முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதை எழுதப் போகிறேன்!


கவிதை எழுதுவது பலருக்கும் இப்போதெல்லாம் கை வந்த கலை! நானும் ஒரு காலத்தில் கவிதை எழுதுவது பெரிய வித்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

இப்போது நான் கவிதை எழுதப் போகிறேன், எனக்குப் பிடித்த கவிதை. இது உண்மையில் இதுவரை நான் முயற்சி செய்யாத ஒரு வகைக் கவிதை.

சரி, கவிதை எழுதப் போகிறேன், என்ன கவிதை? கவிதையின் கருப்பொருள் என்னவாய் இருக்கும்? இப்படி எல்லாம் யோசிக்கிறீர்களா?

சொல்கிறேன், இப்போது நான் எழுத இருக்கும் இந்தக் கவிதை, மிகவும் இனிமையானது. எனக்குப் பிடித்த என் தோழியைப் பற்றியது.

ஆம், என் தோழிக்காக நான் எழுதும் கவிதை இது. அவளுக்கு எப்போதும் விளையாட்டு தான். சிரித்துக் கொண்டே இருப்பாள். இதோ இப்போது நினைத்தாலும் அவளது புன்னகை கண் முன்னே தெரிகிறது.

சாப்டுவோம், கலக்கீட்டிங்க, நீயெல்லாம் நல்லா வருவா, ஆப்டியா? கிடு கிடூனு எழுதணும் இப்போ..., கிடு கிடுன்னு படிக்கணும்..., இப்படி அவள் பேசும் மொழிகளில் மயங்கி, ரசித்து ரசித்து என் மொழியும் அப்படி மாறிப்போனது!

வேகமா எழுதணும்..., இப்படி சொல்லிக் கொண்டிருந்த நான், இவளோடு பேசிப் பேசி, கிடு கிடுனு எழுதணும், இப்படிச் சொல்லத் தொடங்கிவிட்டேன்.

உண்மை தான் நாம் யாருடன் பழகுகிறோமோ அவர் போல மாறத் தான் செய்கிறோம். ஆனால், அப்படி யாருடன் பழகினாலும் நாம் மாறிவிடுவதில்லை.

உதாரணமாக ஒருவரை உங்களுக்குப் பிடிக்காது, அவரது குணம் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அவருடன் பழகவேமாட்டீர்கள்.
ஒருவரது குணம் நமக்குப் பிடித்தால் தான் அவருடன் நாம் பழகவே தொடங்குவோம்.

சில சமையம் நமது கணிப்பு தவறாகிப் போகலாம், அதனால் நடுவே நட்பு முறிய வாய்ப்பு இருக்கிறது.

இப்படி ஒருமுறை ஒருவரைப் பிடிக்காமல் போனால் பிறகு அவரோடு நாம் நட்போடு இருப்பது என்பது மிகவும் கடினம்.

சில நேரம், பிடித்தவர்களோடு கூட நாம் சண்டை இடுவோம், வெறுப்போம், ஆனால் நீண்ட காலம் அவர்களைப் பிரிந்து நம்மால் இருக்க இயலாது.

நமது மனதிற்குத் தெரியும் சண்டை இட்டிருந்தாலும் அவர் நமக்குப் பிடித்தவர் என்று.

இப்படி என் மனதிற்குப் பிடித்தவள் என் தோழி. தினமும் நாங்கள் இருவரும் நீண்ட நேரம் பேசுவதுண்டு.

அழுதிருக்கிறேன் அவள் முன்பு, புலம்பி இருக்கிறேன் அவளிடம். ஒரு முறை நான் அழுதேன் என்று என்னோடு சேர்ந்து அழுதாள்!
வீட்டில் அம்மாவோடு அப்பாவோடு கோபம் என்று அழுத போதெல்லாம், உங்க அப்பா தான, அம்மா தான, சமாதானம் சொல்வாள்.

இப்படி இனிமையான தோழி எனக்குக் கிடைத்தது போல எல்லோருக்கும் அமையுமா என்று தெரியவில்லை!

தீமை செய்ய நாம் முற்படும் போது நமது உண்மையான நட்பு தான் நம்மைத் தடுக்குமாம். அப்படி ஒரு நட்பு எனக்குக் கிடைத்ததற்கு நன்றி.

ஆனாலும், நான், நான்... யாரோடும் அத்தனை அதிகம் ஒட்டுவதில்லை. தோழி என்றாலும் ஒரு தூரத்தில் தான் வைத்துக் கொள்வேன். எல்லோரையும் போல கை கோர்த்து என் தோழிகளோடு நான் நடந்து சென்றதில்லை! சென்றதே இல்லை. மனதை வருடி பேச முடிந்த எனக்கு கை கோர்த்து நடக்க மனம் எப்போதும் இடம் கொடுப்பதில்லை.

வேதனை எனக்கு இதனால். அருகில் அமர்ந்து பேசுவேன் தோழியிடம் பல மணி நேரம், ஆனால் மடியில் தலை சாய்த்து படுக்க வைத்துக் கொள்வதே இல்லை!

மனம் அதற்கு இடம் தருவதில்லை, ஏன்? எனக்கே தெரியவில்லை!

யாரிடம் பழகினாலும் புன்னகையோடு பேசத் தெரிந்த எனக்கு, உரிமையோடு இருக்க எப்போதும் மனம் வருவதில்லை.

கவிதை, இந்தக் கவிதை இதைப் பற்றி தான். என் தோழி, எனது நட்பு, பழக்கம் இதைப் பற்றி தான்.

கவிதை. இது கவிதை, இப்போது நீங்கள் வாசித்தது கவிதை.

முறைக்காதீர்கள், இது கவிதையா என்று, உண்மையில் இது கவிதை இல்லை! கவிதா, என் தோழி கவிதா.



மேலே சொன்னேனே? புன்னகையோடு பேசுவாள், கிடு கிடு என்று பேசுவாள் என்று, இந்தப் பதிவு அவளுக்காக. என் கவிக்காக!

என்னடா பதிவு இது, காட்டு மொக்கை, என்று நினைக்கிறீர்களா? நினைத்துக் கொள்ளுங்கள், இது உங்களுக்கு மொக்கை என்றாலும் என் கவிக்கு இது பிடிக்கும். அது போதும் எனக்கு!

கருத்துகள்

  1. "மனதை வருடி பேச முடிந்த எனக்கு கை கோர்த்து நடக்க மனம் எப்போதும் இடம் கொடுப்பதில்லை." இங்கே தேர்ந்த எழுத்தாளரின் நடைப் பக்குவம் எட்டிப் பார்க்கிறது கண்மணி

    பதிலளிநீக்கு
  2. தோழமை தான் நம் வாழ்வை, நம்மை, நம் சுயரூபத்தை நமக்கு அடையாளம் காட்டுபவர்கள். நீங்கள் கூறியிருப்பது போல் தான் நட்பு இருக்கும்.. கையை கோர்த்துக்கொண்டோ, கட்டி உருண்டு கொண்டா இருப்பதில்லை நட்பு. நாம் பார்க்கும் பார்வையில் இருக்கும் அர்த்தத்தை புரிந்து கொள்வது தான் நட்பு. என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான். நம்ம ஊர் அப்பன்ஸ்ல தான் சாப்பிடுவோம் நானும் அவனும் அடிக்கடி. நான் அவனை பார்ப்பேன், உடனே வெயிட்டரை அழைத்து, “அண்ணே செட்டிநாடு கிரேவி”.. மீண்டும் என்னை பார்ப்பான், “லாலிபாப் ஒரு பிளேட், அம்ரெல்லா ஒரு பிளேட்”.. இதெல்லாம் சொல்லிவிட்டு என்னை பார்ப்பான்.. "போதும்ணே சாப்பிட்டுட்டு சொல்றோம்”.. இது தான் நட்பு.. பில் கட்டும் போது மட்டும் நட்புக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் வந்துவிடுவது வேறு விசயம் :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ, என்னோட கை கோர்காத நட்புல ஏதும் தப்பு இல்லன்னு சொல்றிங்க? சந்தோஷம்! :)

      :) உங்க நண்பர் பாவம் தான் போங்க!

      நீக்கு
    2. ஆமா கண்மணி.. சினிமாவில் காமிப்பது போல் கை கோர்த்துக்கொள்வது, கட்டிப்பிடித்துக்கொள்வதெல்லாம் நட்பில்லை.. நட்பு என்பது அக்கறையில் இருக்கிறது.. கட்டிப்பிடிப்பதும் கை கோர்ப்பதும் மட்டும் அக்கறை இல்லை. //உங்க நண்பர் பாவம் தான் போங்க!// அட பில் கட்டுறது நாந்தாங்க.. நான் தான் பாவம் :-(

      நீக்கு
  3. நட்பு என்பதற்கு பல அர்த்தங்கள். கையேடு கை கோர்த்தால்தான் உணவகத்தில் உணவு வாங்கித்தந்தால் தான் என்று அவரவர்கள் பாணியில் விளக்கங்கள் கூறலாம்.
    மனதுக்கு சந்தோஷம் தரும் நட்பு, எதையும் எதிர்பாராத நட்பு பெரியது!

    நீ கவிதாவிற்கு எழுதிய கவிதை அவளுக்குப் பிடித்திருக்கிறது. அது சிறப்பு!
    வாழ்த்துகள் கண்மணி!

    பதிலளிநீக்கு
  4. kavithai ezhuthuvathu unmaiyilaiyae ezhithalla

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்