[இது எனது இரண்டாவது தொடர்கதை முயற்சி. எனது முதல் "சிக்ன(க)ல் " தொடர்கதைக்கு அழித்த ஊக்கத்திற்கு நன்றி.] ------------------------------ நெடுநேரமாக அவளது காதோரம் அந்தப் பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது! மிகவும் பிடித்த பாடல், தனிமையில் நேரத்தைப் போக்க அவள் திருப்பித் திருப்பி கேட்கும் பாடல்! இன்றும் தனிமையைக் கொல்ல இரவு ஒரு மணிக்கும் சலிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்படியே தூங்கிப் போனாள். தினமும் கனவுகள் வந்து அவளை வதைத்திடும், ஆனால், அன்று சற்று நிம்மதியாகவே தூக்கம் அமைந்தது. காலையில் வழக்கம் போல ஐந்து மணிக்கு அலாரம் அடித்து எழுந்தாள். வாசல் தெளித்து பால் வாங்கி அடுப்பில் வைத்துவிட்டு, குழந்தையை எழுப்பச் சென்றாள். "முரளி, முரளி.. school -க்கு நேரமாச்சு எந்திரி", ஒரு உழுக்கு உழுக்கி விட்டு, அடுப்பில் வைத்த பாலை இறக்க ஓடினாள்! சற்று விழித்தும் விழிக்காமலும் ஜன்னல் வெளியே பார்த்து, நேரம் ஆகவ...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!