இதற்கு முன்பு எழுதிய அப்பாவுக்குத் தெரியாதா #1 பதிவு படிக்கவில்லையா? அதையும் படித்துவிட்டு இங்கே வந்தால், இன்னும் சிறப்பாக ரசிக்கலாம் :P "ரசிக்கலாம் என்று நினைக்கிறேன்" அப்பா! ஆக மொத்தம் என்னை என் அப்பா தனியாக சைக்கிளில் பள்ளிக்கு இனி அனுப்பவேமாட்டார்கள் என்று தான் நினைத்திருந்தேன். எப்போதும் அப்பாவோடு தான் செல்ல வேண்டும், மற்ற பிள்ளைகள் எல்லாம் அவர்களாகவே சைக்கிளில் வர, நான் மட்டும் அப்பாவோடு மட்டும் தான் செல்ல வேண்டும். இப்படி நினைத்துக் கொண்டு இருந்தேன். பத்தாம் வகுப்பு. ஒரு நாள் ஆசையாக இருக்கவே, "அப்பா, நான் ஸ்கூலுக்கு சைக்கிள்ல போறேன்பா..." இப்படி மெதுவாய் பூனை போல அப்பாவிடம் கேட்டேன். எப்படியும் அப்பா வேண்டாம் என்று தான் சொல்வார் என்பது முன்பே தெரிந்த கதை. இருந்தாலும் ஆசைக்கு ஒரு முறை கேட்டேன். அதே போல, அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்! :( அட, இறுதி வரை நாம் இப்படித் தான் அப்பா பின்னே மட்டும் செல்வோம் போல என்று நினைத்து இரண்டு நாட்கள் சோகமாகவே இருந்தேன். அம்மா, "என்ன உம்முனு இருக்க?", இப்படிக் கேட்க, "ஒன்னும் இல்ல" என்று ...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!