இது கடிதமும் இல்லை, கவிதையுமில்லை, ஆனால், இது உனக்காக என்பது மட்டும் உறுதி!
வானிற்கும் மண்ணிற்கும் இருக்கும் பந்தம் தான் உனக்கும் எனக்கும் ஊடே, ஆம், தூரத்தில் இருந்து பார்க்க, சேர்ந்தே இருப்பது போலத் தான் தோன்றும், ஆனால், ஒரு போதும் நாம் சேர்ந்தே இருந்ததில்லை!
”அதோ, அங்கு தூரத்தில் தெரியும், நட்சத்திரமும், நிலாவும் பாரேன்”, என்று கை நீட்டி, நீ காட்டிக் கதை சொன்னால், ரசித்துக் கொண்டே இருக்கலாம், ஆனால், என்ன செய்ய, எல்லா நாளும் நிலவு ஒரே போல இருப்பதில்லை, அது போலத் தான், நம் நட்பும், தேய்கிறது சில நேரம், வளர்கிறது பல நேரம்.
![]() |
It's you ! |
உனக்குப் பிடித்த பாடலும், எனக்குப் பிடித்த பாடலும், மாறி மாறி நான்கு மணி நேரம் கேட்ட பிறகும், நமக்கு அலுத்துப் போவதே இல்லை, தொடர்கிறது நமது அரட்டை ஐந்து மணி நேரம் தாண்டியும் கூட சில சமயங்களில்.
சாப்பிடுவதும், கதை பேசுவதும் தான் எனக்குப் பிடித்த செயல்கள், எப்படித் தான் கண்டுபிடித்தாய், என்னோடு பேசத் தொடங்கி ஒரே ஒரு மணி நேரத்தில்? என் மனதை என்ன அத்தனை எளிமையாகக் கணிக்க முடியுமா?
”அத்தனை இனிமையானவன் நீ”, வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டு இருக்கிறேன் இப்போதெல்லாம். இருந்து என்ன பயன்? அருகில் இருந்த நேரம் எல்லாம், உன்னைக் கண்டு மிரண்டது மட்டும் தானே மிச்சம்! இன்று தூரம் சென்றதும் தோன்றுகிறது உனக்கும், எனக்கும், அன்றே பேசி இருக்கலாமோ இனிக்க இனிக்க என்றெல்லாம்!
”புடிச்சிருக்கு”, என்று நான் என்ன செய்தாலும் சொல்கிறாய். இப்படி நான் செய்யும் எல்லாவற்றையும் பிடித்துப் போகிறது உனக்கு, பாவம் நீ, என்ன செய்வாய், வேறு வழி இல்லை உனக்கு, நான் அத்தனை இனிமையாய் எல்லாம் செய்கிறேனே! இது வரை சொன்னதில்லை, இதோ இப்போது சொல்லிக் கொள்கிறேன், “எனக்கும் நீ செய்யும் சேஷ்டைகள் எல்லாம், புடிச்சிருக்கு”!
”இன்று பேச மாட்டேன் நான்”, சொல்லிவிடுவேன் எளிதாய் நான், அச்சோ, உன் முகம் தான் எப்படி வாடிப் போகிறது அதைக் கேட்டதும்?
எனக்குத் தெரியும், இதை நீ படித்து முடித்ததும் என்னிடம் ஓடி வந்து அழகாய்ச் சொல்வாய், “புடிச்சிருக்கு”, என்று.
காத்திருக்கிறேன், அதற்காக! எங்கே, சொல் பார்ப்போம்?
நன்றாக இருக்கிறது.. ஆனால் பாருங்கள் அன்பில் இது தான் ஒரே தொல்லை.. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நமக்கு பிடித்தது போல் அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.. இல்லையென்றால் அவ்வளவு தான், காலி...
பதிலளிநீக்குஆனால் இதை பிடிக்காது என்று சொல்ல முடியாது.. மிகவும் அருமையாக, எல்லோர் வாழ்விலும் நடக்கும், எல்லோர் மனதிலும் இருக்கும் உணர்வுகளை அழகாக சொல்லிவிட்டீர்கள்..
:) அதுவும் என் நண்பர்கள் எல்லாம் பாவம், நான் என்ன செய்தாலும், சூப்பர் என்று மட்டும் தான் சொல்ல வேண்டும், இல்ல, சண்ட தான், அதற்குத் தான் இந்தப் பதிவு :)
நீக்குதோ, இப்போ நீங்க கூட பாருங்க, வேற வழி இல்லாம தான நல்லா இருக்குனு சொன்னிங்க? :P :D
உங்க நண்பர்கள் ரொம்ப நல்லவர்கள்.. எனக்கு ஒரு குரூப் இருக்கு.. நான் என்ன செஞ்சாலும் அத வச்சு காமெடி பண்ணி கழுவி ஊத்துறது தான் அவங்க வேலை :-( ஆனா அதிலும் நட்பின் சுவை அதிகம் உண்டு... :P
நீக்குஉணமையில் இந்த பதிவு மிக அழகு தான்.. :-)
ஹா ஹா என் நண்பர்கள் அப்படியே தலைகீழ்.. நான் என்ன செய்தாலும் காமெடி செய்து கழுவி ஊற்றிவிடுவார்கள்.. அதுவும் அன்பை வெளிப்படுத்தும், ஆழப்படுத்தும் ஒரு வகை செயல் தான்.. கிண்டலும் கேலியும் நிறைந்தது.. நம்மை முழுதாக கிண்டல் செய்யவும், பிறர் நம்மை ஏதாவது தரக்குறைவாக ஒரு வார்த்தை பேசினாலும் முண்டியடித்து வந்து அவன் மூக்கை பெயர்ப்பதும் தான் நட்பு..
நீக்கு//தோ, இப்போ நீங்க கூட பாருங்க, வேற வழி இல்லாம தான நல்லா இருக்குனு சொன்னிங்க?// நிச்சயமாக இல்லை.. மிக மிக அழகான பதிவு..