உங்களோடு பேசியதுண்டா? ரோஜா மலர்? உங்களோடு பேசியதுண்டா? அழகாய் சிரித்ததுண்டா? ரோஜா மலர், உங்களைப் பார்த்து அழகாய் சிரித்ததுண்டா? உங்கள் இன்பத்தில், உங்கள் துன்பத்தில், தோள் கொடுத்து, தாங்கியதுண்டா? இல்லையோ? நீங்கள் கொடுத்து வைத்தது, அவ்வளவு தானோ? ஆனால், நான் கொடுத்து வைத்தது, எவ்வளவோ! என் தோட்டத்து, வெள்ளை ரோஜா, இன்று மலர்ந்த, நல்ல ரோஜா. என்னோடு, தினமும் என்னோடு, தித்திப்பாய் பேசிடும், அழகாய் வாசம் சுமந்து, அன்பாய் பார்வை பார்க்கும். பனிக்காற்றில் என் ரோஜாவோடு, பனிக்கூழ் சாப்பிட்டதுண்டு, வெயிலில் என் ரோஜாவோடு, குடையில் சென்றதுண்டு! என்றும் வாடாத, வெள்ளை ரோஜா, என்றும் என் மனம், கொள்ளை கொள்ளும் ரோஜா! மலர்கள் என்றுமே, நமக்கு நல்ல தோழிகளாம்; என் ரோஜா போல, மலர்கள் என்றுமே, நமக்கு நல்ல தோழிகளாம்! இதோ, இன்று பூத்த, என் வெள்ளை ரோஜாவுக்கு, வாழ்த்து சொல்லுங்கள், பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுங்கள்! ## இன்று என் தோழி "ரோஜாவுக்குப்" (அவள் பெயர் ரோஜா, என் தோட்டத...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!