முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொல்கிறேன் கேளடா!


இது கடிதமும் இல்லை, கவிதையுமில்லை, ஆனால், இது உனக்காக என்பது மட்டும் உறுதி!

வானிற்கும் மண்ணிற்கும் இருக்கும் பந்தம் தான் உனக்கும் எனக்கும் ஊடே, ஆம், தூரத்தில் இருந்து பார்க்க, சேர்ந்தே இருப்பது போலத் தான் தோன்றும், ஆனால், ஒரு போதும் நாம் சேர்ந்தே இருந்ததில்லை!

”அதோ, அங்கு தூரத்தில் தெரியும், நட்சத்திரமும், நிலாவும் பாரேன்”, என்று கை நீட்டி, நீ காட்டிக் கதை சொன்னால், ரசித்துக் கொண்டே இருக்கலாம், ஆனால், என்ன செய்ய, எல்லா நாளும் நிலவு ஒரே போல இருப்பதில்லை, அது போலத் தான், நம் நட்பும், தேய்கிறது சில நேரம், வளர்கிறது பல நேரம்.

It's you !

உறங்கிப் போன பிறகும், நடு இரவில் விழித்து, உன்னை அழைத்துக் கதை பேசிச் சிரிக்கிறேன் கனவு கண்டதை எல்லாம், ஆனால், பாரேன், ஒன்றுமே இல்லாத அந்தக் கதை கூட இனிமையாகத் தான் இருக்கிறது நீயும் நானும் பேசுகையில்!

உனக்குப் பிடித்த பாடலும், எனக்குப் பிடித்த பாடலும், மாறி மாறி நான்கு மணி நேரம் கேட்ட பிறகும், நமக்கு அலுத்துப் போவதே இல்லை, தொடர்கிறது நமது அரட்டை ஐந்து மணி நேரம் தாண்டியும் கூட சில சமயங்களில்.

சாப்பிடுவதும், கதை பேசுவதும் தான் எனக்குப் பிடித்த செயல்கள், எப்படித் தான் கண்டுபிடித்தாய், என்னோடு பேசத் தொடங்கி ஒரே ஒரு மணி நேரத்தில்? என் மனதை என்ன அத்தனை எளிமையாகக் கணிக்க முடியுமா?

”அத்தனை இனிமையானவன் நீ”, வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டு இருக்கிறேன் இப்போதெல்லாம். இருந்து என்ன பயன்? அருகில் இருந்த நேரம் எல்லாம், உன்னைக் கண்டு மிரண்டது மட்டும் தானே மிச்சம்! இன்று தூரம் சென்றதும் தோன்றுகிறது உனக்கும், எனக்கும், அன்றே பேசி இருக்கலாமோ இனிக்க இனிக்க என்றெல்லாம்!

”புடிச்சிருக்கு”, என்று நான் என்ன செய்தாலும் சொல்கிறாய். இப்படி நான் செய்யும் எல்லாவற்றையும் பிடித்துப் போகிறது உனக்கு, பாவம் நீ, என்ன செய்வாய், வேறு வழி இல்லை உனக்கு, நான் அத்தனை இனிமையாய் எல்லாம் செய்கிறேனே! இது வரை சொன்னதில்லை, இதோ இப்போது சொல்லிக் கொள்கிறேன், “எனக்கும் நீ செய்யும் சேஷ்டைகள் எல்லாம், புடிச்சிருக்கு”!

”இன்று பேச மாட்டேன் நான்”, சொல்லிவிடுவேன் எளிதாய் நான், அச்சோ, உன் முகம் தான் எப்படி வாடிப் போகிறது அதைக் கேட்டதும்?

எனக்குத் தெரியும், இதை நீ படித்து முடித்ததும் என்னிடம் ஓடி வந்து அழகாய்ச் சொல்வாய், “புடிச்சிருக்கு”, என்று.

காத்திருக்கிறேன், அதற்காக! எங்கே, சொல் பார்ப்போம்?

கருத்துகள்

  1. நன்றாக இருக்கிறது.. ஆனால் பாருங்கள் அன்பில் இது தான் ஒரே தொல்லை.. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நமக்கு பிடித்தது போல் அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.. இல்லையென்றால் அவ்வளவு தான், காலி...
    ஆனால் இதை பிடிக்காது என்று சொல்ல முடியாது.. மிகவும் அருமையாக, எல்லோர் வாழ்விலும் நடக்கும், எல்லோர் மனதிலும் இருக்கும் உணர்வுகளை அழகாக சொல்லிவிட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) அதுவும் என் நண்பர்கள் எல்லாம் பாவம், நான் என்ன செய்தாலும், சூப்பர் என்று மட்டும் தான் சொல்ல வேண்டும், இல்ல, சண்ட தான், அதற்குத் தான் இந்தப் பதிவு :)

      தோ, இப்போ நீங்க கூட பாருங்க, வேற வழி இல்லாம தான நல்லா இருக்குனு சொன்னிங்க? :P :D

      நீக்கு
    2. உங்க நண்பர்கள் ரொம்ப நல்லவர்கள்.. எனக்கு ஒரு குரூப் இருக்கு.. நான் என்ன செஞ்சாலும் அத வச்சு காமெடி பண்ணி கழுவி ஊத்துறது தான் அவங்க வேலை :-( ஆனா அதிலும் நட்பின் சுவை அதிகம் உண்டு... :P
      உணமையில் இந்த பதிவு மிக அழகு தான்.. :-)

      நீக்கு
    3. ஹா ஹா என் நண்பர்கள் அப்படியே தலைகீழ்.. நான் என்ன செய்தாலும் காமெடி செய்து கழுவி ஊற்றிவிடுவார்கள்.. அதுவும் அன்பை வெளிப்படுத்தும், ஆழப்படுத்தும் ஒரு வகை செயல் தான்.. கிண்டலும் கேலியும் நிறைந்தது.. நம்மை முழுதாக கிண்டல் செய்யவும், பிறர் நம்மை ஏதாவது தரக்குறைவாக ஒரு வார்த்தை பேசினாலும் முண்டியடித்து வந்து அவன் மூக்கை பெயர்ப்பதும் தான் நட்பு..
      //தோ, இப்போ நீங்க கூட பாருங்க, வேற வழி இல்லாம தான நல்லா இருக்குனு சொன்னிங்க?// நிச்சயமாக இல்லை.. மிக மிக அழகான பதிவு..

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்