புதன், ஜூன் 06, 2012

வாசம் இல்லாத ரோசா!

இதோ நமது எதிர்காலம்!


பிறந்த தினமே - செயற்கையைப்
போர்த்திக் கொண்டு,
பால்மணம் மாறிப் போகும்,
பிஞ்சுப் பூக்கள்!

வாசலில் இறங்கியதும் - என்றும்
வேகமாய் ஓடுது,
இருசக்கர வாகனம் நோக்கி,
நமது கால்கள்!

நடப்பது குறைந்து - பகட்டாய்
நடிப்பது தொடங்கிய,
நேற்றைய தினம் தொட்டு,
உடலில் நோய்கள்!

மருந்தாய் இங்கே - இயற்கை
மூலிகைகள் ஆயிரம்,
இருந்தும் மனம் நாடுது,
வெளிநாட்டு வில்லைகள்!

எதிலும் செயற்கை - ரோசா
வாசம் மறந்திடும்,
வாசனைத் திரவியம் மட்டுமே
நமக்குத் தெரிந்திடும்!

வாகனப் புகை - இங்கு
மேகமாய்ப் பரவி,
வாசனை நுகரும் திறனை
வேகமாய் அழித்திடும்!

வாசமே தெரியாது - மூக்கு
இருந்தும் இல்லாததே,
மூக்கிருக்கும் சூற்பனகைகளாகி உலகம்
செயற்கையாய் சுவாசித்திடும்!

5 கருத்துகள்: