முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ நினைத்தால் வாழலாம்!


இது தான் என்னுடைய இறுதிப் பதிவு, எனக்கு வாழவே பிடிக்கல, இந்த உலகமே என்ன எதிரியாப் பாக்குது, எனக்கு வாழ வழியே இல்ல! நான் அதனால தீக்குளிக்கப் போறேன்!!!

"அட என்னடா இது, தீக்குளிக்கப் போறாளா இந்தப் பொண்ணு??"னு நெனைக்கறீங்களா? அட சும்மா சொன்னேன்! ஆனா இத சொல்றப்போ எனக்கு அவ்வளவு வருத்தம் தெரியுமா? :(  :(
அரசாங்கம் செய்ற ஒரு விஷயம் பிடிக்கலையா? இல்ல, உங்க தலைவருக்கு எதிரா ஏதும் நடக்குதா? அட, தீக்குளிச்சு எதிர்ப்பு தெரிவியுங்கப்பா!!! :( :(
ஏன்? ஏன் இப்படி தீக்குளிக்கணும்? நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்கு, அதுக்காக ஏன் நம்மள நாமே வருத்திக்கணும்?
புகைப்படம்: google images
உதாரணத்துக்கு,
  • பரிட்சையில் தோல்வி,
  • காதல் தோல்வி
  • வியாபாரத்தில நட்டம்
  • கடன் தொல்லை
  • குடும்பப் பிரச்சனை
  • வேளையில் பிரச்சனை! 
உடனே தற்கொலை! தற்கொலை! :( இப்படி நிறைய சொல்லலாம். ஏன்? இருக்கும், இப்படி தோல்வியை சந்திக்கும் பொழுதெல்லாம் வேதனையாக இருக்கத்தான் செய்யும். அதற்காக தற்கொலை செய்து கொண்டா? நம்மைச் சார்ந்து இருக்கும் எத்தனை பேர் வேதனை அடைவாங்க? இதையெல்லாம் நாம நினைப்பதே இல்ல!
அட, நான் இப்படி வாய் கிழியப் பேசறேன்! நானே தற்கொலை செய்ய முயற்சி செஞ்சிருக்கேன்!? ஆமா, உண்மையா தான். இது எங்க அம்மாவுக்கே இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும், நீங்களும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்க!??
ரகசியம் சரியா? இதோ என் தற்கொலை கதை!
அப்போ, எனக்கு ஒரு பத்து வயசு இருக்கும், சின்னப் பொண்ணு நான்  :) (இப்போ எனக்கு 19! :) வளந்துட்டேன்) அப்போ எல்லாம் நிறைய சேட்டை செய்வேன், ( இப்போ நான் ரொம்பச் சமத்து!) அம்மா கிட்ட நான் அடி வாங்காத நாளே இருக்க முடியாது. ஒரு நாள் ஏதோ சேட்டை செஞ்சேன்னு எங்கம்மா நல்ல அடி! அப்படி அடி வாங்குனேன்! :( 

ஒடன ஒரு யோசனை தோனுச்சு, "என்ன உலகமடா இது, நம்ம செத்துப் போய்டலாம்னு"நெறைய தொலைக்காட்சில தற்கொலை பண்றதெல்லாம் பாத்திருக்கேன் நான், அதனால, முடிவு செஞ்சேன், நம்ம ஏதாவது மாத்திர நெறைய சாப்டா செத்துப் போய்டுவோம்னு! நான் மாலை நேரத்துல டியூஷன்(tution) போவேன் அப்போ. சரி, டியூஷன் போகறதுக்கு முன்னாடி மாத்திர நெறைய சாப்டுட்டு போயிடலாம்னு முடிவு செஞ்சேன். சாமி எல்லாம் கும்டேன்! எதுக்குன்னு கேக்கறிங்களா? "சாமி எனக்கு சாகும்போது வலிக்கக் குடாதுனு " வேண்டிக்கிட்டேன்! :D
மாத்திரைய சாப்டுட்டு போயிட்டேன் டியூஷனுக்கு. ஒரு மணி நேரம் ஆச்சு, தல சுத்தும்னு பாத்தேன் சுத்தல, சரி இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் போலன்னு நெனச்சேன்! ரெண்டு மணி நேரம் ஆச்சு! அப்பவும் ஒன்னுமே ஆகல! வீட்டுக்கே வந்துட்டேன், அப்பவும் எனக்கு ஒன்னுமே ஆகல! ரொம்ப சுறு சுறுப்பா இருந்தேன் வழக்கத்துக்கு மாறா!

