வியாழன், ஜூன் 07, 2012

கனவுக் கணவன்!


நீயும் நானும்!

நான், நாள் முழுக்க நடந்ததை,
இரவெல்லாம் கதையாய்ச் சொன்னால்,
"ஏன் இப்டி படுத்துற?" செல்லமா மிஞ்சி,
காதலோட கேக்கணும்!

நான் எழுதிய கவிதையெல்லாம்,
வாசிச்சு வாசிச்சுக் காட்டினா,
சலிப்புப் பார்வை பாக்றது போல,
தேவதையாப் பாக்கணும்!

வேலைக்குப் போயிட்டு வீடு வந்தா,
என்னோட கண்ணாமூச்சி ஆடனும்,
கண்டுபுடிச்சதும் சீண்டணும்,
அள்ளி உப்பு மூட்ட தூக்கணும்!

தப்புத் தப்பா செஞ்சு நின்னா,
தட்டி நாலு போடணும்,
சண்டைபோட்டுத் திட்டணும்,
என்ன அழ வைக்கணும்!

அழுது ஒரு நாள் முழுக்க,
சோகமா நானிருக்கணும்,
நாள் முடிவுல நீ வரக்குடாது,
நான் தான் மனிப்புக் கேட்கணும்!

உன் மேல தப்புன்னு,
நான் சண்ட போட்டா,
நீ, "என் தப்பு தான்டா.."
செல்லமா மன்னிப்புக் கேக்கணும்!

எனக்குக் காய்ச்சல்னா,
உனக்குப் பாதி தருவேன்,
உனக்குக் காய்ச்சல்னா,
எனக்கு நீ பாதி தரணும்!

என்னையே சுத்துற,
நாய்க்குட்டி போல இருக்கக் கூடாது,
கோபத்தைக் கொட்டுற,
எரிமலையா இருக்கக் கூடாது!

உள்ளே பாசம் இருக்கணும்,
வெளியே காட்டாம நடிக்கணும்,
நடிக்றதும் முழுசா தெரியாம,
என்னப் பாத்து சிரிக்கணும்!

நல்ல படிப்பு வேணும்,
நல்ல அறிவு வேணும்,
நாட்டு மேல கூட,
கொஞ்சம் காதல் வேணும்!

அம்மா அப்பாப் பாசம்,
நிறைய நிறைய வேணும்,
அவங்களுக்கு அடுத்துதான்,
மனைவினு நெனப்பும் வேணும்!

காதலிக்கும் நேரமெல்லாம்,
குழந்த போல இருக்கணும்,
என்னப் போல இல்லாம,
எனக்கு எதிரா இருக்கணும்!

ஓட்ட வாய் நான்,
பேசவே குடாது நீ,
தொட்டாச் சிணுங்கி நான்,
இரும்பா இருக்கணும் நீ!

பேரழகனா வேண்டாம்,
பணக்காரனா வேண்டாம்,
நல்லவனாப் போதும்,
என் மனசத் தெரிஞ்சவனா வேணும்!

சொன்னா சொல்லுவேன்,
நாள் முழுக்க,
அப்பா பாத்தா,
அடி விழுமுங்க!
:D :) :P ♥ 

6 கருத்துகள்:

 1. எனக்குக் காய்ச்சல்னா,
  உனக்குப் பாதி தருவேன்,
  உனக்குக் காய்ச்சல்னா,
  எனக்கு நீ பாதி தரணும்!

  Seekram oru nalla kanavan kidaika vaazthukkal sagothari :P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட நான் யாரோன்னு நெனச்சேன், தீபக் கார்த்திக் நீங்க தானா இது. மிக்க நன்றி :)

   நீக்கு
 2. very nice. நான் எதிர் பார்த்த கவிதைகளுள் ஒன்று. நான் விரும்பிய கவிதை. அருமையான கவிதை. இப்படியொரு கவிதை கொடுத்ததுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு