புதன், டிசம்பர் 07, 2011

தீமைகளைத் தொலைத்திடுவோம்!!!
தீபம் வைத்து.,
புத்தாடை உடுத்தி.,
உவகை கொண்டு களிக்க.,
நம்மால் முடியும்.,

உடுத்த உடையின்றி.,
உறங்க இடமின்றி.,
துயரத்தை உடுத்தி வாழும்.,
பலரை.,
தீப நாளில் நினைக்க.,
நமக்கு நேரம் இருப்பது இல்லை.,

அலங்கரிக்க விளக்கு வைத்து.,
அதில் மடல் மடலாய்
நெய் விட்டு.,
உருகி வேண்டுகிறோம்
இறைவனிடம்.,

இதற்காக உருகும் நம் மனம்.,
ஏழைக்காக.,
இயலாதோருக்காக.,
உருக மறுப்பது.,
வெட்கக் கேடல்லோ?

இந்த நாளில்.,
இனிமை கொண்டாடுவாதைக் காட்டிலும்.,
வாடிடும் ஒரு
ஏழைப் பிஞ்சுக்கு.,
கல்வி விளக்கு
கொடுக்கலாம்.,

தீமைகளை தீபத்தின்
ஒளியில்.,
தொலைத்திடுவோம்.,
கல்வி தீபத்தின்
ஒளியில்.,
தொலைத்திடுவோம்..!!!

2 கருத்துகள்: