ஓவம்மா! #1 | #2 | #3 | 4 அழுதுட்டே இருந்தவ அப்படியே தூங்கிப் போயிட்டேன், காலைல அஞ்சு மணி இருக்கும், அந்தக் கோயிலுக்குப் பூச செய்ற ஐயர் வந்து தான் என்ன எழுப்புனாரு. ஒரே குளிர், பனி, அது எழுந்தப்றம் தான் எனக்கு உணர்ந்துச்சு. "நீ யாரு மா? இங்க இப்டி வந்து படுத்திருக்க?", அந்த ஐயர் கேக்க, என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சேன்! சாலை! அவரு, "போ போ, இங்க எல்லாம் தூங்கக் கூடாது வீட்டுக்குப் போ" னு சொல்லிட்டாரு. எந்திச்சி நடந்தேன், எங்க போறதுன்னு யோசிச்சிட்டே நடந்தேன். ரொம்பக் குளிரா இருந்தது. இந்நேரம் எங்கக்கா வீட்டுக்கு வந்திருக்கும், ஆனா வீட்டுக்கு என்னால போக முடியாது. பசிக்க ஆரம்பிச்சுடுச்சு, என்ன செய்யனு தெரியல, இந்நேரம் வேலைக்குப் போயிருந்தா சாப்டிருப்பேன், பசில நடக்க முடியல, நடந்துக்கிட்டே இருந்தேன் ஆனா நிக்காமா, எங்க எங்கயாச்சும் நின்னா, யாராவது, "யாரு மா நீ"னு கேள்வி கேப்பாங்கலே னு நெனப்பு, அந்த நெனப்பு தான் என்னத் தொரத்தி நடக்க வச்சது! ஒரு கட்டத்துல நான் மதியம் நெருங்க நெருங்க, சக்தி எல்லாம் எழந்து, மயங்கி விழுந்திருந்தேன். முழிச்ச...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!