
இப்போது நான் கவிதை எழுதப் போகிறேன், எனக்குப் பிடித்த கவிதை. இது உண்மையில்
இதுவரை நான் முயற்சி செய்யாத ஒரு வகைக் கவிதை.
சரி, கவிதை எழுதப் போகிறேன், என்ன கவிதை? கவிதையின் கருப்பொருள் என்னவாய்
இருக்கும்? இப்படி எல்லாம் யோசிக்கிறீர்களா?
சொல்கிறேன், இப்போது நான் எழுத இருக்கும் இந்தக் கவிதை, மிகவும் இனிமையானது.
எனக்குப் பிடித்த என் தோழியைப் பற்றியது.
ஆம், என் தோழிக்காக நான் எழுதும் கவிதை இது. அவளுக்கு எப்போதும் விளையாட்டு
தான். சிரித்துக் கொண்டே இருப்பாள். இதோ இப்போது நினைத்தாலும் அவளது புன்னகை கண்
முன்னே தெரிகிறது.
“சாப்டுவோம்,
கலக்கீட்டிங்க, நீயெல்லாம் நல்லா வருவா, ஆப்டியா? கிடு கிடூனு எழுதணும் இப்போ...,
கிடு கிடுன்னு படிக்கணும்...”, இப்படி அவள் பேசும் மொழிகளில் மயங்கி, ரசித்து ரசித்து
என் மொழியும் அப்படி மாறிப்போனது!
“வேகமா
எழுதணும்...”, இப்படி
சொல்லிக் கொண்டிருந்த நான், இவளோடு பேசிப் பேசி, “கிடு கிடுனு எழுதணும்”, இப்படிச் சொல்லத் தொடங்கிவிட்டேன்.
உண்மை தான் நாம் யாருடன் பழகுகிறோமோ அவர் போல மாறத் தான் செய்கிறோம். ஆனால்,
அப்படி யாருடன் பழகினாலும் நாம் மாறிவிடுவதில்லை.
உதாரணமாக ஒருவரை உங்களுக்குப் பிடிக்காது, அவரது குணம் பிடிக்கவில்லை என்றால்,
நீங்கள் அவருடன் பழகவேமாட்டீர்கள்.
ஒருவரது குணம் நமக்குப் பிடித்தால் தான் அவருடன் நாம் பழகவே தொடங்குவோம்.
சில சமையம் நமது கணிப்பு தவறாகிப் போகலாம், அதனால் நடுவே நட்பு முறிய வாய்ப்பு
இருக்கிறது.
இப்படி ஒருமுறை ஒருவரைப் பிடிக்காமல் போனால் பிறகு அவரோடு நாம் நட்போடு
இருப்பது என்பது மிகவும் கடினம்.
சில நேரம், பிடித்தவர்களோடு கூட நாம் சண்டை இடுவோம், வெறுப்போம், ஆனால் நீண்ட
காலம் அவர்களைப் பிரிந்து நம்மால் இருக்க இயலாது.
நமது மனதிற்குத் தெரியும் சண்டை இட்டிருந்தாலும் அவர் நமக்குப் பிடித்தவர்
என்று.
இப்படி என் மனதிற்குப் பிடித்தவள் என் தோழி. தினமும் நாங்கள் இருவரும் நீண்ட
நேரம் பேசுவதுண்டு.
அழுதிருக்கிறேன் அவள் முன்பு, புலம்பி இருக்கிறேன் அவளிடம். ஒரு முறை நான்
அழுதேன் என்று என்னோடு சேர்ந்து அழுதாள்!
வீட்டில் அம்மாவோடு அப்பாவோடு கோபம் என்று அழுத போதெல்லாம், உங்க அப்பா தான,
அம்மா தான, சமாதானம் சொல்வாள்.
இப்படி இனிமையான தோழி எனக்குக் கிடைத்தது போல எல்லோருக்கும் அமையுமா என்று
தெரியவில்லை!
தீமை செய்ய நாம் முற்படும் போது நமது உண்மையான நட்பு தான் நம்மைத்
தடுக்குமாம். அப்படி ஒரு நட்பு எனக்குக் கிடைத்ததற்கு நன்றி.
ஆனாலும், நான், நான்... யாரோடும் அத்தனை அதிகம் ஒட்டுவதில்லை. தோழி என்றாலும்
ஒரு தூரத்தில் தான் வைத்துக் கொள்வேன். எல்லோரையும் போல கை கோர்த்து என் தோழிகளோடு
நான் நடந்து சென்றதில்லை! சென்றதே இல்லை. மனதை வருடி பேச முடிந்த எனக்கு கை
கோர்த்து நடக்க மனம் எப்போதும் இடம் கொடுப்பதில்லை.
வேதனை எனக்கு இதனால். அருகில் அமர்ந்து பேசுவேன் தோழியிடம் பல மணி நேரம்,
ஆனால் மடியில் தலை சாய்த்து படுக்க வைத்துக் கொள்வதே இல்லை!
