ஞாயிறு, டிசம்பர் 25, 2011

தொடர்கதை ---> பாகம் 8 ---> சிக்ன(க)ல்(பாகம் 7 படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க 
  தொடர்கதை ---> பாகம் 7 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு, இங்க வாங்க .)

கிருஷ்ணாவிடம் " புடிச்சது " என்று சொல்லி இருந்தாலும்., நிறையவே பயமாக இருந்தது சுவாதிக்கு.

" பின்னாளில்., கடைசி வரை இந்தக் காதல் நிலைக்குமா..??... குடும்பத்தில் குழப்பம் வருமா..??? அப்பா ஒதுக்கலனா..???." எண்ணம் வதைத்தது...

கிருஷ்ணாவுக்கோ துளியும் பயம் இல்லை., மனதெல்லாம் ஆனந்தம் தான் நிறைந்து இருந்தது.

" சுவாதி புடிக்குதுன்னு சொன்னா... ஆனா.. என் gift தானபுடிக்குதுன்னு சொன்னா... எதுக்கும் வெளிப்படையா சொல்லிடுவோம்.." நினைத்த கிருஷ்ணா அடுத்த text type செய்யத் தொடங்கினான்..

" சுவாதி.. I love you  சுவாதி., I need you near me till my life end... Love you so much.. ", கிருஷ்ணா type செய்து அனுப்ப...

" ம்ம் " , அதற்கும் இரு எழுத்தில் பதில் அனுப்பினாள்!!!!

சற்று அதிர்ந்தான் கிருஷ்ணா.., " சந்தோஷமே இல்லாத மாத்ரி ரெண்டு எழுத்துல reply பண்றாளே... :( " 

" சுவாதி., ஏன் நான் propose பண்ணதுல இருந்து , சரியாவே பேச மாட்டேன்ற please.. சொல்லு சுவாதி., எனக்கும் உன்ன புடிக்கும் னு சொல்லு சுவாதி... என்னாச்சு உனக்கு.???. ஏன் தயங்கற???.." text அனுப்பினான்..

அவன் வார்த்தைகளை வாசிக்க வாசிக்க அவள் மனம் அவனிடம் தஞ்சம் அடைவதை அவளால் உணர முடிந்தது... ஆனந்தமோ, பயமோ, வருத்தமோ... கண்கள் குளமாகி ஈரம் கசிந்தது அவள் கன்னங்களில்...

கட்டுக்கு அடங்காமல் மனம் போன போக்கில் போகத் துணிந்தாள் .,
" I love you too krish... ஆனா எனக்கு தயக்கமா... பயமா இருக்கு., இதனால நம்ம எதையும் இழந்துடக் கூடாது.. பயமா இருக்கு கிருஷ்ணா.. " , தன்னையும் மீறி type செய்து அனுப்பினாள்....

சுவாதியின் text பார்த்த கிருஷ்ணா., விண்மீன்களில் உஞ்சலாடுவது போல உணர்ந்தான்...

மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று சந்தோஷத்தை தனியாக சுவாதியோடு இருப்பது போல எண்ணி கொண்டாடத் தொடங்கினான்...

தனிமையில் அவனும் அவளும் ., மொட்டை மாடியில் நிலவில்., கை கோர்த்து நடப்பது போல் கற்பனை செய்து கிறங்கிப் போனான்..

" பயப்டாத , எதுவும் ஆகாது., எனக்கு உன்ன புடிக்குதுன்னு தான சொன்னேன்., எந்த problem-மும் வராது., நான் உன்ன ஊர் சுத்த கூப்ட மாட்டேன்., தொல்ல பண்ண மாட்டேன் எதுக்கும்., நீ நல்லா படிக்கணும்னு நெனைப்பா., உன் அப்பா பத்தி நெனைப்பா., நாம எப்பவும் போல பேசிக்கலாம்., அது போதும் எனக்கு..." வார்த்தைகள் அருவியாகக் கொட்டியது கிருஷ்ணாவிற்கு. 

கிருஷ்ணாவின் வார்த்தைகள் ஆறுதல் தந்தன சுவாதிக்கு., " நீ இப்டி சொன்னது , எனக்கு ரொம்ப happya இருக்கு கிருஷ்ணா., you are too good., lucky to have you., love you so much.."

காதல் ., இதமான நட்பு போலவே தொடர்ந்தது., எந்நேரமும் பேசிக் கொண்டும்., கொஞ்சிக் கொண்டும் இல்லாமல்., இருவருக்கும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டாள் சுவாதி..

" காதலால் முன்னேற்றவும் முடியும் " என்ற உண்மை பளிச்சிட்டது இவர்களது படிப்பிலும்.

தினம் சிறிது நேரம் பகிர்ந்து கொண்டு., நேரம் ஒதுக்கி கிருஷ்ணாவை படிக்கவும் வைத்தாள் சுவாதி..

ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக் கொண்டனர் வெற்றியில்., ஆறுதல் சொல்லிக் கொண்டனர் தோல்வியில்.,

தோல்வி கூட இனித்தது., காதலிக்கும் பொழுது இருவருக்கும்...!!!

காதல் இவர்களுது வாழ்கையில் பச்சை சிக்னலை மட்டும் பிரகாசித்து வந்தது... , பின்னாளில் வரும் சிக்கல்களை மறைத்து...!!!

                                                                   ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥என்ன சிக்கல் வந்தது .? இவர்களது காதல் சிக்னலில்??

இன்னும் சிறிது நேரத்தில்., காத்திருங்கள்...!!!
3 கருத்துகள்: