சனி, ஜூலை 28, 2012

கடவுளே...! கடவுளே...!

நீண்ட நாட்களாக, உனக்கு ஒரு கடிதம் எழுத நினைத்திருந்தேன். நேரம் இல்லை, அதனால் தான் எழுத முடியவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். நிறைய நேரம் இருந்தது, என்ன எழுதுவதென்று தான் தோன்றவில்லை. இதோ, இன்று தோன்றுகிறது. கேட்கத் தோன்றுகிறது. எதை எதையோ, கேட்கத் தோன்றுகிறது.

எது கேட்டாலும் நீ கொடுக்கப் போவதில்லை நான் அறிவேன், ஆதலால், நான் கேட்கப் போவதில்லை. கேட்பதற்கு மாறாகக் கொடுப்பது உன் வழக்கம். அதனால், எதுவும் வேண்டாம் அப்பா.

சரி, கேட்பதற்காகத் தானே உன்னை நாடிடுவார்கள், கேட்பதற்காக இல்லை என்றால், நான் எதற்காக வந்திருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். கொடுப்பதற்காகவா?

நினைக்காதே, கடவுளுக்கே கொடுக்கும் அளவிற்கு இவளிடம் என்ன உள்ளது என்று. கொடுக்கத் தான் வந்திருக்கிறேன். உனக்கு நான் இன்று கொடுக்கத் தான் வந்திருக்கிறேன்.

என்ன கொடுக்க? பாவம் உன்னிடம் அது  இல்லை, அதைத் தான் கொடுக்கலாம் என்று வந்திருக்கிறேன். யோசித்துப் பார், உன்னிடம் என்ன இல்லை? கடவுளிடம் இல்லாததும் இருக்க முடியுமா? முடியும், யோசித்துப் பார், உன்னிடம் அது இல்லை, தேடிப் பார், உன்னிடம் அது இல்லை.

எது? எது? அது உன்னிடம் இல்லை. எது?

கண்ணீர். கண்ணீர். அது உன்னிடம் இருந்ததுண்டா? நீ அழுததுண்டா? உன்னை அழ வைத்துப் பார்ப்பது என் ஆசை இல்லை. நான் அத்தனை கொடூரமானவள் இல்லை.

ஆனால், இங்கு என்னோடு இருக்கும் பலரையும் நீ தினம் அழ வைத்துப் பார்க்கிறாயே? நியாயமா? சொல், நியாயமா?

துன்பம் இல்லையே ஆனால்,
இன்பத்தை ஒரு போதும்,
உணர முடியாது. 

நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், சிலருக்கு நீ இன்பமே கொடுக்காமல், கண்ணீர் மட்டும் தந்திருக்கிறாயே? இது ஏனோ?

அழுது பார். நீயும் அழுது பார். உன் விதியை சற்று மாற்றி எழுதி, அழுது பார். சொந்தங்கள் இழந்து, வாழ இடம் இல்லாமல், உன்ன உணவில்லாமல், அழுது பார். சோகத்தை உணர்ந்து பார்.

இன்பமே இல்லாமல், சில நாட்கள், அகதியாக வாழ்ந்து பார். புரியும், உனக்கும் புரியும்.

நீ அழுது பார்த்து விட்டாய் என்றால், ஆறுதல் சொல்ல, அரவணைக்க ஆளின்றி அழுது பார்த்து விட்டாய் என்றால், இங்கு எதுவும் இப்படி இருக்காது.

எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம், நீ அழுது பார், வருந்திப் பார், அது போதும்!

மதங்களைக் கடந்தவனே, அழுது பார். உன் பெயரைச் சொல்லி, போர் செய்யும் சிலரை நினைத்து அழுது பார். இந்தப் போராட்டங்களால், பெற்றோர் இழந்த குழந்தையாக நீ இருந்து, அழுது பார்.

போதும். அது போதும். அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். அழுது பார்.

( தவறாக ஏதேனும் குறிப்பிட்டிருந்தால், மன்னிக்கவும், இதை யாரையும் புண் படுத்தும் நோக்கத்தோடு எழுதவில்லை. அனைத்தும் கற்பனையே.)

8 கருத்துகள்:

 1. //இதை யாரையும் புண் படுத்தும் நோக்கத்தோடு எழுதவில்லை. அனைத்தும் கற்பனையே//

  இது உங்கள் உணர்வுகளின் பதிவு இதை கற்பனை என்று சொல்லி விட முடியாது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதாவது, கடவுளுக்குக் கடிதம் எழுதுவதென்பது, கற்பனை தான் அல்லவா? இது சாத்தியம் அல்ல? சரி தானே?

   நீக்கு
  2. Kanmani,
   I agree with Vijayan. this is not a mere imagination. It's your emotions. Though it's not possible for HIM to read it here, HE can read from your mind..:)

   I am sure you don't hurt anyone with this letter..

   Happy Blogging :)

   நீக்கு
 2. பெயரில்லா7/29/2012 3:09 முற்பகல்

  நல்ல கடிதம் கண்மணி! நிறைய சிந்திக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு