வெள்ளி, பிப்ரவரி 03, 2012

அகமுடையோனே!!!

காதோரம் கேட்கும்,
காற்றின் மொழி.,
உனதென்று,
தானாய் சிரித்தேன்,
சில நேரம்!!!

படித்த புத்கத்தில்,
பெயரெல்லாம்
உனதாய் மாறுது.,
சில நேரம்!!!

சாலையின் ஓரம் நடக்கையிலே
உன் நினைவு
சாரல் தூவுது
சில நேரம்!!!

உன்னை தேடித் தேடி
அலைபாயவே.,
கண்கள் விழிக்கிறேன்
சில நேரம்!!!

காற்றின் தீண்டல் நீ என்று!!!
சிலிர்த்துப் போகிறேன்
சில நேரம்!!!

இத்தனை இருந்தும்,
பயன் என்ன ???
உன்னிடம் காதல்
மறைக்கிறேன்
பல நேரம்!!!
3 கருத்துகள்:

 1. அழகான கவிதை........
  // இத்தனை இருந்தும்,
  பயன் என்ன ???
  உன்னிடம் காதல்
  மறைக்கிறேன்
  பல நேரம்!!! // அதில் தான் காதலின் சுவாரசியங்களே இருக்கிறது... அவளுக்குத் தெரியாது என்று அவனும், அவனுக்குத் தெரியாது என்று அவளும் நினைத்துக் கொண்டு தங்கள் மனதில் காதல் போர் செய்வதும் சுவாரசியமானவையே!

  பதிலளிநீக்கு
 2. சொல்லாத காதலும்
  செலவிடாத பணமாய்
  செல்லாமல் போகும்... தக்க நேரத்தில் சரியாய் செலவிடப் பட வேண்டும்

  பதிலளிநீக்கு