முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நானும் “நார்த்” இந்தியனும்! #1

இந்தியா குறித்து பல இந்தியர்களுக்கே நல்ல கருத்து இல்லை என்பது உண்மை என்றாலும், அந்தப் பலருக்கும் இங்கு இருக்கும் சிறப்புகள் தெரியாமல் இருக்க வாய்ப்பே கிடையாது! உண்மையில் நம் இந்தியாவைப் பற்றி பள்ளியில் “வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று நான் படித்த போதெல்லாம் அது எவ்வளவு ஆழமான உண்மை என்று அறிந்திருக்கவில்லை, ஆனால், இப்போது, உணர்ந்து கொண்டு இருக்கிறேன்! வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு இப்படி எழுதையில் உண்மையில் ஏதோ ஒரு பெருமிதமான  உணர்வு எனக்குள்!


சரி சரி மொக்க போடாம நாம கதைக்குள்ள வருவோம்!



இது வரை உள்ளூரில் (அதான் என் ஊர் சிவகாசியில்) மட்டுமே குப்பை கொட்டியவள் நான். வெளியூர் சென்று தனியாக இருந்து பழக்கமே இல்லாத எனக்கு, இரண்டு மாதம் திருவனந்தபுரத்தில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வந்து இப்போது ஒரு மாதம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை! இங்கு வந்து நான் தங்கி இருக்கும் விடுதியில் என்னுடைய அறையில் இருப்பது ஒரு தில்லிப் பெண்.

இந்தி, ஆங்கிலம், இது அவளுக்குத் தெரிந்த மொழிகள். எனக்கோ, “தமிழ், ஆங்கிலம்”! ஆக, இருவருக்கும் தெரிந்த ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினோம். உண்மையில் ஆங்கிலம் தெரியவில்லை என்றால் என் பாடு திண்டாட்டம் ஆகி இருக்கும்!

எங்கள் இருவருக்கும் ஆயிரம் வித்தியாசம் பழக்க வழக்கங்களில்! முதல் நாள், இரவு, பதினோரு மணி! எனக்கு உறக்கம் அப்படி வந்தது! சரி தூங்கலாம் என்று படுத்தேன். “விரீர்என்று எதோ சத்தம்! என்ன என்று பார்த்தால், “என் ரூம் மேட்!” எழுப்பிய சத்தம் தான் அது. ஏதோ இந்தியில் சொன்னாள் போலும்!

“என்ன ஆச்சு?”, என்று நான் ஆங்கிலத்தில் கேட்க, “என்ன தூங்கப் போறியா?, என்று பதிலுக்கு அவள் ஆங்கிலத்தில்!

“யெஸ்”, என்றேன் தலையை ஆட்டியவாரே! “மணி பதினொன்று தான்!என்றாள், ஏதோ நான் கொலை செய்யக் கிளம்பியது போல!

அவர்கள் எல்லாம் இரவு வெகு நேரம் விழித்து இருப்பார்களாம்! நான் இவ்வளவு சீக்கிரம் தூங்கக் கிளம்பியதும், ஆச்சரியத்தில் கத்தினாளாம்!

இப்படி, ஆச்சரியம், துக்கம், தூக்கம், என்று எல்லாவற்றிற்கும் அவள் அப்படித் தான் கத்துவாள் என்று, போகப் போகத் தான் புரிந்தது.

அசந்து நான் தூங்கிக் கொண்டு இருந்தேன், இரவு இரண்டு மணிக்கு, “ஓய்... பேச்சாரா..., அரே..., குத்தா சாலா...இப்படி எல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாத என்னென்னவோ வார்த்தைகள் சொல்லி சத்தமாக தனியாக ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள்! நன்றாக தூக்கத்தில் இருந்து விழித்துப் பார்த்த போது தான் தெரிந்தது அவள் “லேப் டாப்பில் ஏதோ படம் பார்த்துக் கத்தினாள் என்று! முதல் இரண்டு நாட்கள் கொஞ்சம் பயந்து பயந்து எழுந்து உட்கார்ந்தேன், பிறகு பழகிவிட்டது! இப்போதெல்லாம் அவள் கத்தவில்லை என்றால் தான் தூக்கம் வருவதில்லை என்றால் பாருங்களேன்!

இத்தனை சத்தம் போட்டாலும், மிகவும் இனிமையான பெண் அவள். நன்றாகப் பேசுவாள். என்னோடு இரண்டு வயது இளையவள் ஆனாலும், என்னைக் “கண்மணிஎன்று பெயர் சொல்லி நல்ல தோழி போலவே நடத்துகிறாள்! (என்ன அக்கானு கூப்படலனு எனக்கு வருத்தம்னு நெனைக்கிறேன் :) :P )

ஒரு நாள், அவள் என்னிடம் இப்படிக் கேட்க, “உங்களுக்கு எல்லாம் எங்கள பிடிக்காதோ?” (ஆங்கிலத்தில் தான்). அதாவது தென் இந்தியர்களுக்கு வட இந்தியர்களை பிடிக்காதா? என்கிற அர்த்தம் அதற்கு!

நான் பெரிய விளக்கம் தர வேண்டி இருந்தது!

அந்த விளக்கம், கதை, கலாச்சாரம், பாரம்பரியம், இப்படி நாங்கள் நிறைய பேசினோம், அதை எல்லாம் சொல்கிறேன், அடுத்த பதிவுகளில்!



கருத்துகள்

  1. enna da rascalah :P
    arumai...
    unga frd akka nu koopadla nu feelings ah, free ah vidunga :P
    paaka chinna ponnu mari irunthurupel :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி :) ஆமா, பாக்க ரெண்டு வயசு கொழந்தையாட்டம் இருக்கேனாம்!

      நீக்கு
  2. நீங்க சொல்வது உண்மைதான். பள்ளி மூலம் நாம் பார்த்த இந்தியா என்பது நூற்றில் ஒரு சதவிகிதம் தான். ஒரு மாநிலத்திற்குள் உள்ளே நுழைந்து வெளியே வந்தால் நம் மாநிலம் குறித்த பெருமை பலவிதங்களிலும் நமக்கு உருவாகும். பெற்ற உண்மைகள் அதிகம்.

    தென் மாநிலங்களை தாண்டி வெளியே சென்றால் அது வேறொரு உலகம். அதை விட வடகிழக்கு மாநிலங்கள் உள்ளே சென்று விட்டு வந்தால் அதுவொரு புதிய உலகம்.

    நம் மாநிலத்தில் உள்ள ரேஷன் பொருட்கள் போன்ற அத்தியாவஸ்ய பொருட்கள் கூட வட மாநிலங்களில் 90 சதவிகிதம் மக்களிடம் போய்ச் சேரவில்லை என்பது தெரியுமா?

    இன்னமும் பல மாநிலங்களில் பல மாவட்டங்கள் தனிப்பட்ட நபர்களின் ஆதிக்கத்தில் தான் உள்ளது. பல மாநிலஙகளில் தேசிய நெடுஞ்சாலைகள் சரி வர நிறைவேற்ற முடியாதமைக்கு இதுவே முக்கிய காரணம்.

    நிச்சயம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கன்யாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரைக்கும் அழைத்துச் சென்று நமது நாட்டின் நீள அகலத்தை ஒரு முறை காட்டி விட வேண்டும் என்று மனதில் வைத்துள்ளேன்.

    கடந்த நாற்பது வருடத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டும் இன்னமும் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் இன்று தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது 20 ஆண்டுகள் முன்னால் போய் நின்று இருக்கும்.

    அதற்குப் பதிலாக குறிப்பிட்ட ஒரு குடும்பமே தெற்காசியாவில் பணக்காரராக வளர்ந்தது தான் மிச்சமும் சொச்சமும்.

    தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் உணர்ந்தது என்னவென்றால், ஒரு இடத்திற்கு சுற்றுலா என்று, ஒரு நாள், இரண்டு நாள் செல்வதை விட, அங்கு சென்று ஒரு சில வாரங்களாவது இருந்தால் தான் அந்த இடத்தின் அழகை, இனிமையை, அங்கு இருக்கும் மக்களைப் பற்றி இன்னும் சிறப்பாக அறிய முடியும்!

      தங்களது கருத்துக்கு மிக்க நன்றி!

      நீக்கு
    2. நான் கல்லூரி காலத்தில் ஒரு முறை டில்லி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.. 7மாநிலங்களுக்கு இடையிலான பயணம் அது.. ஒவ்வொரு ரயில்வே ஸ்டேசனிலும் ஒரு கலாச்சாரம் புதுமையாக இருக்கும்.. ஆனால் அவனும் நான் இருக்கும் நாட்டில் என்னை போல் சமமான ஒரு பிரஜையாக இருக்கிறான் என நினைக்கும் போதே அவ்வளவு இனிமையாக இருக்கும்,.. இவற்றையெல்லாம் போற்றி வளர்க்காமல், இதை வைத்து அரசியல் செய்யும் ஆட்களால், தேசியம் என்றாலே நம் மக்களுக்கு கசக்க ஆரம்பித்துவிட்டது..

      நீக்கு
  3. அட... அவ்வளவு தானா...! ஆனாலும் ஆரம்பம் சுவாரசியம்... தொடர்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு தானா இல்ல, இன்னும் நெறைய இருக்கு! மிக்க நன்றி!

      நீக்கு
  4. அந்தப்பெண் கேள்வி கேட்டவுடன், “உங்களுக்கு மதராஸிகளை (தென்னிந்தியர்களை) பிடிக்காதா?” என்று பதில் கேள்வி கேட்டிருந்தீர்கள் என்றால், அவர் சொல்லும் பதிலிலேயே அவருக்கான பதிலும் கிடைத்திருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் கேட்டேன், எல்லாம் அடுத்த பதிவில் எழுதுகிறேன்! நன்றி!

      நீக்கு
    2. சினிமா ரிலீஸ் மாதிரி பில்ட்-அப் இருக்கே... சரி சரி, அடுத்த பதிவுக்கு அட்வான்ஸ் புக்கிங்ல ரிசர்வேசன் பண்ணிட்டேன் :-P

      நீக்கு
  5. //இப்போதெல்லாம் அவள் கத்தவில்லை என்றால் தான் தூக்கம் வருவதில்லை என்றால் பாருங்களேன்!// ஹா ஹா ஹா உங்களுக்குள் இருந்த காமெடியனை ரசித்தேன்

    நானும் ஆவலாய் இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... இதுக்கு பேரு தான் காமெடியா???!! நன்றி! :)

      நீக்கு
  6. அருமையான கருத்துப் பகிர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்....நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையாக எழுத முயல்கிறேன்! நன்றி... :)

      நீக்கு
  7. //நான் உணர்ந்தது என்னவென்றால், ஒரு இடத்திற்கு சுற்றுலா என்று, ஒரு நாள், இரண்டு நாள் செல்வதை விட, அங்கு சென்று ஒரு சில வாரங்களாவது இருந்தால் தான் அந்த இடத்தின் அழகை, இனிமையை, அங்கு இருக்கும் மக்களைப் பற்றி இன்னும் சிறப்பாக அறிய முடியும்!//

    சூப்பர் ...!

    இதுபோன்ற அனுபவங்கள் தாம் நமக்கு தெரிந்திராத நம்மின் பல முகங்களை அடையாளம் காட்டும் . சகிப்புத்தன்மை , பொறுமை , தைரியம் இதெல்லாமே இதுபோன்ற அனுபவங்களில் இருந்து மட்டுமே நம்மால் பெறமுடியும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி... :) உண்மை நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறேன்!

      நீக்கு
  8. அங்கிருந்து வருபவர்களுக்கு நாம் ஹிந்தி பேசிவிட்டால் நம்மை மிகவும் பிடித்துவிடும். மதராசிகள் ஹிந்தி பேசுவதில்லை என்பதுதான் அவர்களுக்கு நம் மேல் இருக்கும் கோபம். தென்னிந்தியர்கள் எல்லோரையுமே மதராசி என்று குறிப்பிட்டாலும், ஹிந்தி பேசாத தமிழர்களை அவர்கள் விரும்புவதில்லை.

    திரு ஜோதிஜி கூறியிருப்பது போல நாம் (தென்னிந்தியர்கள்) அனுபவிக்கும் சாதாரண விஷயங்கள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. பெரிய நகரங்களைச் சொல்லவில்லை. சின்ன சின்ன ஊர்களில் இருப்பவர்கள். பெங்களூர் அவர்களுக்கு அமெரிக்காவை விட சொர்க்கம்!

    எனக்கு ஒரு வடகிழக்கு மாநில மாணவன் இருந்தான். நாங்கள் பெங்களூரில் பேருந்து வசதி சரியில்லை; இது சரியில்லை அது சரியில்லை என்று பேசிக்கொண்டிருந்தால் அவன் சொல்வான்: 'பெங்களூர் போன்ற பேரு நகரங்களை சொல்லுகிறீர்களே, ஒருமுறை எங்கள் ஊருக்கு வாருங்கள்; சரியான பாதை கிடையாது; பேருந்து என்ற பெயர் கூட எங்கள் ஊரில் உள்ளவர்களுக்குத் தெரியாது. மின்சாரம் தெரியாது....'

    நாமெல்லோரும் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள், கண்மணி!
    உன் பதிவுகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அம்மா, நாம் கொடுத்து வைத்தவர்கள் தாம்! விரைவில் அடுத்த பதிவை எழுதுகிறேன்!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்