முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#14

முந்தைய பாகங்கள்:   

காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 |   #10 |   #11 |  #12 | #13


தில்லியைச் சென்று அடைந்திருந்தான் முரளி. ரயில் நிலையம், புரியாத மொழி, சற்று பதட்டமாகத் தான் இருந்தது!

நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறான் முரளி, "இந்தி தெரியாம தில்லிப் பக்கம் போனா, கொஞ்சம் பாத்து தான் இருக்கணும்.."

அது வரை அப்படிப் பதட்டமாக உணர்ந்ததில்லை முரளி. தன்னை அழைக்க வருவதாய்ச் சொன்னவரும் வரவில்லை அங்கு.

அலைபேசியை வெளியே எடுத்தான். பட படவென எண்களை அழுத்தினான். அந்த எங்கள் நியாபகமாக இருந்தது, என்றும் மறக்காத எண்கள்.

பேசிமுடித்து வைத்தான் அலைபேசியை. இன்னும் சிறிது நேரத்தில் வருவதாகச் சொன்னதால், அமர்ந்தான் அங்கிருந்த வரிசை நாற்காலிகளில். சுற்றி பார்வையைப் பரவவிட்டான்.

பர பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் அந்த நகர மக்கள். அப்போது தான் ரயில் வந்து சென்றிருந்ததால், கூட்டம் நிறையவே இருந்தது.

கூட்டத்தில் தன் உடைமை எதையும் இழக்க விரும்பாத முரளி, பத்திரமாக தன் பையை, கையிலேயே வைத்திருந்தான்.

என்ன தான் பெரும் நகரமாக இருப்பினும், தலை நகரமாக இருப்பினும், நெரிசலும் மாசும் அதன் அழகை சற்றுக் கெடுத்துக் கொண்டு தான் இருந்தது.

காத்துக் கொண்டே இருந்தான், அரை மணி நேரம் கடந்திருக்கும்.

அப்பாடா அதோ வந்தாயிற்று.. முரளி காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தாயிற்று அவனை அழைத்துச் செல்வதற்கு.

தூரத்தில் அந்த உருவம் பார்த்ததும் கண்கள் மின்னியது முரளிக்கு.
பார்த்து எத்தனை நாட்கள் ஆகிற்று!

அருகில் வந்ததும் பேசத் தொடங்கினாள் அவள், " மன்னிச்சுடு முரளி, நேரமாகிடுச்சு, அசந்து தூங்கிட்டேன், நேத்து பரிட்சை இருந்ததா.. ரொம்ப நேரம் முழிச்சிருந்தேன்டா, அதான்... கோவமா?"

"இல்ல இல்ல பரவால, இப்போவாச்சு வந்தியே, நான் நல்ல வேல வந்து அலைபேசில கூப்டேன், இல்லனா இன்னும் தூங்கிருப்ப, எப்பவும் இப்டி தான் நீ.."

"சரி சரி ஒடன இப்டி சொல்லாத என்ன, அதான் மன்னிப்புக் கேக்றேன்ல.. வா கெளம்பலாம்.."

அவள் பெயர் சிந்து. முரளிக்கு நல்ல தோழி, காதலி, வழிகாட்டி, பாசமாய் இருப்பதில் அன்னையும் அவளே!

"பூ போன்ற மனம் அவளுக்கு.,சிறு கடுஞ்சொல் கூட தாங்க இயலாத, தொட்டாச்சிணுங்கி!காயம் தரும் வார்த்தைகளே பேச அறியாத, மழலை!மழையின் ஓசை போல இதமான படபடப்பான பேச்சுக்கு சொந்தக்காரி!மண் வாசம் போல இதமான வாசத்திற்கு குத்தகைக்காரி!அனைவருக்கும் தன் அம்மா எவ்வளவு அழகாகத் தெரிவார்களோ, அது போல் அனைவருக்கும் அழகாய்த் தோன்றுபவள்!முரளிக்கோ, எல்லா இளைஞரின் வாழ்விலும் இருக்கும் தேவதைப் பெண்போல், இவள் அவன் வாழ்வில் தேவதை!"

இருவரும் பேசியவாறே பேருந்தில் ஏறி, சென்று அடைந்திருந்தார்கள் சிந்துவின் வீட்டை. மிகப் பெரிய அரண்மனை அல்ல! ஆயினும் சற்று பெரிய வீடு. சாயம் சற்று வெளுத்து முந்தைய தினம் மழையில் நனைந்து இருந்தது!

இருவரும் வீட்டினுள் நுழைந்தார்கள்.

"வாங்க தம்பி, ரொம்ப நேரம் காத்துக்கிட்டு இருந்திங்களா? இவள எழுப்ப நானும் மறந்து போய்டேன். பயணமெல்லாம் நல்லா இருந்ததா? போய் குளிச்சிட்டு வாங்க சாப்டலாம்."