மனம் அதற்கு இடம் தருவதில்லை, ஏன்? எனக்கே தெரியவில்லை!
யாரிடம் பழகினாலும் புன்னகையோடு பேசத் தெரிந்த எனக்கு, உரிமையோடு இருக்க
எப்போதும் மனம் வருவதில்லை.
கவிதை, இந்தக் கவிதை இதைப் பற்றி தான். என் தோழி, எனது நட்பு, பழக்கம் இதைப்
பற்றி தான்.
கவிதை. இது கவிதை, இப்போது நீங்கள் வாசித்தது கவிதை.
முறைக்காதீர்கள், இது கவிதையா என்று, உண்மையில் இது கவிதை இல்லை! கவிதா, என்
தோழி கவிதா.
மேலே சொன்னேனே? புன்னகையோடு பேசுவாள், கிடு கிடு என்று பேசுவாள் என்று, இந்தப்
பதிவு அவளுக்காக. என் கவிக்காக!
என்னடா பதிவு இது, காட்டு மொக்கை, என்று நினைக்கிறீர்களா? நினைத்துக் கொள்ளுங்கள், இது உங்களுக்கு மொக்கை என்றாலும் என் கவிக்கு இது பிடிக்கும். அது போதும் எனக்கு!
Good one Kannu :-D
பதிலளிநீக்கு:) நன்றி சுகு
நீக்கு"மனதை வருடி பேச முடிந்த எனக்கு கை கோர்த்து நடக்க மனம் எப்போதும் இடம் கொடுப்பதில்லை." இங்கே தேர்ந்த எழுத்தாளரின் நடைப் பக்குவம் எட்டிப் பார்க்கிறது கண்மணி
பதிலளிநீக்குஉண்மையாகவா? :) மகிழ்ச்சி, மிக்க நன்ற!
நீக்குநன்றி!
நீக்குதோழமை தான் நம் வாழ்வை, நம்மை, நம் சுயரூபத்தை நமக்கு அடையாளம் காட்டுபவர்கள். நீங்கள் கூறியிருப்பது போல் தான் நட்பு இருக்கும்.. கையை கோர்த்துக்கொண்டோ, கட்டி உருண்டு கொண்டா இருப்பதில்லை நட்பு. நாம் பார்க்கும் பார்வையில் இருக்கும் அர்த்தத்தை புரிந்து கொள்வது தான் நட்பு. என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான். நம்ம ஊர் அப்பன்ஸ்ல தான் சாப்பிடுவோம் நானும் அவனும் அடிக்கடி. நான் அவனை பார்ப்பேன், உடனே வெயிட்டரை அழைத்து, “அண்ணே செட்டிநாடு கிரேவி”.. மீண்டும் என்னை பார்ப்பான், “லாலிபாப் ஒரு பிளேட், அம்ரெல்லா ஒரு பிளேட்”.. இதெல்லாம் சொல்லிவிட்டு என்னை பார்ப்பான்.. "போதும்ணே சாப்பிட்டுட்டு சொல்றோம்”.. இது தான் நட்பு.. பில் கட்டும் போது மட்டும் நட்புக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் வந்துவிடுவது வேறு விசயம் :P
பதிலளிநீக்குஅப்போ, என்னோட கை கோர்காத நட்புல ஏதும் தப்பு இல்லன்னு சொல்றிங்க? சந்தோஷம்! :)
நீக்கு:) உங்க நண்பர் பாவம் தான் போங்க!
ஆமா கண்மணி.. சினிமாவில் காமிப்பது போல் கை கோர்த்துக்கொள்வது, கட்டிப்பிடித்துக்கொள்வதெல்லாம் நட்பில்லை.. நட்பு என்பது அக்கறையில் இருக்கிறது.. கட்டிப்பிடிப்பதும் கை கோர்ப்பதும் மட்டும் அக்கறை இல்லை. //உங்க நண்பர் பாவம் தான் போங்க!// அட பில் கட்டுறது நாந்தாங்க.. நான் தான் பாவம் :-(
நீக்குநட்பு என்பதற்கு பல அர்த்தங்கள். கையேடு கை கோர்த்தால்தான் உணவகத்தில் உணவு வாங்கித்தந்தால் தான் என்று அவரவர்கள் பாணியில் விளக்கங்கள் கூறலாம்.
பதிலளிநீக்குமனதுக்கு சந்தோஷம் தரும் நட்பு, எதையும் எதிர்பாராத நட்பு பெரியது!
நீ கவிதாவிற்கு எழுதிய கவிதை அவளுக்குப் பிடித்திருக்கிறது. அது சிறப்பு!
வாழ்த்துகள் கண்மணி!
kavithai ezhuthuvathu unmaiyilaiyae ezhithalla
பதிலளிநீக்கு