அன்னிக்கு இரவே எங்க அம்மா வந்து, "ரொம்ப அடிச்சிட்டனா? வலிக்குதா இன்னும்" னு சமாதானம் பேசிட்டாங்க! அப்போ நெனச்சேன், "அட நல்ல வேள நம்ம சாகலன்னு"

ஆனா? ஏன் சாகல நான்? :) :) :) ஏதோ மாத்திர தான சாப்டேன், நான் சின்னப் பிள்ளைல அப்போ, வெவரம் தெரியாம சத்து மாத்தரைய சாப்டிருக்கேன்! :) :) :)

நல்ல வேளை, ஏதும் ஆகல எனக்கு.

இந்தக் கதைய, என்னோட கதைய ஏன் சொல்றேன்னா. "தற்கொலை" இது ரொம்ப சிறு பிள்ளைத் தனமான முடிவு, என்னைப் பொறுத்த வர. இப்போ அன்னிக்கு நான் மட்டும், உண்மையாவே ஏதோ மாத்திர சாப்டு உயிர் போய் இருந்தா????  அம்மா.. என்னால நெனச்சும் பாக்க முடியல! இப்போ அந்தப் பழைய நாட்கள நெனச்சுப் பாத்தா சிரிப்பா வருது எனக்கே! :) :) சரி சரி சிரிக்காதிங்க நீங்க!

இப்போ பெருசா பாரமா இருக்கற ஒரு விஷயம் பிற்காலத்துல ஒரு எளிமையான விஷயமா இருக்கும்! சரி தானே?!

இப்பவும் எனக்கு எப்போவாவது ரொம்ப வருத்தமா இருந்தா,  சின்ன வயசுல நான் செஞ்ச "தற்கொலை" விளையாட்ட  நெனச்சுப்பேன். சோகம் மறைஞ்சு போயிடும்னு ஒரு நம்பிக்க வரும்!

நமக்கு ஏற்படும் துன்பத்துக்காக,

  • உணவு உண்ணாம இருப்பது.
  • நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வது
  • "தற்கொலை" செய்து கொள்வது!
இதெல்லாம் செய்வது நல்லதில்ல! இதெல்லாம் சின்னப் பொண்ணு நானு, எனக்கே சிறுபிள்ளைத் தனமா தெரியுது. உங்களுக்கும் தானே?

இனி உங்களுக்கு ஏதாவது சோகம்னா என்னோட "தற்கொலை" கதைய ஞாபகம் வச்சுக்கோங்க, :) :) சோகம் சும்மா வேகமா பறந்துடும் உங்கள விட்டு! :) 

வாழ நினைத்தால் வாழலாம்,
வழியா இல்லை உலகிலே??!



கருத்துகள்

  1. எனக்கு விருது கொடுத்துருக்காங்க... அதனை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்..
    என் தளத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்...
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி :) :) இதோ வரேன் வாங்கிக்க :)

      நீக்கு
  2. பெயரில்லா9/01/2012 7:24 AM

    வாழ பல வழிகள் உண்டு என்பதை பதிவின் மூலம் அறிய முடிந்தது .

    நல்ல பதிவு சகோ

    பதிலளிநீக்கு
  3. கண்மனி , தங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்ததில் மகிழ்ச்சி.என் வலைப்பூவில் பதிவர் சந்திப்பில் நான் சந்தித்த சாதனைபதிவர் பற்றி ....
    http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  4. தற்கொலை எந்த சூழலிலும் அவசியமற்றதுதான். நல்ல பதிவு:)

    பதிலளிநீக்கு
  5. கடந்த காலம் என்பது, நினைவுகள் அசை போட இனிப்பாகத் தான் இருக்கும்.
    நிகழ்கின்ற நொடிதனில்...
    சிந்தனைக் கொலைகள் ஏராளம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உங்களால் உணர முடிகிறதா...
    தொடர்ந்து எழுதுங்கள்.
    - சந்திரபால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்