முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 9 ---> சிக்ன(க)ல்



(பாகம் 8 படிக்கவில்லையா?இந்த link உபயோகப்படுத்துங்க 
  தொடர்கதை ---> பாகம் 8 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு, இங்க வாங்க .)





சுவாதியும் கிருஷ்ணாவும் ஊர் சுற்றாமல் ., நட்பாக கட்டுப்பாடுகளோடே பழகி வந்தனர்..

கல்லூரி இறுதி ஆண்டு.. 

campus interview வில் இருவரும் ஒரே கம்பெனியில் வேலைக்கு முயற்சி செய்து., தேர்வும் ஆகினர்..

ஆனால்., வெவ்வேறு கிளைகளில் வேலை அமைந்தது...

கிருஷ்ணா ஹைதராபாதிலும்.. சுவாதி சென்னையிலும் கை நிறைய சம்பளத்தோடு வேளையில் அமர்ந்தனர்..

சுவாதி வீட்டில் திருமணப் பேச்சுகள் தொடங்கின...

" கிருஷ் .. எனக்கு வீட்ல மாப்ள பாக்குறாங்க.. நீ வந்து எங்க வீட்ல.. பேசு.. எனக்கு எங்க அப்பாகிட்ட பேசுற அளவு தைரியம் இல்ல,,, " கிருஷ்ணாவிற்கு phone பேசி புலம்பினாள் சுவாதி..

" சுவாதி.. நீ உங்க வீட்ல நான் வரேன்னு மட்டும் சொல்லி வை.. நான் வந்து பேசிக்றேன் " கிருஷ்ணா சொல்ல..

" ம்ம்ம்.. அதுக்கு கூட எனக்கு தைரியம் இல்ல கிருஷ்ணா.. ரொம்ப பயமா இருக்கு.. ப்ளீஸ்.. சீக்ரம் நீ சென்னை வா.." சுவாதி அழுகாத குறையாக பேசிக்கொண்டு இருந்தாள்..

" ஏ லூசு., இப்போ எப்டி என்னால leave போட்டுட்டு வர முடியும்.. leave-கு பொங்கலுக்கு வரேன்... அப்போ பேசறேன் அப்பாகிட்ட.., இப்போ நெனச்சதும் நம்ம கம்பெனில எப்டி leave தருவாங்க.." கிருஷ்ணா சமாதானம் செய்தான்...

கல்யாணம் பேச ஆரம்பித்ததில் இருந்து சுவாதிக்கு பயத்திலேயே கழிந்தன இரவுகள் எல்லாம்... கிருஷ்ணாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிக்கொண்டே போனது..

பொங்கலும் வந்தது.. கிருஷ்ணாவும் ஊருக்கு வந்தான்...

ஒரு coffee shop-ல்

கிருஷ்ணாவின் கையைப் பிடித்தவாறு.. " ரொம்ப பயம்மா இருக்கு கிருஷ்.. அப்பாகிட்ட நீ இன்னிக்கே பேசு... "

" சரி phone பண்ணி இப்போ உங்க அப்பாவ இங்க வர சொல்றியா..? இங்கயே பேசிடலாம்..?? " என்று கிருஷ்ணா கேட்க..

" இல்ல.. இங்க சரியா இருக்காது.. நீ evening வீட்டுக்கு வா.. அங்க பேசலாம்.." சுவாதி சற்று பயத்தோடும் பதற்றத்தோடும் அவன் கையை அழுந்தப் பற்றினாள்..

" கவலப்படாத சுவாதி.. நம்ம நல்ல வேலைல இருக்றோம்.. ரெண்டு பேருமே நெறைய சம்பாதிக்றோம்.. ஏதும் ஆகாது., புரிஞ்சுபாங்க.,  கவலப்படாத .." ஆறுதலாகப் பேசினாலும் உள்ளே சிறிது பயம் இருந்தது கிருஷ்ணாவிற்கும்...

மாலை சுவாதியின் வீட்டில்...

கிருஷ்ணா கதவைத் தட்ட... திறந்தது சுவாதியின் தந்தை குமாரசாமி...

" யாருப்பா வேணும் உனக்கு ..? என்ன விஷயம் ...??? "

"சார்... உங்கள தான் பாக்க வந்தேன்... உள்ள வரலாமா? கொஞ்சம் personal-ah  பேசணும்.."

"வாப்பா.. என்ன விஷயம்..? எனக்கு உன்ன தெரியாதே.."

" உங்களுக்கு தெரியாது.. ஆனா உங்க பொண்ணுக்குத் தெரியும்... "

இதைக் கேட்டதும் குமாரசாமியின் முகம் சிவந்தது... ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த சுவாதியை முறைத்தார்.. 

அந்தப் பார்வையிலேயே பயந்து போனாள் சுவாதி...

தங்களது கதையை முதலில் இருந்து சொல்லி முடித்தான் கிருஷ்ணா...

" உங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்க ஆசப்படறோம்..." கிருஷ்ணா சொன்னதும்.. 

" முடியாது .. காதல் கல்யாணம் பணிக்கிற அளவு இவளுக்கு தைரியம் வந்துருச்சா... நீங்க வேற ஜாதி நாங்க வேற ஜாதி.. நாளைக்கு ஊருக்குள்ள என் பொண்ணப்பத்தி தப்பா பேசமாட்டாங்க தம்பி.. என் வளர்ப்பு சரி இல்லன்னு பேசுவாங்க..." சற்று கோபம் கலந்திருந்தாலும் ., கொஞ்சம் பொறுமையாகவே பேசினார்..

பயந்து போய் அழவே தொடங்கி இருந்தாள் சுவாதி...

                                                            ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


என்ன ஆனது.. கல்யாணம் வரை சென்றதா இவர்களது காதல்..???

காத்திருங்கள்...!!! 

அடுத்த பகுதியில் படிக்கலாம்..!!!



கருத்துகள்

  1. APPADI STORY SPEED HUH POGUTHU GUD.................. AVUNGALA SETHU VACHURUNGA.........

    பதிலளிநீக்கு
  2. dei intha jathi kandu pidichavan mattum kaila kidachan sethan... athu enda ella appavum orae mathiriyae pesuringa... kastathuku thuna varatha sontham, paisa kasukku peratha jathi thirunthunga unga ponnu allurathuku maranthuruva valkaila...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்