வியாழன், ஏப்ரல் 30, 2015

ஓசில தோசை!

வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன்….

”தமிழ்ல எழுதவே மறந்து போகுமோ!”, என்ற பயமும்; நேற்று இரவு தொடங்கி, இன்று காலை வரையில் நான் வாசித்த “அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…” என்கிற ரஞ்சனி அம்மாவின் மின்-புத்தகமும் தான், நான் இப்போது எதையோ என் கணினியில் கிறுக்க ஆரம்பித்திருக்கக் காரணம்.


Courtesy:  தோசை அம்மா தோசை!

பல மாதங்களுக்கு முன்பே, சொல்லப் போனால், ”அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…” மின்–புத்தகம் வெளிவந்த அதே நாள், இரவு, டவுன்லோட் செய்துவிட்டேன். “இன்று வாசிப்போம், நாளை வாசிப்போம்”, என்று தள்ளிப்போட்டுத் தள்ளிப்போட்டு, ஒரு வழியாக, FINALLY! நேற்று தான் வாசிக்கத் தொடங்கினேன்! (புத்தகம் வாசிக்கக் கூட நேரமில்லாத அளவு “பிஸி” என்று நினைக்காதீர்கள், சில நாட்களாக, இல்லை, இல்லை, ஒரு வருடமாக, “Time Management” மறந்து, கொஞ்சம் சோம்பேரியாக, படம் பார்த்து, பாட்டுக் கேட்டு, ஆங்கில நாவல்கள் படித்து, சென்னை ஊரை சுற்றிப் பார்த்து, பொழுதைப் போக்கிக் கொண்டு இருந்துவிட்டேன். ”எழுத வேண்டும், எழுத வேண்டும்”, என்று நினைத்து நிறைய தலைப்புகளைக் குறித்து வைப்பேன் நாட்குறிப்பில், ஆனால், அவற்றை எழுத நல்ல நேரம் தான் அமையவேயில்லை!)

”அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…”, தலைப்பே மிகவும் ஈர்த்துவிட்டது என்னை! வாசிப்பவரை ஈர்ப்பது, முதலில் தலைப்பு தானே! (”ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க”னு தலைப்பு வச்சா தானே நாம வாங்குவோம்?)

ரஞ்சனி அம்மாவின் வலைப்பதிவுகளை அழகாக தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அம்மாவின் அனுபவக் கதைகள் எல்லாம்! அரியலூரில் இருக்கும் அவரின் ”சித்தியா” வீட்டிற்குச் சென்ற அனுபவத்தை வைத்துத் தொடங்குகிறது புத்தகம். மிகவும் ரசித்தேன் அரியலூரில் நண்டு சிண்டுகளோடு வந்த பகுதிகளை.

அடுத்ததாக, ஆங்கில ஆசிரியையாக இருந்த போது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பு - அடிபொளி! (இந்த வார்த்தை இந்த புத்தகத்தில் இருந்து கற்றுக் கொண்டேன்.) குறிப்பாக, கொரியன் மாணவர் “சிவப்புப் பொட்டு” பற்றி கேட்டதாக வந்த பகுதியை வாசித்து, சிரித்தேன்! (தென் கொரியா போக வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை, நிறைய கொரியன் படம், தொடர்கள் என்று பார்த்துப் பார்த்து! அதனாலோ என்னவோ, இந்தப் பகுதி மனதில் நன்கு பதிந்துவிட்டது)

பிறகு, விவேகானந்தர் பற்றிய புத்தகம் எழுதிய அனுபவம் குறித்து எழுதி இருந்த பதிவு, ஒரு புத்தகம் எழுதுவதற்கு எவ்வளவு மெனக்கெட வேண்டும், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் நாம் எழுதிய புத்தகம் வெளி வரும்போது, என்பது புரிந்தது!

அடுத்து, ”சிமெண்ட் சொம்பு” கதை - Strict மாமியார், பயந்த மருமகள்! சிரித்து ரசித்தேன்.

ஒரு சிலரது எழுத்தைப் படிக்கும் போது தான், நாமும் எழுதினால் என்ன என்று தோன்றும், எனக்கு அம்மாவின் எழுத்தைப் படிக்கும் போது, அப்படி!
நீங்களும் நிச்சயம் சாப்பிடுங்கள், அடுக்கு தோசையை! சுவை அருமை!

இலவசமாக இந்த மின் – புத்தகம், “இங்கு”!

ரொம்ப ரொம்ப நன்றி ரஞ்சனி அம்மா, திரும்ப எழுத வச்சதுக்கு!


I’m back, I’m back! (ஒரு சினிமாப் பாட்டு இருக்கே இப்படி? அதப் போட்டுக்கோங்க BGMக்கு) 

7 கருத்துகள்:

 1. கண்மணி! உண்மையில் இன்று நீ எனக்குக் கண்மணி ஆனாய்! எனது e-book - க்கு உன்னிடமிருந்து விமரிசனம் எதிர்பார்க்காத ஒன்று. ரொம்பவும் ரசித்துப் படித்திருக்கிறாய் என்பது தெரிகிறது. நான் இப்போதிருக்கும் மனநிலையில் இந்த பதிவு தரும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. நன்றி கண்மணி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மா :) உங்க புத்தகம் ரொம்ப பிடிச்சதால தான் எழுதுனேன்.

   நீக்கு
 2. பெயரில்லா5/01/2015 8:34 பிற்பகல்

  Supper .May God Bless with Health and Wealth !

  VS Balajee

  பதிலளிநீக்கு