
(பாகம் 11 படிக்கவில்லையா ?இந்த link உபயோகப்படுத்துங்க
தொடர்கதை ---> பாகம் 11 ---> சிக்ன(க)ல் படிச்சிட்டு, இங்க வாங்க)
இரவு வெகு நேரம் அழுது இருந்ததால் ; சற்று கண்கள் வீங்கி இருந்தது சுவாதிக்கு;
இருப்பினும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் விழித்திருந்தாள் ;
குழந்தை போலவே தோன்றினான் அருகில் உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணா;
கண் இமைக்காமல் பார்த்திருந்தாள் அவனை.. அன்று தான் முதன் முதலில் பார்ப்பது போல;
நினைவுகள் பின் நோக்கி நகர்ந்தது அவளுக்கு....
முப்பத்தி ஐந்து வயதில் சுவாதி... வீட்டில் அடைபட்டு இருந்த பொழுது...
அன்று காலை., வழக்கம் போல எழுந்து அம்மாவின் அறைக்கு டீ எடுத்துச் சென்றாள் சுவாதி;
" அம்மா ., டீ எடுத்துட்டு வந்த்ருக்கேன் மா... எடுத்துகோங்க... " கைகளால் அம்மாவை தட்டி எழுப்பினாள்;
அசைவே இன்றி குளிர்ந்து இருந்தது அம்மாவின் உடல்...
அதிர்ந்து போன சுவாதி... Hall - ல் படுத்திருந்த அப்பாவிடம் ஓடினாள்
...
" அப்பா அப்பா .... அம்மா அசையாம அப்டியே இருக்காங்கப்பா.. எழுப்ப எழுப்ப எந்திக்கவே இல்லப்பா... வாங்க வந்து பாருங்கப்பா.... " , கண்ணீர் கசிய அப்பாவிடம் அழுது புலம்பினாள்...
வேகமாய் வந்த குமாரசாமி... இறந்து கிடந்த மனைவியைப் பார்த்து அதிர்ந்து போனார்!!!
" கல்யாணி .... எந்திரி கல்யாணி...." இறந்து போனாள் என்று அறிந்தும்., சிறுபிள்ளை போல் அழுது எழுப்பினார் குமாரசாமி...
அது வரை அழுதிராத., தன் தாய் தந்தை இறந்த போது கூட அழுதிராத குமாரசாமி., அன்று துயரம் தாங்காமல் ., அழத் தொடங்கி இருந்தார்..
அன்று கல்யாணி அம்மா பிரிந்து சென்றதில் இருந்து., குமாரசாமி பேசுவதே குறைந்து போனது !!!
காதலில் பிரிவு எவ்வளவு கொடுமையானது என்று அப்பொழுதான் உணர்ந்தார் குமாரசாமி...
கல்யாணி இறந்து இரண்டு மாதங்கள் ஓடி இருக்கும்,,, ஒருநாள்...
" சுவாதி... என்ன மன்னிச்சுடு மா... காதலோட பிரிவு... எவ்ளோ வலிக்கும்னு இப்போ உங்க அம்மா போன அப்புறம் தான்மா புரிது... பத்து வர்ஷதுக்கும் மேல பிரிச்சு வச்சும்... நீங்க இன்னும் ஒருத்தர ஒருத்தர் நெனச்சுட்டு இருக்கீங்க., இந்த வலி உனக்கு எப்டி இருக்கும்-னு இப்போ தான்மா அப்பாக்கு புரியுது..... மன்னிச்சுடு மா... நான் உன்ன அந்த பையனோட சேத்து வைக்றேன் நாளைக்கே..." , மனைவியைப் பிரிந்து வாழ்ந்த நரகம்., அன்பின் ஆழத்தை உணர்த்தி இருந்தது அவருக்கு., அழுதவாறு மகளிடம் மன்னிப்புக் கேட்டார்...
" பரவாலப்பா .... உங்களுக்கு நிச்சயம் ஒரு நாள் புரியும்னு தான் காத்துட்டு இருந்தோம்... கிருஷ்ணாவும் எனக்காக இன்னும் காத்ருக்கான்.. நீங்க ஏன்பா என்கிட்டே மன்னிப்பு கேட்டுட்டு.. " கண்ணீரை துடைத்து ஆறுதலாய்ப் பேசினாள் சுவாதி...
கிருஷ்ணா சுவாதியின் கரம் பற்றினான் முப்பத்தி ஐந்து வயதுக்கு மேல்...
ஊரே வாழ்த்த நடக்காவிடினும்., கோவிலில் அற்புதமாக நடந்தது திருமணம்...
வயது கடந்திருந்ததாலோ என்னவோ.., குழந்தைச் செல்வம் கிடைக்க மீண்டும் போராட வேண்டியதாகிப் போயிற்று ...
ஐந்து வருடம் மருத்துவம் பார்த்தே கழிந்தது...
நாற்பது வயது கடந்து போய் இருந்தது இருவருக்கும்...
இதற்கு மேல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவும் உடலில் தெம்பில்லை இருவருக்கும்..
ஒருவருக்கொருவர் குழந்தையாக வாழ முடிவெடுத்து..., இன்று வரை குழந்தைகளைப் போல் கள்ளமில்லாமல் காதல் செய்கிறார்கள் இருவரும்....
" ஏ சுவாதி.. தூங்கலையா... இன்னும் கொஞ்ச நேரம் தூங்குமா.. night ரொம்ப நேரம் முழிச்சு இருந்தேல... " சுவாதியின் நினைவுகளைக் கலைத்து, கட்டிக் கொண்டான் கிருஷ்ணா...
காதல் கசிந்து கொண்டே இருந்தது என்றும் என்றென்றும் இருவருக்குள்ளும்...
உயர்வானது இவர்களின் காதல்.,
உண்மையில் தோய்த்து..
உயிரினில் கரைத்து.,
உயர்வுகளை அடைந்து
ஊறுகளைத் தகர்க்கும்...!!!
ஊன் பாராது இது...!!!!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
இதுவரை என் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தமைக்கு மிக்க நன்றி...!!!
குறைகளைச் சுட்டுங்கள், விமர்சனங்களே என்னை வளர்த்தெடுக்க உதவும்..
மிக்க நன்றி..
---------
♥ கண்மணி அன்போடு ♥
appadi mudichutengala.............. gud... nice story... today oly red 3 chapters... gud ending........ not at all expected it..... wen gonna start next one.......?????????/
பதிலளிநீக்குmm, soon. college started; so will try to post the next one in week ends. Happy reading Mr. Shanthosh
பதிலளிநீக்கு