கவிதை எழுதுவது பலருக்கும் இப்போதெல்லாம் கை வந்த கலை! நானும் ஒரு காலத்தில் கவிதை எழுதுவது பெரிய வித்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது நான் கவிதை எழுதப் போகிறேன், எனக்குப் பிடித்த கவிதை. இது உண்மையில் இதுவரை நான் முயற்சி செய்யாத ஒரு வகைக் கவிதை. சரி, கவிதை எழுதப் போகிறேன், என்ன கவிதை? கவிதையின் கருப்பொருள் என்னவாய் இருக்கும்? இப்படி எல்லாம் யோசிக்கிறீர்களா? சொல்கிறேன், இப்போது நான் எழுத இருக்கும் இந்தக் கவிதை, மிகவும் இனிமையானது. எனக்குப் பிடித்த என் தோழியைப் பற்றியது. ஆம், என் தோழிக்காக நான் எழுதும் கவிதை இது. அவளுக்கு எப்போதும் விளையாட்டு தான். சிரித்துக் கொண்டே இருப்பாள். இதோ இப்போது நினைத்தாலும் அவளது புன்னகை கண் முன்னே தெரிகிறது. “ சாப்டுவோம், கலக்கீட்டிங்க, நீயெல்லாம் நல்லா வருவா, ஆப்டியா? கிடு கிடூனு எழுதணும் இப்போ..., கிடு கிடுன்னு படிக்கணும்... ” , இப்படி அவள் பேசும் மொழிகளில் மயங்கி, ரசித்து ரசித்து என் மொழியும் அப்படி மாறிப்போனது! “ வேகமா எழுதணும்... ” , இப்படி சொல்லிக் கொண்டிருந்த நான், இவளோடு பேசிப் பேசி, “ கிடு கிடுனு எழுதணும் ” , இப்பட...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!