செவ்வாய், டிசம்பர் 27, 2011

தொடர்கதை ---> பாகம் 10 ---> சிக்ன(க)ல்(பாகம் 9 படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க
தொடர்கதை ---> பாகம் 9 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு, இங்க வாங்க)

"" sir.. நாங்க மித்த lovers மாதிரி ஊர் சுத்தல sir ., உங்களுக்காகவும்
என்னோட parents காகவும் தான் கட்டுப்பாடோட காத்துட்டு இருந்தோம்... இப்போ கூட உங்க சம்மதம் இருந்தா மட்டும் தான் கல்யாணம் நடக்கும்.. யோசிங்க.. இதுக்கு மேல உங்க விருப்பம்.. நான் அடுத்த வாரம் திரும்ப வரேன் sir.. அதுக்குள்ள நீங்க யோசிச்சு பாருங்க... கூட கடைசி வர இருக்க போறது.. அவளும் நானும் தான்.. எங்களுக்கு புடிச்ருக்கு sir.. யோசிங்க.. நான் வரேன் .. sir.. ., போயிட்டு வரேன் சுவாதி., போயிட்டு வரேன் மா..", தன பக்க நியாயம் சொல்லி., சுவாதியின் தாயிடமும் அவளிடமும் இருந்து விடை பெற்றான்..!!!

" நீ எப்போ வந்தாலும் என் முடிவு இது தான் தம்பி.. மாறாது... நீயே கொஞ்ச நாள் போனா மறந்திருவ என் பொண்ண.. அவளும் மறந்திடுவா.. " குமார சாமி கொதித்துப் பேசினார்..

" மறக்க மாட்டோம் sir.. நாங்க மறக்க மாட்டோம்... நான் வரேன்.. நீங்க மனசு மாறுற வரைக்கும் நாங்க காத்திருப்போம்.." கணத்த மனதோடு விடை பெற்றான் கிருஷ்ணா...

" கிருஷ்ணா... இரு... போகாத... அப்பா.. please பா.. கிருஷ்ணா நல்லவன் பா.. என்ன நல்லா பாத்துப்பான்.. please..... அப்பா சரின்னு சொல்லுங்கப்பா... please.... " கண்களில் வெள்ளம் ஓட , தன் தந்தையின் கால்களிலேயே விழுந்திருந்தாள் சுவாதி... 

" கால்ல விழுந்தா.. கரஞ்சிடுவனா.. எனக்கு என் மரியாதை தான் முக்கியம்... " , மகளின் கண்ணீரிலும் கரையவில்லை அவரின் மனம்...

" ஏங்க.. நம்ம பொண்ணு மேல எவ்ளோ பாசம் இருந்தா, அந்தத் தம்பி இவ்ளோ பொறுமையா காத்திருப்பேன்னு சொல்லும்..? நம்ம பொண்ணு இது வர உங்க கால்ல விழுந்துருக்காளா ?? உங்ககிட்ட எதாச்சும் வேணும்னு அடம் புடிச்ருக்காளா.. ? எவ்ளோ நல்ல பொண்ணா ., நம்ம பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாம படிச்சு., இன்னிக்கு நல்ல வேலைலயும் இருக்கா.. ஒத்துகோங்க.. அவ ஆசப் பட்டுக் கேட்டு அடம் புடிக்கிற மொத விஷயமே... இது தான்.. முடியாதுனு சொல்லி இவங்கள நோகடிக்காதிங்க... பாவம்ங்க.. இதுனால நம்ம மரியாதை கொறஞ்சு போகாது... எனக்கும் இந்த தம்பிய ரொம்ப புடிசுருக்குங்க.. " , அதுவரை அமைதியாய் இருந்த சுவாதியின் அம்மா.. கல்யாணி.. மகளின் காதலுக்காக குரல் கொடுத்தாள் கணவனை எதிர்த்து...

எத்தனை பேசியும் அடங்கவில்லை குமார சாமியின் சாதி வெறி..

" ரொம்ப பேசாத.. கல்யாணி..." ; " இது வர என்ன ஒரு வார்த்த எதிர்த்து பேசாத
பொண்ணையும் பொண்டாடியையும்.. எதித்து பேசுற அளவு வந்துட்டாங்க... எல்லாத்துக்கும் காரணம் நீ தான் தம்பி... என் குடும்பத்துல குழப்பம் உண்டு பண்ண வேண்டிக்கிட்டு வந்தியா? என்னால , உனக்கு என் பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க முடியாது... காத்திருந்தா நான் சாகுற வர காத்திருங்க ரெண்டு பெரும்.. போயிட்டு வா நீ இப்போ..." கோவத்தில் கத்தினார் குமார சாமி...

" மனிச்சுடுங்க.. உங்க குடும்பத்துல கொழப்பம் உண்டு பண்ண நான் வரல..., உங்க பொண்ணுக்காக எவ்ளோ நாள் வேணாலும் காத்திருப்பேன்.. உங்க பொண்ணு மனசு வச்சு., சரின்னு சொன்னா. நீங்க யாருக்கு வேணாலும் அவள கல்யாணம் பண்ணிக் குடுங்க.. " ., பொறுமையாக தன் காதலின் ஆழத்தையும்..  நம்பிக்கையையும் வெளிப்படுத்தி., " வரேன் சுவாதி., காத்திருப்போம் நம்ம.. போயிட்டு வரேன்மா.. வரேன் sir..." , கிளம்பினான் கிருஷ்ணா...

" அப்பா... போரான்பா...கிருஷ்ணாவ போக வேணாம்னு சொல்லுங்கப்பா....." , கதறி அழுதாள் சுவாதி...

" என்ன கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு யாராவது பொண்ணு பாக்க வந்தா... சொல்லுவேன்... கிருஷ்ணாவ பத்தி சொல்லுவேன்... அவன தவற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்... உங்க மனசு மாறுற வர காத்திருப்போம்..." அழுதவாறே பேசிவிட்டு அறைக்குள் சென்றாள் சுவாதி...

" ஒரு வருஷம் போனா மறந்துடுவா... வெளில விடாத இவள.. வேலைக்கும் போக வேணாம் எங்கயும் போக வேணாம்.. phone ., computer எதையும் தொட விடாத... பாப்போம் என்ன காத்திருக்காங்கன்னு... " , வீட்டிலேயே பூட்டி வைத்தார் சுவாதியை....

அழுது கொண்டே கடந்தது சுவாதி ., கிருஷ்ணாவின் நாட்கள்.

அது வரை அனுபவித்திராத எரிச்சல் கிருஷ்ணாவின் மனதுள்ளே...

வேலைக்குப் போனாலும் சுவாதியே சிரித்தாள் அவனது கண்ணுக்குள்...

சிரித்து சிரித்தே அவனது நாட்களை சோகமாக மாற்றிக் கொண்டு இருந்தாள்..

கட்டிலில் படுத்து கண்ணீருடனே கடந்தன சுவாதியின் இரவும் பகலும்...!!!


                                                                  ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

காதல் வென்றதா....???!!!!!

காத்திருங்கள்.. அடுத்த பகுதியில் படிக்கலாம்...!!

1 கருத்து:

  1. pothum mudila avanga appa kathaikulla neenga eluthasiriyara kathaila pirikiringa mudila...pls...che ponnada ammana ippadi irukkanum... ponnuna seethaiyaa irukkurathuku ithu onnum ithikasam illa iyalbu so swathiya irukkanum...theliva mudivedukkanum

    பதிலளிநீக்கு