புதிதாக வாசிபவர்களுக்கு, இது ஒரு தொடர் பதிவு ஆதலால், கீழே இருக்கும் இணைப்பைப் பயன்படுத்தி முந்தைய பதிவுகளை படித்துவிட்டு, இங்கே வாருங்கள்! முந்தைய பதிவுகள்: அப்பா - அம்மா - மகளின் பார்வையில்! #1 #2 #3 இதுவரை நாம் பத்து முத்துகளை பார்த்துவிட்டோம், இப்போது தொடர்ந்து அடுத்து கொஞ்சம் முத்துக்களை நம் மாலையில் கோர்க்கலாம், வாங்க! முத்து பதினொன்று: அவன் எப்போது வருவான் என்று காத்திருந்து, வந்ததும் வராததுமாக உங்கள் உறுத்தல் மூட்டைகளை அவன் முன் அவிழ்த்துக் கொட்டாதீர்கள்! இது, அப்பா அம்மாவிற்குச் சொல்வது போல இருக்கிறது. சரி இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று பார்க்கலாம். அம்மா தனக்கு இருக்கும் வருத்தங்களை, இன்பங்களை, அப்பாவிடம் தானே பகிர்ந்து கொள்ள முடியும்? உண்மை தான் அப்பாவிடம் தான் சொல்ல முடியும். ஆனால், இங்கே வாதம், அப்பா வீட்டிற்கு வந்தவுடன் சொல்லக் கூடாது என்பது தான். எந்த அம்மாவும், அப்பா வந்தவுடன் ஏதாவது அழுது பொலம்பி அவரை எரிச்சல் படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, வேண்டும் என்று செய்வதில்லை. என் வீட்டில் கூட இந்த பிரச்சனை ...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!