முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 4 ---> சிக்ன(க)ல்




(பாகம் மூன்று படிக்கவில்லையா? இந்த லிங்க் உபயோகப்படுத்துங்க, தொடர்கதை ---> பாகம் 3 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு இங்க வாங்க.)

தயங்கி நின்ற சுவாதி பேசத் தொடங்கினாள் , " sorry கிருஷ்ணா, ஊர்ல தப்பா பேசிருவாங்க , எங்க வீட்லயும் விரும்ப மாட்டாங்க, sorry, if you don't mind  bus-கு money மட்டும் குடு ? நான் திருப்பி குடுத்திடறேன் "

கிருஷ்ணாவிற்கு என்னவோ போல் ஆயிற்று,

"காசு எல்லாம் வேணாம் சுவாதி ", சொல்ல நினைத்தவன் நிறுத்திக் கொண்டான்.

"திரும்பப் பெரும் பொழுது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமே" என்ற நினைப்பு!!!

பேருந்திற்கு பணம் மட்டும் கொடுத்தான்.

" மொபைல் நம்பர் கேளுடா " குதூகலித்து நின்றது மனது.

அவன் கேட்கும் முன்பே அவளே கொடுத்தாள் நம்பர் ," இது என் mobile number, நீ எப்போ எதுனாலும் டக்குனு call பண்ணிடாத, உன் number தா,  நான் text  பண்றேன், நான் முக்யம்னா call பண்றேன், நீ call  பண்ணாத எங்க வீட்ல திட்டுவாங்க "

number-ம் கொடுத்து , வருசயாக உபயோகிக்கும் முறை என்று பட்டியலும் இட்டாள் சுவாதி.

தலை அசைத்தவாறே அவள் பேசும் அழகை ரசித்து , உருகிக் கொண்டு இருந்தான் கிருஷ்ணா.

" சரி கிருஷ்ணா நான் போயிட்டு வரேன் bye, take care. Medicines எல்லாம் சரியா சாப்டு, அப்போ தான் காயம் சரி ஆகும் ", கிளம்பினாள் பேருந்தைப் பார்த்து சுவாதி.

 " Aeroplane  சென்றால் , ஏழைச் சிறுவன் எப்படிப் பார்ப்பானோ அப்படிப் பார்த்தான் அவளை, " மயங்கி நின்றான் அவள் குணத்திலும், அழகிலும்.

பேருந்து சென்றதும் வீட்டை நோக்கிக் கிளம்பினான் , வழியெல்லாம் அவள் நினைவோடு, அவள் தன் பின்னே அமர்ந்து வருவது போல் கற்பனை செய்து கிறங்கிப் போனான்.

சுவாதி பேருந்தில் சலனம் இல்லாமல் "  purse தொலஞ்சு போச்சே " , என்ற வருத்தத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள்.


சுவாதிக்கு கிருஷ்ணாவை பிடிக்காது என்றில்லை, காதல் என்று உருக்கமும் இல்லை, நடுவே நின்றிருந்தால்.

ஆனால், கிருஷ்ணாவிற்கோ " கனவெல்லாம் சுவாதி கால் பதித்து இருந்தாள்"


வலை தளத்தில் மட்டும் பேசி வந்தவர்கள், இப்பொழுது கைபேசியிலும் பேசத் தொடங்கினார்கள் text மூலமாக.

ஆனால்.,காதலை சொல்லிக் கொள்ளவில்லை .


தன் காதலை மறைமுகமாக நிறைய முறை கிருஷ்ணா சொல்லியும் , சுவாதியின் மனதிற்கு எட்டியதோ எட்டவிலையோ, எட்டாதது போலவே பேசிவந்தாள்.

" புரிந்தாலும் புரியாதது போல , பொய் கூறுவது பெண்மையின்  இயல்போ? அல்ல நாணமோ? "


                                                             ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


கனவுகளோடு தொடரும் ,கிருஷ்ணா வசம் , சுவாதியும் காதல் வயப்படுவாளா?? காத்திருங்கள் நாளை வரை.


கருத்துகள்

  1. gud strory........today oly started from first one.............. nice to read............ wen it'll end waiting fr climax................

    பதிலளிநீக்கு
  2. Happy reading Mr.Shanthosh. thank you. It will end soon. may be in two or three episodes or may go little long !

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12/23/2011 9:52 AM

    give a good end ,waiting for that..... :)

    பதிலளிநீக்கு
  4. புரிந்தாலும் புரியாதது போல , பொய் கூறுவது பெண்மையின் இயல்போ? அல்ல நாணமோ?
    superb line..........

    பதிலளிநீக்கு
  5. புரிந்தாலும் புரியாதது போல , பொய் கூறுவது பெண்மையின் இயல்போ? அல்ல நாணமோ? " -அழகான எழுத்துக்கள்.., finishing than eppoum un kitta pudichathu ..:)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்