சனி, டிசம்பர் 24, 2011

தொடர்கதை ---> பாகம் 7 ---> சிக்ன(க)ல்


(பாகம் 6 படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க 
தொடர்கதை ---> பாகம் 6 ---> சிக்ன(க)ல் படிச்சிட்டு, இங்க வாங்க .)

கிருஷ்ணாவின் பரிசைப் பார்த்து யோசனையில் இருந்த சுவாதியின் நினைவை , கை பேசியின் ஓசை கலைத்தது. 

" 1 new message"

கிருஷ்ணாவின் text... வாசிக்கத் தொடங்கினாள் சுவாதி.

" hey swathi.,  I loved your gift . happy to feel your care., will read it for you.... " 

சுவாதிக்கு குழப்பமாக இருந்தது..

கிருஷ்ணா தந்த பரிசை எண்ணி அந்த நொடி வரை துளியும் கோபம் இல்லை அவளுக்கு.

" நானும் கிருஷ்ணாவ love பண்றனா.... no.. அப்டி ஏதும் வேணாம்.... இது love பண்ற வயசா எனக்கு... அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்... இல்ல... கிருஷ்ணாவ நான் love பண்ணல... வேண்டாம்.." மனதுள்ளே போர் நடத்திக் கொண்டு இருந்தாள். 

அது வரை சலனமில்லாமல் இருந்த சுவாதியின் மனம்., சற்றுத் தடுமாறிப் போனது.

அவள் நினைவு சுழன்றது., " கிருஷ்ணாவின் சேட்டைகள்., அவளை உருகிப் பார்த்த பார்வை., பேசும் விதம் ., பாசமாக விசாரிக்கும் வார்த்தைகள்.." என எல்லாமே அவளை சலனத்தில் மூழ்க வைத்திருந்தது..

அந்நேரம் பேருந்தில் பாடல் ஒலித்தது... காதலன் , காதலியைப் பார்த்து பாடுகிறான்...

சுவாதியின் நினைவில் காதலன் கிருஷ்ணாவாகவும் , காதலி அவளாகவும் ஒரு நொடி கற்பனை தொடங்கியது..

சுதாரித்து நினைவுகளுக்கும் ஆசைகளுக்கும் கட்டுப் போட்டாள். 

மீண்டும் கை பேசி சிணுங்கியது. " A NEW TEXT MESSAGE "
அதுவும் கிருஷ்ணா தான். 

" சுவாதி., உனக்கு என் gift புடிச்சதா? புரிஞ்சதா..? " 

"புடித்தது" என்று சுவாதியின் மனம் சொன்னாலும்., " புடிக்கக் குடாது" என்று தடை போட்டது அறிவு.

சுவாதியின் reply வராமல் பதறிப் போய் இருந்தான் கிருஷ்ணா..

நிச்சயம் சுவாதிக்கு தன்னை பிடிக்கும் என்று மனம் சொன்னது கிருஷ்ணாவிற்கு.

பொறுமை இன்றி மீண்டும் text செய்தான்...

" சுவாதி., are you there? reply please.. waiting for your reply.. .." 

" text you later " என்று குழப்பத்தில் இருந்த சுவாதி, பதில் அளித்தால்.

கிருஷ்ணாவின் நினைவே சுழன்றது அவளைச் சுற்றி.

" இனியும் கிருஷ்ணா கிட்ட பேசினா., நமக்கே தெரியாம love பண்றேன்னு சொன்னாலும் சொல்லிடுவோம்... ஆனா பேசாம கஷ்டமா இருக்குமே...", யோசனையோடு படுத்திருந்தாள் சுவாதி தன் அறையில்.

" பேசாம போய்டுவாளோ ??!! எப்பவும் டக்குனு reply பண்ணுவாளே...
 love பண்ல போல... " நேரம் ஆக ஆக சோகம் தலைக்கேறியது கிருஷ்ணாவிற்கு... 

மீண்டும் text செய்தான்...

" சுவாதி.. swathi sorry for the disturbance., gift எப்டின்னு ஒரே ஒரு text மட்டும் அனுப்பு..." 

என்ன நினைத்தாலோ தெரியவில்லை., " புடிச்சது" என்று reply அனுப்பிவிட்டாள்!!!

சுவாதியின் reply பார்த்த கிருஷ்ணாவிற்கு., தலை கால் புரியாத சந்தோஷம்....

வானம் தாண்டிப் பறந்த அவன் மனதைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து., பதிலுக்கு text அனுப்பினான் , " swaathi...  I feel soooo happy... Really? You loved it??? .... :) :) :) :) :) I'm very lucky to have you.."

அவளது கரம் பிடிக்க., அக்கணமே துடித்தான்...

" mm..  " , பதில் அனுப்பினாள் சுவாதி...

அழகும் குணமும் கொட்டிக் கிடக்கும் பொற்குவியல் கிடைத்ததென பெருமிதம் கொண்டான்...


                                                                  ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

காதல் எப்படித் தொடர்கிறது...?

படிக்கலாம் இன்றே... அடுத்த பகுதியில்.. இன்னும் சிறிது நேரத்தில்..5 கருத்துகள்: