இது தான் என்னுடைய இறுதிப் பதிவு, எனக்கு வாழவே பிடிக்கல, இந்த உலகமே என்ன எதிரியாப் பாக்குது, எனக்கு வாழ வழியே இல்ல! நான் அதனால தீக்குளிக்கப் போறேன்!!! "அட என்னடா இது, தீக்குளிக்கப் போறாளா இந்தப் பொண்ணு??"னு நெனைக்கறீங்களா? அட சும்மா சொன்னேன்! ஆனா இத சொல்றப்போ எனக்கு அவ்வளவு வருத்தம் தெரியுமா? :( :( அரசாங்கம் செய்ற ஒரு விஷயம் பிடிக்கலையா? இல்ல, உங்க தலைவருக்கு எதிரா ஏதும் நடக்குதா? அட, தீக்குளிச்சு எதிர்ப்பு தெரிவியுங்கப்பா!!! :( :( ஏன்? ஏன் இப்படி தீக்குளிக்கணும்? நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்கு, அதுக்காக ஏன் நம்மள நாமே வருத்திக்கணும்? புகைப்படம்: google images உதாரணத்துக்கு, பரிட்சையில் தோல்வி, காதல் தோல்வி வியாபாரத்தில நட்டம் கடன் தொல்லை குடும்பப் பிரச்சனை வேளையில் பிரச்சனை! உடனே தற்கொலை! தற்கொலை ! :( இப்படி நிறைய சொல்லலாம். ஏன்? இருக்கும், இப்படி தோல்வியை சந்திக்கும் பொழுதெல்லாம் வேதனையாக இருக்கத்தான் செய்யும். அதற்காக தற்கொலை செய்து கொண்டா? நம்மைச் சார்ந்து இருக்கும் எத்தனை பேர் வேதனை அடைவாங்க? இதையெல்லாம் நாம நினைப்ப...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!