பெருசு, உன் சாமி பெருசு என்று போட, இன்னும் பலர் சாதி என்று மோதிக் கொள்ள...

சரி இதெல்லாம் கூடப் பரவாயில்லை, ஏதோ நம்ம ஊர் ஆட்கள். ஆனால், கு ஜுன் பியோவுக்காக எல்லாம் சண்டை போட்டால் எப்படி? (கு ஜுன் பியோ என்பது எதோ ஒரு கொரியன் படத்தில் வரும் கதாநாயகனின் பெயர், உண்மையான பெயர் எனக்குத் தெரியவில்லை!)

ரசிப்பதற்கும், வெறித்தனமாக ரசிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. மேலும், இது அவர் அவர் விருப்பத்தைப் பொருத்தது, கூடாது என்று சொல்ல நம்மால் முடியாது!

 இதில் முக்கியமான ஒரு விஷயம் என்ன என்றால், ஒருவரின் ரசிகர் என்றால், அதே துறையில் அவருக்குப் போட்டியாக இருக்கும் மற்றவருக்கெல்லாம் எதிரியாக இருக்க வேண்டும், தலைவரைப் புகழ்வது போல, பிறரை இகழ வேண்டும்.

சரி, இப்படி நான் மட்டும் சண்டை போடுவதோ? வெறித்தனமான ரசிகையாகவோ இருந்ததே இல்லை! சண்டை நடக்கும் பக்கம் சென்றாலும் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பதோடு சரி!

எனக்கும் பிடித்த கதாநாயகன், கதாநாயகி, எழுத்தாளர், இசை அமைப்பாளர், விளையாட்டு வீரர், விஞ்ஞானி என்று ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது, ஆனால், தலைவா, தெய்வமே என்பது போல் ஒரு நாளும் நினைப்பதில்லையே??? ஏன் அப்படி?

ஆனால், அப்படி ஒரு வெறித் தனமான் ரசிகனாக இருப்பது கொஞ்சம் அசாத்தியமான செயலாகப்படுகிறது எனக்கு.

ஒரு தன்னலமற்ற மனிதனால் மட்டும் தான் அப்படி இருக்க முடியும். எந்தப் பயனையும் எதிர் பார்க்காமல், எதற்குமே ஆசை இல்லாமல், “தலைவா”, என்று உருகி, பேனர் வைப்பதில் தொடங்கி, உயிரையும் பெரிதாக நினைக்காமல் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து!

நண்பர்களோடு தலைவனுக்காக சண்டை போட்டு, வீட்டில் அம்மா அப்பா படி என்று சொன்னால் கூட காதில் போட்டுக் கொள்ளாமல், முக்கியமான தேர்வுக்கு போகாமல், படம் பார்க்கச் சென்று! தன் வாழ்வின் முக்கியமாக வேறு எதையுமே நினைக்காமல் தலைவனுக்காக மட்டுமே எல்லாம் செய்யும் இவர்களை “முட்டாள்கள்என்று சொல்லவா முடியும்???

இல்லை, அப்படி சொல்லவே முடியாது. இப்படி ஒரு ரசிகன் இருக்கிறான் என்பது அந்தத் தலைவனுக்கே கூடத் தெரியாது, ஆனாலும் அவனுக்காக எதாவது ஒன்றைச் செய்து கொண்டு இருப்பார்கள் தினமும் ஏதோ ஒரு விதத்தில்.

இவர்கள் சுயநலம் அற்றவர்கள்! உண்மைத் தொண்டர்கள். நாடு முன்னேற இப்படி ஒரு நான்கு பேர் மிகவும் முக்கியம்.

என்னைப் போல ரசிகையாக இருப்பவர்கள் உண்மையில் ரசனை அற்றவர்கள்! சுயநலக்காரர்கள்.