"இல்லமா நான் என்னோட நண்பன் வீட்ல தங்கறதா இருக்கேன். நான் உங்களையும் அப்பாவையும் பாத்துட்டுப் போலாம்னு தான் வந்தேன். அப்பா இல்லையாமா வீட்ல?"

"அப்பா இப்போ வருவாங்க, நீ மொத போய் குளி அழுக்குப் பையா... குளிச்சிட்டு வந்து சாப்ட வா., சாப்டுட்டு போகலாம், இங்கயே மாடில தங்குனு சொன்னாலும் கேக்க மாட்ற..", இடை மறித்தாள் சிந்து.

"இல்ல சிந்து இங்க தங்குனா, பயிற்சி மையம் தூரமா இருக்கும், அதான்."

"ஏதோ ஒரு காரணம் சொல்லிட்டே இரு, ஒழுங்கா சாப்டுட்டாவது போயேன்.."

"சரி சரி சாப்பட்றேன்.."

"ம்ம் போ, அந்த அறைல உன்னோட பையெல்லாம் வச்சுட்டு, குளிச்சிட்டு வா.."

"ஆமா தம்பி குளிச்சுட்டு வாங்க..", சிந்துவின் தாய் அமுதா சொன்னார்.

குளிக்கச் சென்றான் முரளி.

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை. அங்கு தான் முதலில் சிந்துவைப் பார்த்தான் முரளி. இந்திய அளவிலான, நடனப் போட்டி., சிந்து நாட்டியம் ஆடுவதில் தேர்ந்தவள். அந்தப் போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்தாள்.

முரளி அங்கு தான் படித்துக் கொண்டிருந்தான். முரளிக்கு அந்தப் போட்டியை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு. அப்படித் தான் பழக்கமானது முரளிக்கும், சிந்துவிற்கும்.

பார்த்ததும் இருவருக்கும் பிடித்தது. எல்லாக் காதலர்களையும் இணைப்பது போல, அலைபேசி தான் அதன் பிறகு இவர்களையும் இணைத்து வைத்தது!

திருமணங்கள் இன்றெல்லாம் சொர்கத்தில் நிச்சயம் ஆவதைக் காட்டிலும், அலைபேசியிலும், இணையத்திலும் தானே நிச்சயம் ஆகின்றன!

சென்னையில் இருந்து, சிந்துவின் சிறு வயதிலேயே தில்லி சென்றிருந்தார்கள் அவளது குடும்பம். விடுமுறை காலங்களில் தவறாமல் சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு வருவது சிந்துவின் வழக்கம். வரும் போதெல்லாம் முரளியின் வீடு செல்வதும் வழக்கம்.

காதல் என்றானவுடன், இருவருமே பெற்றோரிடம் சொல்லத் தயங்கவில்லை. பெற்றோரும் ஆரம்பத்தில் சற்று பயந்து மறுத்தாலும், பின்பு ஒப்புக் கொண்டு இருந்தார்கள். ஆனால் "அடிக்கடி பேசிக் கொண்டே காதல் என்ற பெயரில் வீணாய் நேரத்தை செலவு செய்யக் கூடாது" என்ற நிபந்தனை போட்டிருந்தார்கள் இருவரது வீட்டிலும்.

இதோ, இப்படி அன்று ரேணுகாவின் தந்தை ஒப்புக் கொண்டு இருந்தால், நன்றாக இருந்திருக்குமே அவர்களது வாழ்க்கை. தன் லட்சியம் அடைந்து ரேணுகாவை கரம் பற்றி இருப்பானே முரளி.

********************************************************

ரேணுகாவின் காதல் கணவன் சேர்ந்தானா ரேணுகாவோடு?

முரளி அடைந்தான தனது மாவட்ட ஆட்சியர் ஆகும் லட்சியம்?

வாசிக்கலாம் வரும் பாகங்களில்!

கருத்துகள்

  1. en ella ponnunga veetualiyum ippadi irukka matranga :(

    பதிலளிநீக்கு
  2. ம்ம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை, அண்ணா :)

    பதிலளிநீக்கு
  3. தங்கள் கதையை தொடக்கம் முதல் அனைத்து பாகங்களையும் வாசித்தேன்.ஒரு மெகா சீரியல் Effect...

    //திருமணங்கள் இன்றெல்லாம் சொர்கத்தில் நிச்சயம் ஆவதைக் காட்டிலும், அலைபேசியிலும், இணையத்திலும் தானே நிச்சயம் ஆகின்றன!//
    நிதர்சனமான உண்மை.

    கதையின் முடிவை எதிர்நோக்கியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  4. :) மெகாத் தொடர் போல் அத்தனை இழுவையாக உள்ளதோ? வாசித்தமைக்கும், கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி, விஜயன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்