வியாழன், டிசம்பர் 29, 2011

ஒத்தப்பட்டியை நோக்கி....!!!!சுள்ளி கொளுத்தி,
சுற்றி அமர்ந்து ,
சுகமாய் விளையாடும் சிறுவர்கள்!!!

கிண்டிக் கிளறி .,
கொக்கரித்து ஓடும்.,
பெட்டைக் கோழிகள்!!!

குச்சிகளை நட்டி.,
குறைந்த செலவில்.,
" ஸ்டெம்ப் " செய்து விளையாடும்.,
கிரிக்கெட் சிறுசுகள்!!!

கிழிந்த அழுக்குக்
கைலி கட்டி.,
"ஹெட் போனில்" பாட்டுக் கேட்கும்.,
இளசுகள்!!!

சாக்கடை மேட்டில் .,
சுத்தம் அடையும்.,
பத்துப் பாத்திரமும்.,
பாமர அம்மாக்கள்!!!

பக்கத்தில் அமர்ந்து.,
"பீடி" ஊதிக் கொல்லும்.,
ஐயப்ப பக்தர்கள்!!!

" மொபைல் போன் " டவரில் ,
" ம்யூஸிக் " வாசிக்கும்.,
மைனாக்கள்., குருவிகள்!!!

மயான பூமியில்.,
கழுகுக்கு பதிலாய்.,
வெள்ளைக் கொக்குகள்!!!

கோவில் கண்ணாடியில்.,
விபூதி அழகு பார்க்கும்.,
பள்ளிச் சிறுவர்கள்!!!

போட்டி போட்டு.,
பந்தயம் ஓடும்.,
மாட்டு வண்டிகள்!!!

பாட்டியே வடை சுட்டு
விற்கும்.,
பெட்டிக் கடைகள்!!!

ஓடி வரும்.,
கழிவு நீருடன் ,
காட்டு ஆறுகள்!!!

பச்சையாய் பூமி.,
மாறிக் கிடக்கும்.,
வயக்காடுகள்!!!!

அவசரமாய்.,
"பம்ப் செட்டை"
சாலை ஓரச்
சுவரில் திறக்கும்.,
சுட்டிச் சிறுவர்கள்!!!

எல்லா இடத்திலுமே.,
கொட்டிக் கிடக்குது.,
கோடி அழகுகள்!!!

யாவையும் அழகாய்
காட்டித் தொலைகிறது.,
ரசிக்க விழைகிறது.,
இந்தப் பேதையின் கண்கள்!!!7 கருத்துகள்:

 1. அடடா!
  ரசிக்க வைக்கும் காட்சிகள்;
  அதை அழகு படுத்தும் வரிகள்...!

  நல்ல படைப்பு!

  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. :) :) நன்றி.. கத்துக் குட்டி நான் !!!

  பதிலளிநீக்கு
 3. Congrats for Displaying beautiful scenery in beautiful sentences.Thank U

  பதிலளிநீக்கு
 4. ஒத்தப்பட்டிக்குச்(மம்சாபுரம் அருகில் உள்ள ஒத்தப்பட்டி தான் என நினைக்கிறேன்) சென்றிருந்தும் நான் உற்று நோக்காத காட்சிகள் தங்கள் பார்வையில் கவிதை வடிவில்.... நன்று.... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 5. @@ கார்த்திகேயன் , மம்சாபுரம் எனக்குத் தெரியாது :) ஆனால் இந்த ஒத்தப்பட்டி மதுரை செல்லும் வழியில் உள்ளது. மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹோ, ஒரே மாதிரி பெயர் இருந்ததால் அதுவென்று நினைத்துவிட்டேன்... கிராமங்கள் என்றாலே அழகு தான்.... நன்றி....

   நீக்கு