ஞாயிறு, ஜூன் 24, 2012

அழகு!

இது எனது தோழன், Christopher Joseph எடுத்த புகைப் படத்தைப் பார்த்ததும், எனக்குத் தோன்றிய சில வரிகள்.


உண்மைக் கண்களால்,
உற்று நோக்கியதில்லை!
உன் புகைப்படக் கண்களால்,
உற்று நோக்கச் செய்து விட்டாய்!

வியர்த்து நிற்கும்,
இந்த உழைப்பாளிகளின்,
வியர்வை அழகு!


குளித்து நிற்கும்,
இந்தப் பேரழகியின்,
புன்னகை அழகு!


அழுது நிற்கும்,
இந்த சிறு பிள்ளையின்,
சிணுங்கல் அழகு!


இதோ,
உதட்டுச் சாயம் பூசி நிற்கிறாளே,
இந்தப் பச்சைச் சீலைக்காரி,
இவனது காதலியோ?


Nature

14 கருத்துகள்:

 1. பெயரில்லா6/24/2012 7:44 முற்பகல்

  மழைத்துளியில் நனைந்திருக்கும் இலைகள் கண்மணிக்குள் இருக்கும் கவிதாயினியை
  எத்தனை தூரம் தொட்டிருக்கிறது என்று உங்கள் கவிதை வரிகள் சொல்லுகின்றன. அழகான புகைப் படத்திற்கு மிக அழகான வரிகள்!
  மழைதுளிக்குத் தான் எத்தனை உதாரணங்கள்! வியர்வை, நீர்த் துளிகள், கண்ணீர்த் துளிகள் என்று அசத்தி விட்டீர்கள் கண்மணி! பாராட்டுக்கள். உங்கள் நண்பரின் புகைப்படம் அழகா, உங்கள் கவிதை அழகா? இரண்டுக்கும் சேர்த்துத்தான் 'அழகு' என்று பெயர் இட்டீர்களோ?

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா6/24/2012 7:45 முற்பகல்

  சிணுங்கல்கள் என்று இருக்க வேண்டும் இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அச்சுப் பிழை. குறிப்பிட்டமைக்கு நன்றி.

   நீக்கு
 3. Thanks for bringing the best out of my photo!
  Proud of you!

  Regards,
  Christopher

  பதிலளிநீக்கு
 4. Thanks for bringing the best out of my photo!
  Proud of you!

  Regards,
  Christopher

  பதிலளிநீக்கு