முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் வாழும் நிச்சயமாக! ஆனால் தமிழர் கலாச்சாரம்?


நமது தமிழ் சூரியன் போல. புயல் அடிப்பதால் சூரியன் அணைவதில்லை பாருங்கள்.

"உணவுப் பழக்கம், உடை உடுத்துவது, விருந்தோம்பல், தமிழ் பெண்களுக்கே உரிய நாணம்?" இப்படி ஒவ்வொன்றிலும் தனித்துவம் வாய்ந்தவர்கள் நாம்!

ஆனால் இன்று? நமது தனித்துவம் மறைந்து வருவது கண்கூடாகத் தெரியுதே? எல்லாவற்றிலும் கலப்பு! உடுப்பு, படிப்பு, இப்படி எல்லாவற்றிலும் ஆங்கில வாசனை நுகர்ந்தே சுகம் கண்டு பழகிவிட்டோம்!

கூட்டுக் குடும்பங்கள் கரைந்து போய் விட்டன;
பாட்டிக் கதைகள் முதியோர் இல்லம் அடைந்தன!
விருந்தோம்பல் பசியால் மெலிந்து போயிற்று!
பெண்மையின் நாணம் கூட நாணி நாணி மறைந்து போய்விடும் போல!
எறும்புகள் பசியாற முற்றத்தில் கோலமிட்ட நம் ஈகை உள்ளம் இன்று சுருங்கிப் போனதேனோ? அர்த்தம் நிறைந்தவை நமது முன்னோர்களின் பழக்கங்கள் எல்லாம். அர்த்தமற்றவையாய் மாற்றிவிட்டோமே?

எழுதும் எழுத்தில், கவிதையோ கதையோ, ஆங்கிலம் கலந்தால் தான் இணையத்தில் விருப்பங்கள் அதிகம் கிடைக்கிறது!

ஆங்கிலமும் ஆங்கிலேயரும் நமக்கு எதிரிகள் அல்ல! ஆனால், நம் மொழியையும், கலாச்சாரத்தையும் நமக்கு எதிரி போல எண்ணுவது, தவறல்லவோ?

"காலத்திற்கேற்ப மாற்றம் தேவை தான். ஆயினும் இப்படிப்பட்ட மாற்றங்கள் நமது தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அவசியமானதா?"

இதை உங்களிடம் நீங்களே இருமுறை கேட்டுப்பாருங்கள். மாற்றம் என்னிடமும், உங்களிடமும் இருந்து பிறக்கட்டுமே?

கருத்துகள்

 1. SUjatha oru katturai gyabagathukku varuthu...
  Tamil kalachaaram ah ? mudhalla tamilar gal irukangala nu paarunga...
  Online la tamil iruppathe intha maaro blogs la than theriyuthu..
  Aporam, neenga solra maari kalacharam kai vitttu poitu than irukku, 1st century la vaztha maari ippo namma vazhrathu illa..

  munnetram ngra name la namma romba fast ah alinjitu varom ngrathu oru kasappana unmai...

  பதிலளிநீக்கு
 2. உண்மை தான். மாற்றம் உயர்வுப் பாதையை நோக்கி இல்லை, மாறாக அழிவை நோக்கிச் செல்கிறது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. உங்களை சகோ சீனு வலைச் சரத்தில் அறீமுகம் செய்துள்ளார் , பார்க்க :
  http://blogintamil.blogspot.in/2013/02/tamil-bloggers-3.html

  பதிலளிநீக்கு
 4. ஆங்கிலமும் ஆங்கிலேயரும் நமக்கு எதிரிகள் அல்ல! ஆனால் அவை இரண்டும் நம் தமிழை நமக்கு எதிரியாக மாற்றி விட கூடாது.. நல்ல கருத்து.. (எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்....)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா?
என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள்.
இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது!
சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே காசு கேட்பா…

இருபத்தியாறு (21+4) வயதினிலே!

"என்னடா இந்தப் பொண்ணு கணக்குல கொஞ்சம் வீக்கோ?", என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. உண்மை தான், கொஞ்சம் வீக் தான். ஆனால், இப்போது எனக்கு இருபத்தியாறு வயது துவங்கி இருக்கிறது, அதனால் தான் முடிந்த வயதை கணக்குப் போட்டு இருக்கிறேன். புரிகிறதோ? 
21 வருடம் அம்மா அப்பா கையைப் பிடித்துக் கொண்டு இருந்தேன். 4 வருடம் தனியாக இருந்தேன். இப்போதும் தனியாகத் தான் இருக்கிறேன். (தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ!)
சரி இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் நான் "இது சரி", "இது தவறு", என்று இப்போது வரை கற்று இருப்பவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். விருப்பம் இருந்தால் வாசித்துப் பாருங்கள். இதில் இருப்பவை எல்லாம் என்னுடைய சுய அனுபவங்கள் கொண்டு நான் எழுதி இருப்பவை. உங்களுக்கும் இது சரியாக இருக்க அவசியம் இல்லை.   
சரி "வளவள" என்று பேசாமல் சொல்ல வந்ததைச் சொல்கிறேன், கேளுங்கள்!
இதில் வெவ்வேறு தலைப்புகளாகப் பிரித்து எழுதி இருக்கிறேன், பின்னாளில் நான் மறுபடி இதைப் படித்துப் பார்க்கையில் எனக்கு எளிதாக இருக்கும் பாருங்களேன்? பெரும்பாலும் நான் எழுதுவதெல்லாம், எனக்காகத் த…

இது ஒரு சிக்கன் கதை!

சிக்கன்! அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்!?
எப்போதும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன் சமைக்கும் வாசம், அற்புதமாகவும், சைவம் சாப்பிடுபவர்களுக்கு அது “அய்யோ... என்ன கருமம்!”, என்பது போலவும் இருக்கும்!
இதில் நான் முதல் வகை, அசைவம் சாப்பிடும் வகை!
என் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டால் தெரியும், எனக்கு எவ்வளவு பிடிக்கும் அசைவ உணவு என்பது!
எனக்கு ஒரு அத்தை இருக்கிறார், அவர் வீட்டிற்குச் சிறுவயதில் சென்ற போது, ஒரு முறை, ஒரு அரைக் கிலோ மீனை ஒரே ஆளாகச் சாப்பிட்டேனாம்!
”புரட்டாசி மாதம், அசைவம் சாப்பிடக் கூடாது, வெள்ளி, செவ்வாய் பிறகு சனி, அசைவம் சாப்பிடக் கூடாது”, இப்படி என் அம்மா போடும் விதிகள் எல்லாம், அப்பா... எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது!
அதென்னவொ, அசைவ உணவின் ருசி அத்தனை அருமை! (இதைத் தான் பசிக்கு உண்ணாமல் ருசிக்கு உண்பது என்பார்களோ???)
என் அப்பா அசைவம் சாப்பிடமாட்டார் அதிகம், நானும் அம்மாவும் தான், வற்புறுத்தி சாப்பிட வைப்போம். அவர் உடனே சொல்வார், “ஊன் வளர்க்க ஊன் உண்ணக் கூடாது”, என்றெல்லாம்.
என்னையும் அசைவம் சாப்பிடாதே, விட்டுவிட…