சனி, ஜூன் 16, 2012

ஊருக்காக - சிறுகதை.

அந்தப் பெரிய மனிதர் தான், ஊரில் எல்லாக் காரியத்திற்கும் முன் நிற்பார்.
கோயில் திருவிழா, சுதந்திர தின விழா, தெருக்கெட்டுப் பொங்கல், இப்படி எல்லாவற்றிர்க்கும் அவர் தான் முன் நிற்பார்.

ஒவ்வொரு விழாவிலும் அவரது பேச்சு நிச்சயம் இருக்கும், மேடையில் அருமையாகப் பேசுவார்.

"சாதிகள் இல்லை, நாம் அனைவரும் ஒரு தாய்ப் பிள்ளைகள், ஒற்றுமையாக இருக்க வேண்டும்...", இதுவே அவரது பேச்சின் மையக் கருத்தாக இருக்கும்.

அன்றும் ஒரு மேடையில் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

அவரது மனைவியும் மகனும் பெருத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

அதை அவர் தடுக்கவும் இல்லை, சண்டையில் பங்கெடுக்கவும் இல்லை. மாறாய் புலம்பத் தொடங்கி விட்டார். வெளியே தான் பேசுவார் அந்தப் பெரிய மனிதர், வீட்டிற்குள் நுழைந்ததும் புலம்பல் தான். தன் மகன் தன்னைப் போல பெரும் புகழோடு வரமாட்டான், படிப்பில் அவன் மோசம் என்று புலம்பத் தொடங்கி விடுவார்.

"படிக்காத முட்டாளா, வியாபாரம் செய்றான் அவன், அவன் மகனெல்லாம் படிக்கிறான் நல்லா.. ஆனா.. என் புள்ள..", இப்படி அடுத்தவனை நினைத்து நினைத்தே புலம்பிக் கொண்டிருப்பார்.

அவருக்கு ஒரு மகளும் இருந்தாள், சுட்டிப் பெண், அழகி, பார்த்தவுடன் யாருக்கும் அவளைப் பிடித்து விடும்.

வயது இருபது. திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன அவளுக்கு.

"என்ன, உங்க பொண்ணுக்கு இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் வச்சுட்டிங்க..?" இப்படி பார்ப்பவர்கள் எல்லாம் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

"நல்ல பையன், அதான்.." என்று தன் மாப்பிள்ளையின் பெருமை பேச ஆரம்பித்து விடுவார் உடனே அவர்.

மணப்பெண்
திருமணம் முடிந்தது நல்ல விதமாக. அவரது மகள் அவ்வளவு அழகாக இருந்தாள் அந்தக் கல்யாணக் கோலத்தில்.

திருமணம் முடிந்ததும், அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தார்கள் மாப்பிள்ளையும் மகளும்.
வழக்கம் போல ஒருவர், "ஏன் இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் வச்சிட்டிங்க..", என்று அந்நேரம் கேட்டுக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதரிடம்.
அந்தப் பெரிய மனிதரும் பதிலாகச் சொல்லிக் கொண்டு இருந்தார் மாப்பிள்ளையின் பெருமைகளை.

அங்கு வந்த மாப்பிள்ளைக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது தன் மாமனார் தன்னைப் பற்றி மற்றவரிடம் புகழ்ந்து சொல்வதைக் கேட்க.

மகள் நினைத்துக் கொண்டாள் மனதிற்குள், "என் காதலன் வேற சாதி.. அதான் எங்க சாதிப் பையனோட, சீக்கிரமா எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு..!"

----------------------------------------------------------------------

இதோ ஊருக்காகத் தான் பேசினார் இவர், "சாதிகள் இல்லை.." என்று.

இதோ அதே ஊருக்காகத் தான், ஊர் தவறாகப் பேசும் என்று தான், "சாதிக்கு முக்கியத்துவம்" கொடுக்கிறார்.

சாதிகள் இல்லையடி பாப்பா???

8 கருத்துகள்:

 1. செருப்பால அடிக்குற மாதிரி ஒரு கதை... செருப்பால அடிச்சும் துடசுக்குற சிலருக்கு புரியுமா தெரியல :(

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் சாதி பார்த்து தான் காதல் செய்வீர்களா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிக் காதலிப்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

   நீக்கு
 3. கனவாகிப்போன காதல்!!!!!

  உன்னை பார்த்த முதல் கணமே,
  உன் அனுமதியின்றி காதல் செய்தேன் ...
  உன் மீன் போன்ற விழிகளால் வலை
  விரிக்கப்பட்டு ,வீழ்த்தப்பட்டேன்...
  உன்னை காணுவதற்காக என் கால்களை வேலை வாங்கினேன் ...
  இமை மூட பயந்தேன் , .
  நிமிடங்களை கணக்கிட்டு செலவு செய்தேன்...

  உன்னை பார்த்த நிமிடங்களை ,
  பொக்கிஷமாய் நெஞ்சில் புதைத்தேன்..
  உன்னை காணாத நொடிகளை,
  நகர்த்த முயற்சி செய்தேன்...

  உன் முன் மௌனமாகும் உதடுகளை விட்டு,
  கண்கள் மூலம் காதலை சொல்ல முயன்றேன் ...
  என் காதல் உனக்கு புரிந்ததா? இல்லையா?
  என்று எண்ணி நித்திரை தொலைத்தேன் ..

  நிஜங்களை வெறுத்தேன், கனவுகளை நம்பினேன்..
  இப்படி உன்னால் உண்ணாமல் திரிந்தேன்,
  உன்னில் உயிராக வாழ ...

  உன்னை விட்டு பிரிய போகிறேன்
  உன் அனுமதியின்றி கண்ணீருடன் ,
  உன் நினைவுகளை உன்னிடம் கடனாக பெற்று..

  .காரணம் கேட்காதே ...
  இது விதியின் வஞ்சனை,...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கவிதை. கதையை வாசித்தமைக்கு நன்றி.

   நீக்கு