செவ்வாய், டிசம்பர் 20, 2011

தொடர்கதை ---> பாகம் 3 ---> சிக்ன(க)ல்


( முதல் இரண்டு பாகங்கள் படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க., ## தொடர் கதை - பாகம் 1 - சிக்ன(க)ல் !!! ##
## தொடர்கதை ---> பாகம்-2 ---> சிக்ன(க)ல்!!! ##   படித்துவிட்டு , இங்க வாங்க!! )


வெயிலின் கொடுமை சற்று குறைந்திருந்தது, வேகமாக வந்து கொண்டிருந்தான், கிருஷ்ணா தன் பைக்கில் . சிக்னல் அந்த நேரம் சிவப்பைக் காட்ட , நின்றான் !!! சிவப்பு , பச்சையாக மாற., கிருஷ்ணா வேகமெடுத்துக் கிளம்பினான்.,


பச்சை விழுந்ததை கவனிக்காமல்., அந்தப் பக்கம் இருந்து , கைபேசியில் பேசிக் கொண்டே ., சாலையைக் கடந்தாள் ஒரு பெண்., வேகமெடுத்த கிருஷ்ணா அவள் மீது மோதி விழுந்தான்., அவளும் சறிந்தாள்...


"ஏய்.. பாத்து வரது இல்ல..." கத்த நினைத்து அவளைப் பார்த்து நிமிர்ந்த கிருஷ்ணா , வாயடைத்து நின்றான்...


அந்த அழகுப் பதுமையின் அழகில் மயங்கி நின்றான்.,


சிறு காயங்களுடன்., அதிர்ந்து பார்த்தாள் ,அவள் .


" சாரி,  சாரி, சுவாதி , அடிபட்டுடுச்சா..?? " , தவறு அவளுடையது ஆயினும் இவனே மன்னிப்புக் கேட்டான்!!!


ஆம் ,  முதல் சந்திப்பு போலவே இன்றும் சிக்னல் தான் சந்திப்பிற்கு வழி வகுத்து நின்றது..


"அதிக வேகமும், கைபேசியில் பேசுவதும் , சாலையில் ஆபத்து " தான் எனினும்., கிருஷ்ணாவிற்கு அது அதிர்ஷ்டமாகிப் போனது இங்கே..


" சுவாதி hospital  போ மொதல்ல., பாரு அடிபட்ருக்கு ", அவனுக்கு தான் அதிக காயம் என்றாலும்., அவளது சிறு காயங்களே அவனுக்குப் பெரிதாக வலித்தது!!!


" பரவால கிருஷ்ணா., எனக்கு ஒண்ணுல சின்ன scratch  தான்., உனக்கு தான் அடிபட்ருக்கு., நீ hospital  போ " நேரில் முதன் முறை பேசுவதே இருவருக்கும் விபத்தாகிப் போனது.,


"வா நானே hospital கூட்டிட்டு போறேன்., ரெண்டு பேரும் போலாம்" கிருஷ்ணா சுவாதியையும் சேர்த்தே அழைத்துச் சென்றான்.


இருவரும் மருத்துவ மனை சென்றனர்.,


தன்னால் தான் கிருஷ்ணாவுக்கு பலத்த காயம் என்று எண்ணி., அக்கறையுடன் அவனுடன் மருத்துவமனை சென்றாள் சுவாதி..


மருத்துவம் பார்த்து , மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும்.,


 "  உன் வீடு எங்க சொல்லு நானே கொண்டு விடறேன் " 


" இல்ல கிருஷ்ணா உனக்கு அடிபட்ருக்குனு தான் hospital-கே கூட வந்தேன்., நான் பாத்துகறேன்., நீ வீட்டுக்கு போ பரவால" சுவாதி அருகில் இருந்த busstop  செல்ல முயன்ற போது தான் கவனித்தாள் , கையில் இருந்த purse எங்கோ தொலைந்து போய் இருந்ததை.சுவாதியின் முகம் சுருங்குவதைப் பார்த்தே புரிந்து கொண்டான் கிருஷ்ணா., "என்னாச்சு சுவாதி??! ஏன் பதட்டமா இருக்க??"


"இல்ல., accident-ல purse miss  ஆயட்சு..",இழுத்தாள் சுவாதி


" அதான் நான் கேட்டதுக்கும் வேணாம்னு சொல்லிட்ட, வீட்ல கொண்டு பொய் விடறேன் வா.,"


தயங்கினாள் சுவாதி " இவனோடு வீடு வரை செல்வது ..." ,


செல்வதா வேண்டாமா என்று பெரிய போராட்டமே நடந்தது மனதில் !!!


                                                       ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


சென்றாளா சுவாதி??? படிக்க நாளை வாங்க 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக