முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"நாம்" பேசப் போகிறோம்!

என்ன பேசப் போகிறோம்?

நம்மைப் பற்றி தான். ஆம், நாம் என்றால் இங்கு யாரைக் குறிக்கிறது இந்த "நாம்"?


நாம் --> ஆண், பெண்! இது இரண்டு தான்.சரி, அதில் என்ன? என்கிறீர்களா?

பொதுவாகவே, ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது என்பதை பாவமாகப் பார்க்கும் சமூகம் நம்முடையது!??!!
 ஆம், நட்பாகப் பேசினால் கூட சில சமயம், இல்லை, பல சமயம், தவறாகத் தான் பார்க்கிறது. சரி, அதனால் என்ன என்கிறீர்களா?

ஆணும், பெண்ணும் பேசுவதில் தவறே இல்லை! இப்போது, இந்தப் பதிவை வாசிக்கும் நீங்களே ஓர் ஆணாக இருப்பின், உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்வதில், தவறில்லை. தவறில்லை தானே?

ம்ம், பிறகு என்ன? ஏன் இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைத் தவறு என்கிறார்கள்?
பெண் பிள்ளை என்றால், பொன்னோ பொருளோ, என்று பொத்தி வைக்கிறார்கள்?

பல நேரங்களில் இந்த ஆண் பெண் கருத்துப் பரிமாற்றம், கருத்துப் பரிமாற்றத்தொடு நிற்பதில்லை!!! இது, இதனால் தானோ என்னவோ, பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்!

ஏதோ ஒரு தருணத்தில், வேறு மாதிரியாக வார்த்தைகள் மாறும்போது தான் பிரச்சனை!

 முறையோடு பேசுவது அவசியம். ஒரு பெண்ணோ, ஆணோ, புன்னகையோடு பேசுகிறார் என்பதற்காக, அதிகம் உரிமை எடுத்துப் பேசுவது, தவறு தானே?

வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்!


 என்னைப் பொறுத்தவரை, தவறே தான்.ஒரு கோடு, ஒரு எல்லைக் கோடு இருக்க வேண்டும், அதைத் தாண்டாத வரையில் நன்மையே! தாண்டினால்?

திட்டுவாங்கிக் கொள்ளும் முன் புரிந்து கொண்டால், நல்லது! எல்லை தாண்டிப் பேசி, நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டாமே?!!?

ஆணோ, பெண்ணோ, யாராக இருப்பின், ஆணோ, பெண்ணோ, யாரிடம் பேசுவதாக இருப்பினும், "வார்த்தைகளில்" கவனம் இருக்கட்டும், கண்ணியம் இருக்கட்டும்!!!


தயவு செய்து, உங்களிடம் பேசுபவரை சங்கடத்துக்கு உள்ளாக்காதீர்கள்!

நான் உங்களைக் குறிப்பிடவில்லை பொதுவாகத்தான் சொல்கிறேன்!

இதோ, இதுவரை உங்களை நான் ஏதேனும் சங்கடத்துக்கு உள்ளாகும் படி பேசி இருந்தால், மன்னிக்கவும். முடிந்த அளவு, நான் அப்படிப் பேசாமல் இருக்கத் தான் முயற்சிக்கிறேன்!


பி.கு. - இதப் படிச்சிட்டு,கேள்வி எல்லாம் கேட்டு, கருத்துரை போடாதீங்க!

கருத்துகள்

  1. நம்மை பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ நாம் பிறரிடம் அவ்வாறு நடக்க வேண்டும்.. தனிமனித ஒழுக்கம் இருந்தால் தான் உருப்படியான, பயம் இல்லாத நல்லவர்கள் வாழும் சமுதாயம் அமையும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், உண்மை.
      //நம்மை பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ நாம் பிறரிடம் அவ்வாறு நடக்க வேண்டும்..//

      இது ஆண் பெண் நட்பிற்கு சற்றுப் பொருந்தாது என்று நினைக்கிறேன்.

      தனி மனித ஒழுக்கம் அவசியம்! "மிகவும்!"

      நீக்கு
  2. //நட்பாகப் பேசினால் கூட சில சமயம், இல்லை, பல சமயம், தவறாகத் தான் பார்க்கிறது. சரி, அதனால் என்ன என்கிறீர்களா?//

    ஏற்று கொள்கிறேன்

    //ஆணும், பெண்ணும் பேசுவதில் தவறே இல்லை! இப்போது, இந்தப் பதிவை வாசிக்கும் நீங்களே ஓர் ஆணாக இருப்பின், உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்வதில், தவறில்லை. தவறில்லை தானே?//

    பதிவுலகை பொறுத்தவரை (சமுக தளங்களை பொறுத்த) ஆண் பெண் என்பதை தவிர்த்து அவர்கள் முன்னிறுத்தும் கருத்தே எங்கள் கருத்தை பகிர்ந்து கொள்வதில் முன்னிலை படுகிறது என நினைக்கிறேன்

    //ம்ம், பிறகு என்ன? ஏன் இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைத் தவறு என்கிறார்கள்?//

    பார்க்கிறவர்களின் பார்வை பொருத்தது

    //பெண் பிள்ளை என்றால், பொன்னோ பொருளோ, என்று பொத்தி வைக்கிறார்கள்?//

    ஆண் கெட்டு போனா அவன் பெயர் மட்டுமே கெட்டு போவதாகும், பெண் கெட்டு போனால் குடும்பத்தின் பெயரும் சேர்ந்து கெட்டு போய்டும்னு நினைக்கிற நிலை மாறும் வரை தொடரும் என நினைக்கிறேன்.

    //பல நேரங்களில் இந்த ஆண் பெண் கருத்துப் பரிமாற்றம், கருத்துப் பரிமாற்றத்தொடு நிற்பதில்லை!!! இது, இதனால் தானோ என்னவோ, பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்!//

    இருக்கலாம்

    //முறையோடு பேசுவது அவசியம். ஒரு பெண்ணோ, ஆணோ, புன்னகையோடு பேசுகிறார் என்பதற்காக, அதிகம் உரிமை எடுத்துப் பேசுவது, தவறு தானே?//

    உரிமை என்பது கூட தனி ஆள் சம்மந்தப்பட்டு மாறும். காரணம் சிலருக்கு அரை மணி நேரம் கதைப்பதில் உள்ள திருப்தி சிலருக்கு நாள் முழுவதும் கதைத்தாலும் இருப்பதில்லை அதே போல தொட்டு கதைக்கும் இளைஞர் சமூகமும் உண்டு கிட்ட நெருங்கா இளைஞர் நட்பு சமூகமும் உண்டு. உரிமை என்பது அவர்களின் மட்டத்துக்கு மாறும்.. ஆகவே முறையான புரிந்துணர்வோடே உறவை வளர்த்தல் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்முடன் பேசுபவர் எவ்வளவு உரிமை கொடுக்க நினைக்கிறாரோ, அதை விட அதிகம் எடுத்துக் கொண்டு பேசுவது, சரியல்ல என்று நினைக்கிறேன்.

      கருத்துக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. சிவகாசியில் பட்டாசு சத்தம் எங்க ஊர் வரை கேட்குதுங்கோ..

    பதிலளிநீக்கு
  4. எனக்கு பிடித்த மொழி மௌனம்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், மௌனம் - விருப்பம், வெறுப்பு இரண்டையுமே சொல்லிவிடும் தான்.

      நன்றி, ஐயா.

      நீக்கு
  5. உங்கள் கருத்துடன் 100% ஒத்து போகிறேன். நானும் இதே போலே தொழிற் களத்திலே " நம்மைப் பற்றி நம்மிடமே பேசுவோமே..." என்று ஒரு பதிவு இட்டு உள்ளேன்.
    இதோ இணைப்பு : http://tk.makkalsanthai.com/2012/11/blog-post_4224.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பதிவை வாசித்தேன், உண்மை தான் நீங்கள் சொல்லி இருப்பது.
      நன்றி..

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்