க விதை எழுதுவதற்காகவே இந்தக் "கண்மணி அன்போடு" துவக்கிய நான், சில பத்திகள் எழுதவும் கற்றுக் கொண்டேன். எழுதிய கவிதை எல்லாம், கவிதை என்று சொல்லும்படி இருக்காது, உரைநடையில் கொஞ்சம் எதுகை மோனை சேர்த்த, உடைத்துப் போட்ட வாக்கியங்கள் என்று சொல்லலாம். முதலில் நான் நினைத்ததுண்டு, காதல் கவிதைகள், கதைகள் மட்டும் தான் எழுத முடியும் என்று. யோசித்து யோசித்து படங்களில் பார்த்ததெல்லாம், தெருவில் பார்த்ததெல்லாம், கற்பனையில் எட்டியதை எல்லாம், பிறகு எனக்குத் தோன்றியதெல்லாம் (வயதுப் பெண் ஆயிற்றே) சேர்த்து எழுதிப் பார்த்தேன் காதலோடு கவிதைகளும் கதைகளும், ஒரு கட்டத்துக்கு மேல் இதற்கு மேலும் என்னடா எழுதுவது என்றாகிப் போனது! காதல் காலியாகிப் போனது! நீங்கள் முதலில் இருந்து என் வலைப்பூவைப் பார்த்தால் புரியும், ஒரு கட்டத்துக்கு மேல் என் காதல் வற்றிப் போனதை! சிறுபிள்ளை பாருங்கள், தெரியவில்லை எனக்கு காதலையும் தாண்டி எழுத கோடி இருக்கிறதென்று, அந்தக் கோடியில் சிறு துளியை, காட்டிக் கொடுத்த இந்த ஆண்டிற்கு நன்றி! இ ப்போது படிக்கிறோம், தொழில்நுட்பக் கல்வி (உயிரியல் தொழில்நுட்பம்) நான்கு ஆ...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!