முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குப்பை - சிறுகதை

அந்த இரண்டு சிறுவர்களும்  விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த தெருவோரக் குப்பைத் தொட்டி தான் அவர்களுக்கு விளையாட்டு மைதானம்! அழுக்கு உடையும், பரட்டைத் தலையும், பழுப்புப் பற்களுமே அவர்களது அடையாளம்.

குப்பையில் கிடந்த உடைந்த பொருள் ஒன்று அவர்களது கண்ணில் பட்டது, எடுத்துக் கொண்டார்கள் கையில், பளபளவென இருந்தது அது.

"டேய், கடைல போட்டா நெறைய காசு கிடைக்கும் டா..", ஒருவன் ஆலோசனை சொல்ல, "ஆமாடா.." இன்னொருவன் ஆமோதித்தான்.

கடையை நோக்கிப் பயணப்பட்டார்கள். போகும் வழியில் அவர்களுக்குள் ஒப்பந்தம், வருவதில் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்வதென்று.

கடையில் சென்று கேட்டார்கள், "ஐயா.. இதுக்கு எவ்வளவு கெடைக்கும்?"

கடைக்காரர் அதை வாங்கிக் கொண்டு, உற்றுப் பார்த்தார், பிறகு இவர்களை ஒருமுறை உற்றுப் பார்த்தார்.

"இது எங்கடா இருந்தது?"

"குப்பைல"

"நூறு ரூவா கெடைக்கும், பித்தளப் பொருள் தான்."

"நூறு ரூவாயாம்டா.." இருவரும் காதுகளுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். நூறு ரூபாய் அவர்களுக்குப் பெரிய தொகையாக இருந்தது.

நூறு ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஆனந்தமாக அந்தத் தெருவில், அரசர்கள் போல நடந்து சென்றார்கள்.

அந்தக் கடைக்காரருக்கோ ஆனந்தம், "உடைந்து போன ஒரு தங்கக் கோப்பையின் பகுதிக்கு, நூறு ரூபாய் கொடுத்து சிறுவர்களை ஏமாற்றி விட்டோம்", என்று.

அது எப்படியும் பத்தாயிரம் தேறும். கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்.

சிறுவர்கள் அந்த நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு, ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்தார்கள், உணவு உண்டு விட்டு, மதியம் உண்பதற்கு ரொட்டி வாங்கிக் கொண்டு புறப்பட்டார்கள்.

போகிற வழியில், இருவரும் ரொட்டியை சரி பாதியாக பங்கிட்டுக் கொண்டார்கள். அவர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்ததை ஒரு நாய் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தது.

"பாவம், பட்டினி போலும் அந்த நாய்", அதைப் பார்த்ததும் நினைத்தார்கள் இருவரும்.

ரொட்டியை பங்கிட்டுக் கொண்டார்கள் அந்த வாயில்லா உயிரிடமும்.

புன்னகையோடு, அது சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும் கண் இமைக்காமல் சிறிது நேரம்!

---------------------------

கோபுரத்தில் இருந்தும் சிலர் குப்பை.
குப்பையில் கிடக்குது சில மாணிக்கங்கள்!


கருத்துகள்

 1. Dear Bloggers!

  You will be glad to know that after thumping success of hamarivani.com, which is a unique rendezvous of Hindi bloggers and readers spread all over world, we are feeling jubilant to introduce Bloggiri.com.

  At Bloggiri, your blog will get a huge horizon of new readers to share thoughts and ideas with you, because your blog is just reflection of your soul and inner beautiful.

  Now what are you thinking, just submit your blog at Bloggiri.com and give a new meaning to your life.

  Happy Blogging!

  Team Bloggiri

  பதிலளிநீக்கு
 2. சிந்திக்க தூண்டும் நல்ல கதை...

  பதிலளிநீக்கு
 3. dont forget to see this post:

  http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post.html

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா?
என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள்.
இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது!
சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே காசு கேட்பா…

இருபத்தியாறு (21+4) வயதினிலே!

"என்னடா இந்தப் பொண்ணு கணக்குல கொஞ்சம் வீக்கோ?", என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. உண்மை தான், கொஞ்சம் வீக் தான். ஆனால், இப்போது எனக்கு இருபத்தியாறு வயது துவங்கி இருக்கிறது, அதனால் தான் முடிந்த வயதை கணக்குப் போட்டு இருக்கிறேன். புரிகிறதோ? 
21 வருடம் அம்மா அப்பா கையைப் பிடித்துக் கொண்டு இருந்தேன். 4 வருடம் தனியாக இருந்தேன். இப்போதும் தனியாகத் தான் இருக்கிறேன். (தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ!)
சரி இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் நான் "இது சரி", "இது தவறு", என்று இப்போது வரை கற்று இருப்பவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். விருப்பம் இருந்தால் வாசித்துப் பாருங்கள். இதில் இருப்பவை எல்லாம் என்னுடைய சுய அனுபவங்கள் கொண்டு நான் எழுதி இருப்பவை. உங்களுக்கும் இது சரியாக இருக்க அவசியம் இல்லை.   
சரி "வளவள" என்று பேசாமல் சொல்ல வந்ததைச் சொல்கிறேன், கேளுங்கள்!
இதில் வெவ்வேறு தலைப்புகளாகப் பிரித்து எழுதி இருக்கிறேன், பின்னாளில் நான் மறுபடி இதைப் படித்துப் பார்க்கையில் எனக்கு எளிதாக இருக்கும் பாருங்களேன்? பெரும்பாலும் நான் எழுதுவதெல்லாம், எனக்காகத் த…

இது ஒரு சிக்கன் கதை!

சிக்கன்! அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்!?
எப்போதும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன் சமைக்கும் வாசம், அற்புதமாகவும், சைவம் சாப்பிடுபவர்களுக்கு அது “அய்யோ... என்ன கருமம்!”, என்பது போலவும் இருக்கும்!
இதில் நான் முதல் வகை, அசைவம் சாப்பிடும் வகை!
என் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டால் தெரியும், எனக்கு எவ்வளவு பிடிக்கும் அசைவ உணவு என்பது!
எனக்கு ஒரு அத்தை இருக்கிறார், அவர் வீட்டிற்குச் சிறுவயதில் சென்ற போது, ஒரு முறை, ஒரு அரைக் கிலோ மீனை ஒரே ஆளாகச் சாப்பிட்டேனாம்!
”புரட்டாசி மாதம், அசைவம் சாப்பிடக் கூடாது, வெள்ளி, செவ்வாய் பிறகு சனி, அசைவம் சாப்பிடக் கூடாது”, இப்படி என் அம்மா போடும் விதிகள் எல்லாம், அப்பா... எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது!
அதென்னவொ, அசைவ உணவின் ருசி அத்தனை அருமை! (இதைத் தான் பசிக்கு உண்ணாமல் ருசிக்கு உண்பது என்பார்களோ???)
என் அப்பா அசைவம் சாப்பிடமாட்டார் அதிகம், நானும் அம்மாவும் தான், வற்புறுத்தி சாப்பிட வைப்போம். அவர் உடனே சொல்வார், “ஊன் வளர்க்க ஊன் உண்ணக் கூடாது”, என்றெல்லாம்.
என்னையும் அசைவம் சாப்பிடாதே, விட்டுவிட…