உண்மையில் ஒரு கலைஞனுக்கு அவசியமானது, ஊக்குவிப்பது பாராட்டு தான், அதை வாரி வழங்குபவர்கள் இந்த வெறித் தனமான ரசிகர்கள். ஆனால் பாருங்களேன், எப்போதுமே ஒரு கட்டம் வரைக்கும் தான் அந்தப் பாராட்டு, ஊக்கம் அதிகம் தேவைப்படுகிறது. புகழின் உச்சிக்குச் சென்ற பின்னர், இந்த பாராட்டும் புகழும் பழகிவிடும்! மக்கள் மனதில் ஒரு இடம் கிடைத்துவிட்டால் போதும், பிறகு ஒரு நடிகர் என்ன தான் நடித்தாலும், அது “மாஸ், செம, தூள்இப்படித் தான் ஆகிவிடும்!

இப்படிப்பட்ட முழு நேர, வெறித்தனமான, வேறு வேலையை எல்லாம் விட்டுவிட்டு பால் அபிஷேகம் செய்யும், உன்னதமான ரசிகர்களுக்கு என்னால் முடிந்த சிறு காணிக்கையாக இப்பதிவை நான் சமர்ப்பிக்கிறேன்.

இந்தப் புத்தாண்டில் அப்படிப்பட்ட ரசிகையாக உயர என்னால் ஆன முயற்சிகளை செய்ய உள்ளேன் என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு முதற்கட்டமாக,

“கமலஹாசன் அவர்கள் வாழ்க, ரஜினி அவர்கள், விஜய் அவர்கள், அஜித் அவர்கள், விக்ரம் அவர்கள், சூர்யா அவர்கள், இன்ன பிற பிரபல நடிகர்கள் எல்லாம் *ழிக” :P :D :) ;) 

என்ன சொல்றிங்க? “தல” வாழ்கவா?? இருங்க வரேன். 

கருத்துகள்

  1. ellathuku manasu than kaaranam .words la express panrathu kastam. ivanaguluku onnu pidikum avangaluku onnu pidikum .like hero and villan u may be either both of them .but only as ur heartly wish...intha topic a research panrathum god irruku or illayanu pesurathum onnuthan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் பிடிக்கும் எல்லாருக்குமே ஒவ்வொன்னு, ஆனா அத வச்சிகிட்டு சண்ட போட குடாதுல? அத தான் சொல்றேன். :)

      நீக்கு
  2. இந்த விளையாட்டிற்கு வரலே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத தான் நானும் சொல்றேன், நானும் வரல! :)

      நீக்கு
    2. அதான் முதல் காலடி எடுத்து வச்சுட்டீங்களே !! வாழ்க, ... *ழிக ! என்றெல்லாம் சொல்கிறீர்களே :) :)

      நீக்கு
  3. அதிகமாய் கூட வேண்டாம் ,கொஞ்சமாக யோசித்தால் கூட இந்த மாதிரியான வெறித்தன ரசிகத்தன்மை மடத்தனமாகவே படும்,வெறித்தனமாக ரசிகர்கள் அவர்களின் தலைவன் சார்ந்த எது என்றாலும் கொஞ்சம் கூட யோசிப்பதே இல்லை !! அது தான் இதுமாதிரியான செயல்களுக்கு மூலக்காரணம், You cannot be in love and to be intelligent,you can be either not both. என்று ஒரு ஆங்கில சொற்றொடர் உண்டு. :) :)
    தன்னலமற்ற தியாகத்தன்மை கொண்ட, உயர்ந்த ரசனை கொண்ட ரசிகையாக மாற வேண்டும் என்ற தங்களின் லட்சியம் ஈடேற வாழ்த்துக்கள் கண்மணி :D :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் ஆம், யோசிக்காமல் தான் செய்கிறார்கள்! அதனால் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் ஏதும் பிரச்சனை வராமல் இருக்கும் அளவாவது யோசித்தால் நன்றாக இருக்கும்!

      You cannot be in love and to be intelligent,you can be either not both. சரியாகப் பொருந்துகிறதே! :)

      நீக்கு
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. setril mulaitha sendhamarai pola intha kaalathilum ipadi oru pen..

    unai thoziyaga irupathil PERUMAI kolgiren.:)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்